Wednesday, March 20, 2013

கத்திரிக்காய் ரோஸ்ட் / சாப்ஸ் / Egg Plant / Brinjal Roast /Chops


தேவையான பொருட்கள்;
கத்திரிக்காய் - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 அரைத்து விரவி வைக்க:
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - அரை டீஸ்பூன் அல்லது சீரகம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி -சிறிய துண்டு
பொட்டுக்கடலை - ஒன்னரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.
 எல்லாப் பொருட்களையும் மிக்சியில் முதலில் நன்றாக திரித்து விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.
 கத்திரிக்காயை கழுவி காம்பு நீக்கி இப்படி வட்டமாக கட் செய்து கொள்ளவும்.

 அரைத்த விழுதை உப்பு சரி பார்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து கத்திரிக்காயில் விரவி வைக்கவும்.ஒரு மணி நேரம் ஊறட்டும்.
 ஒரு மணி நேரம் ஆன பின்பு இப்படி ஊறி தண்ணீர் விட ஆரம்பிக்கும்.
 நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கத்திரிக்காய் தூண்டுகளை போட்டு மீடியம் ப்லேமில் பொரிக்கவும்.
 லேசாக சிவற ஆரம்பிக்கவும் திருப்பி போடவும்.

 ஒரு பக்கம் சிவந்தவுடன் மறுபக்கமும் சிவந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.அடுப்பிலேயே சிறிது நேரம் இருக்கட்டும்.
எண்ணெய் குடிக்காது,பொட்டுக்கடலை சேர்ப்பதால் கத்திரிக்காய் ரோஸ்ட் ஒரு கோட்டிங்கோடு சாஃப்டாக டேஸ்டாக இருக்கும்.
சுவையான கத்திரிக்காய் ரோஸ்ட்/ /சாப்ஸ்  ரெடி.

எல்லாவகை சாதத்திற்கும் சூப்பர் காம்பினேஷன். பிரட்டி சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு,கறி,குழம்போடு அல்லது வெரைட்டி ரைஸ் உடன் கூட சூப்பராக இருக்கும்.பொறுமையாக செய்ய வேண்டும்,ஆனால் ருசி அபாரமாக இருக்கும்.அப்படியே எடுத்து எடுத்து சாப்பிடத் தூண்டும்.ஃப்ரியாக இருக்கும் பொழுது இப்படி வித்தியாசமாக செய்து அசத்துங்க..


19 comments:

Sangeetha Nambi said...

Love this ever with Sambar Rice !
http://recipe-excavator.blogspot.com

Mahi said...

சால்ட் லேக் சிட்டியில இந்த பச்சைக்கத்தரி கிடைக்கும், இங்கே கிடைக்கறதில்லை. சூப்பர் ரோஸ்ட் ஆசியாக்கா!

அமைதிச்சாரல் said...

அட.. அசத்தலா இருக்கே. விரல் பருமனில் நீளமாகக் கிடைக்கும் கத்தரிக்காயை வட்டவட்டமா நறுக்கி இது வரை எண்ணெய்க்கத்தரிக்காய்தான் செய்ததுண்டு. இது ரொம்பவே புதுசா இருக்கு. செஞ்சுட்டுச் சொல்றேன் :-)

உங்க முள்ளங்கி பருப்பு எங்க வீட்ல சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிருச்சு. ஊட்டை விட்டு ஒதுக்கி வெச்சிருந்த முள்ளங்கிய இப்ப நைசா ஊட்டுக்குள்ள கொண்டாந்துட்டேன் :-))

Jaleela Kamal said...

பச்சை கத்திரிககா பார்க்க வே சூப்பர இருக்கு இந்த வெயில்லுக்க்கு தயிர்சாதத்துடன் சாப்பிடனும் போல இருக்கு

இளமதி said...

அட... அருமையான கத்தரிக்காய் ரோஸ்ட். பார்க்கவே இப்பவே செய்யத்தோன்றுகிறது.
ஆனா இந்தக்கத்தரிக்காய் இப்ப இங்கை இல்லையே....அவ்வ்வ்... ஆனாலும் சாதரண கத்தரிக்காய் இருக்கு அதில செய்து பார்க்கிறதுதான்...:)

அருமை உங்க குறிப்பு. பகிர்வுக்கு நன்றி ஆசியா!

இளமதி said...

அட... அருமையான கத்தரிக்காய் ரோஸ்ட். பார்க்கவே இப்பவே செய்யத்தோன்றுகிறது.
ஆனா இந்தக் கத்தரிக்காய் இப்ப இங்கை இல்லையே....அவ்வ்வ்... ஆனாலும் சாதரண கத்தரிக்காய் இருக்கு அதில செய்து பார்க்கிறதுதான்...:)

அருமை உங்க குறிப்பு. பகிர்வுக்கு நன்றி ஆசியா!

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் செய்முறை அருமை...

நன்றி சகோதரி...

ராதா ராணி said...

எல்லா வகை சாதத்துக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும் போல இருக்கே.. எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு இந்த ரோஸ்ட். இனி அடிக்கடி செய்வேன் ஆசியா..:)

VijiParthiban said...

சூப்பர் ரோஸ்ட் ஆசியாக்கா!

Kalpana Sareesh said...

Sooper roast.. I will make tis one with my fav veggie..

கோமதி அரசு said...

கத்திரிக்காய் ரோஸ்ட் அருமையாக இருக்கிறது. செய்து பார்த்துவிடுகிறேன்.

Priya Suresh said...

Fantastic brinjal chops..Superaa irruku akka.

vanathy said...

Super recipe.

Vimitha Anand said...

Thayir saadathuku superaa irukkum
Win flipkart vouchers from 27coupons.com. Enter now

Come participate and Win Hudson Canola oil gift hampers.

priyasaki said...

சூப்பரா இருக்கு. உங்க படங்கள் நல்ல தெளிவு. பார்க்க செய்ய்வேண்டும் போலஆவலைதூண்டுகிறது.செய்துபார்க்கிறேன்(இக்கத்தரிக்கா சம்மரில்தான்
இங்கு கிடைக்கும்.) வித்தியாசமான குறிப்பு தருகிறீங்க. நன்றி ஆசியா.

Malar Gandhi said...

Whooo, that's beautiful way to present kathirikai varuval...nice one.

http://kitchentantras.com/mor-rasam-thanjavur-special/

http://kitchentantras.com/the-zodiac-diet-menu-ideas/

சே. குமார் said...

சுலபமான செய்முறை...
படங்களுடன் விளக்கம் அருமை...

அக்கா...
பக்.. பக்... பயண அனுபவ தொடர் பதிவு நாளை எப்படியும் பகிர்கிறேன்....

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளது ஆசியா.அதிலும் கத்தரிக்காயை வட்டவட்டமாக நறுக்கி அருமையாக சமைத்து இருக்கீங்க.

VijiParthiban said...

நான் கத்தரிக்காய் ரோஸ்ட் செய்து விட்டேன் அக்கா .... மிகவும் சுவையாக இருந்தது அக்கா.... Thank you .