Monday, March 18, 2013

கூனி இறால் கொழுக்கட்டை / Kuuni Iraal Kozhukattai / Shrimp Kozhukattai

 நாங்கள் தூத்துக்குடியில் இருந்த சமயம் ஃப்ரெஷாக இந்த கூனி இறால் கிடைக்கும். தேங்காய்ப்பூ மாதிரி இனிப்பாக,பார்க்க  பால் நிறத்தில்  மணி மணியாக அழகாக இருக்கும்.இப்ப கிடைக்குதான்னு தெரியலை,அதனை முருங்கைக்கீரையோடு சமைத்திருக்கிறேன், கொழுக்கட்டையுடன் சேர்த்தும் செய்து பார்த்தேன்.தீடீரென்று அந்த நினைவு வந்தது.
என்னிடம் காய்ந்த கூனி இறால் இருந்தது. செய்து பார்த்தேன்,மணமாக அருமையாக இருந்தது. இந்த குறிப்பு செய்து ஃபைலில் இருந்தது.

ஃபேஸ் புக்கில் தற்செயலாக  Saute,fry n bake Cooking contest - பற்றி இந்த மார்ச் நான்காம் தேதி தெரிய வந்தது. மொத்தமே ஒரு வாரம் தான் போட்டிக்கான நாட்களே கொடுத்து இருந்தாங்க,ஒன்பதாம் தேதி கடைசி நாள், என்னிடம் மூன்று ரெசிப்பிக்கள் ரெடியாக இருந்தது.அந்த மூன்றையும் சும்மா பொழுது போக்காக அனுப்பி வைத்தேன். போட்டி பெரிய லெவலில் இருக்கும்,எனக்கெல்லாம் எங்கே பரிசு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் ஆச்சரியம், என்னோட மூன்று ரெசிப்பிக்களும் தேர்வாகி எனக்கு இரண்டாம் பரிசு அறிவித்திருந்தார்கள்.எல்லாப் புகழும் இறைவனுக்கே.
போட்டியை நடத்திய திருமதி ஹஸீனா செய்யது (www.sautefrynbake.com)அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.தேர்வு செய்த செஃப் திரு.பாபு நடராஜன் ,ஹெட் செஃப்,ஹோட்டல் ராதா ரீஜெண்ட் ,சென்னை அவர்களுக்கும் மிக்க நன்றி.
மற்ற இரண்டு ரெசிப்பிக்களான பைன் ஆப்பிள் சிக்கன் கபாப், சிக்கன் &மஷ்ரூம் இன் கேஸூனட் கிரேவி அதனையும் விரைவில் பகிர்கிறேன்..


CHEFS WRITE UP ; 
All the three dishes are very innovative . Using pineapple with chicken for kabab , mushrooms along with chicken in cashewnut gravy and the KOONI eraal kozhukattai all seem very delicious . The step by step pictures were an added bonus to select these dishes .
Thanks a lot Chef.

இனி குறிப்பிற்குச் செல்வோம்.
தேவையான பொருட்கள் ;

வறுத்த சிவப்பரிசி மாவு ( புட்டு மாவு) - 200கிராம்
காய்ந்த கூனி இறால் - 50 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 100கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
நறுக்கிய கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
காய்ந்த கூனி இறாலை லேசாக வறுத்து மண் போக அலசி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காயவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்க்கவும்,வதக்கவும்,தக்காளி,நறுக்கிய பச்சை மிளகாய் மல்லி,கருவேப்பிலைசிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
வதங்கியதும், மஞ்சள்,மிள்காய்த்தூள் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்,நன்கு கொதிக்கட்டும்.
ஒரு பவுலில் புட்டு மாவு எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் தேங்காய்த்துருவல் கலந்து கொள்ளவும்.
கொதி வந்த கூனி இறால் மசாலை சேர்த்து கிளறவும்.உப்பு சரி பார்க்கவும்.
கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் துணி விரித்து பிடித்த
கூனி இறால் கொழுக்கட்டைகளை 10- 15 நிமிடம் அவித்து எடுக்கவும்.
வெந்த பின்பு எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.சும்மா சாப்பிட்டாலே மணமாகஇருக்கும்.
தால்ச்சாவுடன் சாப்பிட்டால் செமையாக இருக்கும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஃபன் வகைகளுள் இதுவும் ஒன்று.
இதனை ஃப்ரெஷ் கூனி இறால் உபயோகித்தும் செய்யலாம்.

கூனி இறால் கிடைக்கும் சமயம் இந்த டிபனை செய்து நான் அசத்துவதுண்டு.

 

கூனி இறால் கொழுகட்டை ரெடி.தேங்காய் சட்னி, தால்ச்சாவுடன் பரிமாறவும்.உங்களுக்கு கூனி இறால் பிடித்தால் நீங்களும் செய்து பாருங்க.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய சமையல் குறிப்பு... நன்றி...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

மிக்க மகிழ்ச்சி சகோ.வாழ்த்திய உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு மிக்க நன்றி சகோ.

S.Menaga said...

வாழ்த்துக்கள் அக்கா!! புது ரெசிபியா இருக்கு...அம்மாவுக்கு இந்த இறால் ரொம்ப பிடிக்கும்,அவர்களிடம் சொல்கிறேன்..

Priya Suresh said...

Congrats Akka,u truly deserve it.. Intha kozhukattai superaa irruku akka, nalla tiffin item.

ஸாதிகா said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஆசிய.சற்று முன் தொலைபேசிய போது கூட இது பற்றி சொல்லாமல் இருந்த உங்கள் தன்னடக்கத்தை பார்த்து வியக்கிறேன்.இதே பல பல பரிசுகள் நீங்கள் பெற்று உங்கள் திறமைகள் வெளிப்பட வேண்டும் என்பது என் அவா ஆசியா.

கூனி கொழுக்கட்டை..த்த்சூசூ...நாவூறசெய்து விட்டீர்கள்.

Asiya Omar said...

மேனகா வாழ்த்திற்கும் உங்கள் ஆர்வத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ப்ரியா சுரேஷ் மிக்க மகிழ்ச்சி.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

நன்றி ஸாதிகா.பொழுதுபோக்காக சமைப்பதை ஏதோ போஸ்ட் செய்கிறேன்..வாழ்த்திற்கு மகிழ்ச்சி ஸாதிகா.

Meena Selvakumaran said...

Congrats.Wishing you many more to come.

Sumi said...

Amman used to make a podi withi this ,tastes divine with idli..ithai enga Orula 'senator Kuni' nu soluvanga. Very nice recipe

Asiya Omar said...

மீனா மிக்க நன்றி.மகிழ்ச்சி.
சுமி மிக்க நன்றி .மகிழ்ச்சி.

Mahi said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

மற்றபடி கூனி இறால் எல்லாம் என்ன ஏதுன்னே எனக்குத் தெரியாது..மீ த எஸ்கேப்பூ! ;)

Jaleela Kamal said...

மிக அருமை ஆசியா.

வாழ்த்துக்கள் மேன் மேலும் பல பரிசுகள் பெற்றிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

கொழுக்கட்டை எனக்கு ரொம்ப பிடிச்ச அயிட்டம்..