Tuesday, March 5, 2013

ஈசி வெஜ் பிட்ஸா / Easy Veg Pizza

பிட்ஸா ப்ரெட்டும் தேவையான காய்கறிகள், மொசரெல்லா சீஸும், இருந்தால் வீட்டிலேயே ஈசியாக பிட்ஸா  நம்ம டேஸ்ட்டுக்கு  செய்து அசத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் ரெடிமேட் பிட்ஸா ப்ரெட்  (ஃப்ரோசன்) - 2
ஸ்ரெட்டட் மொசரெல்லா சீஸ் - 12 - 16 டேபிள்ஸ்பூன்
தேவைக்கு காய்கறிகள் -ஒன்னரை -  2 கப் ( வெங்காயம்,கொடைமிளகாய், தக்காளி,காளான், ஆலிவ்ஸ் கலவை)
டொமட்டோ சாஸ் - 6 - 8 டீஸ்பூன் (விருப்பப்பட்டால் பிட்ஸா சாஸ்)
உப்பு ,மிளகுத்தூள் - சிறிது.

தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.

 பிட்ஸா  ப்ரெட்டில் தாராளமாக தக்காளி சாஸ் தடவிக் கொள்ளவும்.ப்ரெட்டை டீஃப்ராஸ்ட் செய்யக் கூடாது.
 முதல் லேயர் டொமட்டோ  சாஸ் தடவி ரெடியாகிவிட்டது.
 இரண்டாவது லேயராக  மொசரெல்லா சீஸ் தேவைக்கு ப்ரெட் மீது தூவிக் கொள்ளவும்.
 மூன்றாவது லேயராக அடுத்து காய்கறிக் கலவை வைக்கவும்.
 நான்காவது லேயராக மீண்டும் மொசரெல்லா சீஸ் வைக்கவும்.லேசாக உப்பு மிளகுத்தூள் தூவவும் ( விரும்பினால் சில்லி ப்லேக்ஸ் கூட சேர்க்கலாம்)
 பிட்ஸா பேக் செய்ய ரெடி செய்தாச்சு.ஓவனை 200 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
 ரெடி செய்த பிட்ஸாவை நான்ஸ்டிக் பேக்கிங் ட்ரேயில் லேசாக எண்ணெய் தடவி வைத்து, உள்ளே வைக்கவும்.

 10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
 சுவையாக ஈசியாக வெஜ் பிட்ஸா ரெடியாகிவிடும்.


 வாவ்! செமையாக இருந்துச்சு.
 சீஸ் அளவு  உங்கள் விருப்பம் தான்.இது மாதிரி சீஸ் ,காய்கறி கலவை இன்னொரு லேயர் வைத்து ஐந்து லேய்ராகவும் செய்யலாம்.

விருப்பம் போல் நான்காகவோ அல்லது ஆறாகவோ துண்டு செய்து பரிமாறவும்.பிட்ஸா சாஸ் கூட தேவையில்லை, வெறும் டொமட்டோ சாஸ் உபயோகித்து செய்தாலே சூப்பராக இருக்கும்.செய்து பாருங்க.
பிட்ஸா ஷாப்பில் இரண்டு பிட்ஸா வாங்கும் செலவில் வீட்டில் 8 பிட்ஸா செய்து விடலாம். அதுவும் ஆஃபர் சமயம் சீஸ் வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் மலிவாக செய்து விடலாம்.

Sending this recipe to
Julie's -Flavors of Cuisine -@ Priya's Versatile recipes

Nithu's Healthy food for Healthy Kids - Italian Dishes @ Nivedhanam


20 comments:

Meena Selvakumaran said...

superb.ore doubt,why we shld not defrost ?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பீஸா அழகா செய்திருக்கீங்க அருமை. டேஸ்ட் சூப்பரா இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன்.

angelin said...

டேஸ்டி !!! யம்மி pizza ..ஆமாம் ஆசியா வீட்டிலேயே மிக குறைந்த செலவில் அருமையாக செய்யலாம் .என் மகள் மிகவும் விரும்புவாள் ,அவதான் அலங்கரிப்பு எல்லாம் செய்வா பீட்சாவுக்கு :))

Asiya Omar said...

மீனா வருகைக்கு நன்றி,பிட்சா ப்ரெட்டை டீஃப்ராஸ்ட் செய்து விட்டு நாம் எல்லாம் செட் செய்வதற்குள் அது பிய்ந்து விடும்.அதற்குத்தான் ஃப்ரீஸரில் இருந்து எடுத்து அப்படியே பிரித்து எடுத்து ஃபில்லிங்ஸ் வைக்கலாம்.

Asiya Omar said...

ஸ்டார்ஜன் ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க,வாங்க கருத்திற்கு நன்றி.

ஆமாம்,ஏஞ்சலின் என் வீட்டில் இதுவரை நான் பிட்ஸா செய்ததேயில்லை,
என் மகனும் மகளும் சேர்ந்து தான் செய்வாங்க,இப்ப தான் நான் செய்து கொடுத்தேன்.அவங்க செய்கிற விதம் பிட்ஸா ஹட்டே தோற்றுவிடும்.இது சும்மா பேசிக்கா செய்து காட்டினேன்.எப்பவாவது இப்படி செய்து கொடுத்தால் தானே அவர்களுக்கும் சந்தோஷம்.

திண்டுக்கல் தனபாலன் said...

..ம்... செய்து பார்ப்போம்... நன்றி....

Sangeetha Nambi said...

Super dooper pizza...
http://recipe-excavator.blogspot.com

priyasaki said...

ம்.பார்க்க நல்லா இருக்கு ஆசியா. நாங்களும் வீட்டிலே செய்கிறதுதான் எங்க இஷ்டத்துக்கு ingredientsசேர்த்துக்கலாம். நிறைய வெரைடியா செய்யலாம். ஈசி&சிம்பிள். நல்ல பகிர்வு.

Vimitha Anand said...

Cheesy n yummy pizza

ஸாதிகா said...

உடனே செய்து பார்த்து விடவேண்டும்.பார்க்கவே யம்மியாக உள்ளது.

கோமதி அரசு said...

ஈசி வெஜ் பிட்ஸா அருமை.

Kalpana Sareesh said...

too good..

Priya said...

Pizza romba azhaga irruku akka, appadiye va va 'nu kupiduthu;

S.Menaga said...

பிட்ஸா என்னை வா வா ந்னு கூப்பிடுது,ஆசையை கிளப்பிட்டீங்க,அருமையா இருக்கு...

Mahi said...

சூப்பர் பீட்ஸா!கலக்குங்கோ!

ஸ்பைஸி சில்லி-யில் பரிசு வென்றமைக்கு என் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் ஆசியாக்கா! இன்னும் பல வெற்றிகள் பெற என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

படங்களும் குறிப்பும் அருமை ஆசியா.

/Sending this recipe to Passion on Plate @ En - Iniyaillam . /

வாழ்த்துகள்.

Aruna Manikandan said...

parkave supera irruku :)

athira said...

ஈசியும் சூப்பராகவும் இருக்கும்.... நானும் எப்போதாவது செய்வதுண்டு.

கோவை2தில்லி said...

ஈசி பிட்ஸா செய்முறை எளிமையாக இருந்தது...

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு.