Tuesday, March 26, 2013

முருங்கைக்காய் சாம்பார்(அரைத்து விட்டது) / Drumstick Sambar


தேவையான பொருட்கள்;
முருங்கைக்காய் - 2 பெரியது
பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.

தாளிக்க :
நல்லெண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு

அரைக்க தேவையான பொருட்கள்;
மிளகாய் வற்றல் - 4 -6
கடலை பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
முழு மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
இவற்றை தனி த்தனியாக் லேசாக சிவற  வறுத்து எடுக்கவும்.
அத்துடன் 2 - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பருப்பை ஊற விட்டு மஞ்சப்பொடி தேவைக்கு தண்ணீர் சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வர விட்டு வேக வைத்து  தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேகவைக்கவும்.


 காய் வெந்த பின்பு அரைத்த விழுது, புளித்தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதி வரட்டும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும்.
 ஒரு தாளிப்பு கரண்டியில் நல்லெண்ணெய் கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி.

சாம்பார் பொடி போட்டு செய்வதற்கும் இப்படி வறுத்து அரைத்து விட்டு செய்வதற்கும்  நிறைய வித்தியாசம் சுவையில் இருக்கும்.இதில் நான் வெங்காயம் தக்காளி,பூண்டு சேர்க்கவில்லை.நீங்களும் செய்து பாருங்க,சாதம்,இட்லி,தோசைக்கு நன்றாக இருக்கும்.காரம்,புளி அவரவர் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்.
Sending this to Priya's CWS -DALS.

Gayathri's Walk Through Memory Lane @ Hema's Adugemane.

16 comments:

இளமதி said...

ஓ... அருமையான சாம்பார்...:)
அதுவும் இப்படி அரைத்துவிட்டு வைப்தென்றால் சுவை இரண்டு மடங்கு!

அருமை. நல்ல குறிப்பு. பகிர்வுக்கு நன்றி ஆசியா....:)

அமைதிச்சாரல் said...

வித்தியாசமான ருசி. பகிர்விற்கு நன்றி ஆசியா.

Nithu Bala said...

Yum! My favourite too..

வை.கோபாலகிருஷ்ணன் said...

கமகமவென்று வாசனையாக உள்ளது, அரைத்து விட்ட முருங்கைக்காய் சாம்பார். ;)

பாராட்டுக்கள்.

Priya Suresh said...

Very flavourful sambhar akka, naan appadiye saapiduven.

Vimitha Anand said...

Lovely sambar variety.
Win flipkart vouchers from 27coupons.com. Enter now
Come participate and win healthy Hudson canola oil hampers

திண்டுக்கல் தனபாலன் said...

சாம்பார் அருமை...

அதுவும் அரைத்து விட்டால் எப்போதும் அருமை...

S.Menaga said...

எல்லாரும் சாம்பார் பதிவா போட்டு அசத்துறீங்க...நாளைக்கு எங்க வீட்ல சாம்பார்தான்.

Mahi said...

Superb sambar..those fresh drumsticks are attracting me very ugh! :)

priyasaki said...

பிரயோசனமான ஒரு குறிப்பு. அரைத்துவிட்ட சாம்பாருக்கு இணையேதும் இல்லை. பொடியைவிட இது சூப்பர் .பகிர்வுக்கு நன்றி ஆசியா.

Savitha Ganesan said...

Araithu vitta sambhar eppavume Manama irukkum.super .

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சாம்பார்.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

மாதேவி said...

அரைத்துவிட்ட சாம்பார் சுவையாக இருக்கின்றது.

Hemavathi Murari said...

You have won a prize of subscription from tarla dhall from walk through memory lane for this post. Kindly get in touch with Gayathri at the earliest.

Congratulations Asiya.

Thanks & REgards,

Hema.
Roundup

VijiParthiban said...

superb sambar akka....

rajasinghac883@gmail.com said...

so nice nature and safe and old type but gold type thanks to you from palani rajasingh