Thursday, March 14, 2013

பச்சைப் பயறு உருளைக்கிழங்கு கறி / Green gram Potato Curry

 தேவையான பொருட்கள்;
வேக வைத்த முழு பாசிப்பயறு - ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் - 1
இஞ்சி,பூண்டு பொடியாக நறுக்கியது தலா ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
தக்காளி - நறுக்கியது 1
சர்க்கரை - 2 பின்ச்
உப்பு - தேவைக்கு.

தாளிக்க :
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 இணுக்கு.

 பாசிப்பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைத்து, வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.வேகவைத்த உருளைக்கிழங்கு நறுக்கி வைக்கவும்.இஞ்சி பூண்டு,பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்,கருவேப்பிலை தாளிக்கவும்.நறுக்கிய,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.வதக்கவும்.
 உடன் தக்காளி உப்பு.சிறிது சர்க்கரை  சேர்த்து நன்கு வதக்கவும்.
 தக்காளி வதங்கிய பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.

 வேகவைத்த பச்சைப்பயறு சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.
 ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சேர வேகட்டும்.
 கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.

 சுவையான பச்சைப்பயறு உருளைக்கிழங்கு கறி ரெடி.

 உங்களுக்கு ஸ்டூ மாதிரி வேண்டுமென்றால் தேவைக்கு தேங்காய்ப்பால் சேர்த்து நுரை வரவும் அடுப்பை அணைக்கவும்.இது குறிப்பாக ஆப்பம்,தோசைக்கு சூப்பராக இருக்கும்.

14 comments:

angelin said...

ஆசியா நன்றி குறிப்புக்கு ..இப்பவே செய்ய போறேன் ,,எப்படின்னு கேக்கறீங்களா :))
இப்பதான் உங்க ரெசிப்பி பாசிபருப்பு முன்பு பிட்டுவுக்கு செய்தீங்களே அதற்கு பயறை வேக வைத்தேன்
அதற்குள் இந்த ரெசிப்பி கிடைச்சு ..தேங்க்ஸ்

Mahi said...

Nice n protein rich curry!

Priya Suresh said...

Love and very healthy combo akka..excellent side dish for rotis.

திண்டுக்கல் தனபாலன் said...

புதுசு... செய்ய சொல்ல வேண்டும்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சத்தான முத்தான பகிர்வு. பாராட்டுக்கள்.

Sangeetha Nambi said...

Super delicious and healthy curry...
http://recipe-excavator.blogspot.com

கோமதி அரசு said...

மிக நன்றாக இருக்கிறது. செய்து பார்த்து விடுகிறேன் ஆசியா நன்றி.

Vimitha Anand said...

Healthy curry
Win flipkart e-vouchers from 27coupons. Join now

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் குறிப்பு அருமை, ஆசியா.

அமைதிச்சாரல் said...

சத்தான குறிப்பு ஆசியா..

இதுக்கு எங்கூர்ல உசல்ன்னு பேரு. கூடுதலாக் கொஞ்சம் கரம் மசாலாவும் ஒரு ஸ்பூன் துருவின தேங்காயும் சேர்த்தா போதும்.

S.Menaga said...

சுவையான கறி,சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமை...

இளமதி said...

ஆசியா.. நல்ல ருசியான குறிப்பு. செய்து பார்த்தேன். அருமை. அதனால்தான் இங்கு கருத்துகூறத் தாமதம்.

இதையே வேறு பருப்புவகைகளுடனும் செய்து பார்க்கவுள்ளேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி ஆசியா!

கோவை2தில்லி said...

சத்துள்ள குறிப்பு. நான் இதனுடன் வெங்காயமும் வதக்கிக் கொள்வேன். கொஞ்சம் கரம் மசாலாவும் சேர்ப்பேன். உருளை சேர்த்ததில்லை. சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.

ஸ்டூ மாதிரி செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.

மாதேவி said...

சுவையான உணவு. இதேபோல கடலை கலந்தும் செய்வோம்.