Monday, April 8, 2013

அம்ரிஷ்டரி ஃபிஷ் ஃப்ரை / Amristari Fish Fry

 தேவையான பொருட்கள்;
மீனில் ஊற வைக்க:
சுத்தம் செய்த மீன் துண்டுகள் - அரைக்கிலோ
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
லைம் ஜூஸ் - 2 -3 டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

அடுத்து மீனுடன் கலக்க :
கடலை மாவு -3  டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சிறிய முட்டை - 1
கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -அரைடீஸ்பூன்
ஓமம் பொடித்தது - 2 பின்ச்
உப்பு - சிறிது

பொரிக்க :
எண்ணெய் - தேவைக்கு.
 சுத்தம் செய்து நன்கு அலசி மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் அலசி தண்ணீர் வடிகட்டி மீன் துண்டுகளை எடுக்கவும்.மீன் துண்டுகளோடு மேற்சொன்ன பொருட்களை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறவைத்த மீனுடன் கலக்க பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.
 கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
 பின்பு அனைத்து மீன் துண்டுகளையும் சேர்த்து விரவவும்.நான் ஆறு பெரிய மீன் துண்டுகளை இந்த கலவையில் கலந்து எடுத்தேன்.மாவு கலவை மெல்லிய கோட்டிங்காக இருக்க வேண்டும்.மூள் அதிகமில்லாத மீனாக இருந்தால் நல்லது நடுமுள் மட்டும் இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.அல்லது போன்லெஸ் ஃபிஷ் இருந்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
 ஊறவைத்து பின்பு ரெடி செய்த கலவையில் விரவிய  மீனை சூடான எண்ணெயில் போட்டு மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.பொரிக்கும் பொழுது எண்ணெய் அதிகம் குடிக்காது.மீனில் சேர்த்து கலந்த பொருட்கள் சூப்பர் சுவையைத் தரும்.


 பக்குவமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.

சுவையான அம்ரிஷ்டரி ஃபிஷ் ஃப்ரை ரெடி.

நறுக்கிய வெங்காயம் எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறவும்.
பிரியாணி,ப்லைன் ரைஸ்,ஃப்ரைட் ரைஸ்,வெரைட்டி ரைஸ் உடன் பரிமாறலாம்.பார்ட்டியில் ஸ்டார்டராகவும் பரிமாறலாம்.சில்லி பவுடர்,எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மீனில் விரவ உங்கள் ருசிக்கு தகுந்த படி சேர்த்துக் கொள்ளலாம்.காரம் அதிகம் விரும்புவோர் சில்லி பவுடர் அளவை கூட்டிக் கொள்ளலாம்.


Sending this Healthy recipe to Vimitha's Hearty and Healthy - Hudson Canola Oil Giveaway.

14 comments:

அமைதிச்சாரல் said...

பார்க்கவே நல்லாருக்கு ஆசியா..

அமைதிச்சாரல் said...

ஒரு சந்தேகம்.. இதை அவனில் பேக் செய்யலாமா?..

ஸாதிகா said...

பிஷ் பிரைகு வித்தியாசமான மசாலாக்கள் சேர்த்து சூப்பராக செய்து காட்டி இருக்கீங்கப்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

எங்க ஊர் மிளகாய்த்தூள் வைத்தே செய்து பார்ப்போம்... நன்றி...

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி அமைதிச்சாரல்,நான் shallow fry தான் செய்தேன்,அவனில் இந்த மசாலா தடவி பேக் செய்து பார்த்ததில்லை.இந்த மீன் ஃப்ரை வெளியில் கிரிஸ்பாகவும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.

கருத்திற்கு நன்றி ஸாதிகா.

தனபாலன் சார் நிறத்திற்காக அந்த மிளகாய்த்தூள்.நம்ம ஊர் தூள் தான் சுள்ளென்று இருக்கும்.செய்து பாருங்க..

Sangeetha Nambi said...

super fried fish....
http://recipe-excavator.blogspot.com

Shama Nagarajan said...

delicious and inviting

VijiParthiban said...

பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு அருமை ஆசியா அக்கா .....

S.Menaga said...

aahaa romba vithiyasama supera irukku

Vimitha Anand said...

Paakave supera irukku. saapta???
Come participate and win healthy Hudson canola oil hampers

சே. குமார் said...

படிக்கும் போது நாவில் எச்சில் ஊறியது என்றால் படங்களில் பொரித்த மீனைப் பார்த்ததும் பசிக்க ஆரம்பித்துவிட்டது அக்கா.

Priya Suresh said...

Sema crispy dish akka, mouthwatering here.

Divya Pramil said...

Aha arumai akka :) Looks super delicious :) Enaku parcel, unga vetuku kandipa orunaal varanum, sema nv treats :)

Mano Saminathan said...

மீன் வறுவல் அசத்தலாக இருக்கிற‌து ஆசியா!