Saturday, April 13, 2013

பால் கொழுக்கட்டையுடன் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பால் கொழுக்கட்டை செய்து பார்க்க வேண்டும் என்று என் நீண்ட நாள் ஆசை.South Vs North Challenge  Event - டில் Tamilsasi Kitchen செய்து காட்டியிருந்தாங்க.அதன் பின்பு நம்ம மனோ அக்கா அதி ருசியான முத்து என்று இந்த பால் கொழுக்கட்டை பற்றி பகிர்ந்திருந்தாங்க.இருவருக்கும் என் மனமார்ந்த் நன்றி.
சரி என்று இந்த குறிப்பை தமிழ் புத்தாண்டிற்கு செய்து பார்த்து விடலாம் என்று முயற்சித்தது  தான்  இந்த வெல்லப் பாகு பால் கொழுக்கட்டை.

 தேவையான பொருட்கள்;
பச்சரிசி  மாவு - அரை கப்
தண்ணீர் - 3 கப்
பொடித்த வெல்லம் - 200 கிராம்
ஏலப் பொடி - அரை டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 2 டேபிள்ஸ்பூன் அல்லது நெய்யில் வறுத்த தேங்காய் பொடியாக நறுக்கியது கொஞ்சம் .
உப்பு - சிறிது தேவைக்கு.

 ஒரு பவுலில் மாவை எடுத்துக் கொண்டு சிறிது உப்புடன் தேவைக்கு சிறிதாக தண்ணீர் சேர்த்து பக்குவமாக குழைத்துக் கொள்ளவும்.

 பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து இப்படி கையில் வைத்து திரட்டிக் கொள்ளவும்.அதனை ஒரு சுத்தமான காட்டன் வெள்ளைத்துணி அல்லது பேப்பர் டவலில் போட்டு ஆற விடவும்.
 வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.
 ரெடி செய்த மாவு கொழுக்கட்டைகளை ஒரு ப்லேட்டில் எடுத்துக் கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில்  தண்ணீரை கொதிக்க வைக்கவும்.உருட்டிய கொழுக்கட்டைகளை கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் கொஞ்சம் கொஞ்சமாகப் போடவும்.

 வெந்த கொழுக்கட்டைகள் மேலே மிதந்து வரும்.அப்படியே முழுவதையும் போடவும்.
முழுவதும் வெந்த பின்பு ஒரு அரை கப் தண்ணீரை வடித்து எடுக்கவும்.

 பொடித்த வெல்லம்,ஏலப்பொடி சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிவந்து வெல்லம் நன்கு கரைந்து வரும்.துருவிய தேங்காயும் சேர்க்கவும்.


 சிறிது நேரம் கழித்து இறுகி இப்படி காணப்படும் அடுப்பை அணைக்கவும்.ஆறிய பின்பு பரிமாறவும்.
சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
எங்க வீட்டில் ருசி பார்த்து விட்டு இன்னும் வெல்லப்பாகு பிரட்டியது போல் வரவேண்டும் என்று சொன்னாங்க. நீங்க விரும்பினால் பக்குவமாக செய்து பாருங்க.ஆனால் ஊற ஊற சுவை அருமை.

அன்பான வலையுலக நட்புள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Sending this to 

  Viji's Soul Food Show and Give Away.






20 comments:

கோமதி அரசு said...

பால் கொழுக்கட்டையுடன் அருமையான புத்தாண்டு வாழ்த்து.
கொழுக்கட்டை செய்முறை படங்கள் எல்லாம் அழகு.
ஆசியா, புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
எல்லோருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

இளமதி said...

அருமை... நீங்க சொல்லியிருக்கிறதும் சற்று வித்தியாசமானதுதான். செய்து பார்க்கணும்.

நல்ல குறிப்பு. மிக்க நன்றி ஆசியா!
உங்கள் வாழ்த்திற்கும் நன்றி...

உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

angelin said...

இனிமையாக புத்தாண்டை வரவேற்றிருக்கீங்க ..ஸ்டேப் பை ஸ்டெப் செய்முறை அருமை நானும் நாளை செய்ய போகிறேன் .நன்றி ஆசியா

nisha s said...

Tasty kozhukattais,sis

vanathy said...

Super recipe. Happy new year.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பால் கொழுக்கட்டை செய்முறை அருமை. பாராட்டுக்கள்.

Priya Suresh said...

Iniya puthanandu vazhuthukkal akka, paal kozhukattais looks fabulous.

Shama Nagarajan said...

tempting and inviting dear

சே. குமார் said...

படங்களுடன் அருமை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா....

வெங்கட் நாகராஜ் said...

பால் கொழுக்கட்டை பார்க்கவே நல்லா இருக்கு! :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

ஆசியா, நீங்கள் என் வலைத்தளம் வரமுடியவில்லை என்று திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மெயில் அனுப்பியதாய் சொன்னார்கள்.கீழே கொடுத்து இருக்கும் லிங்கில் இருப்பதை டைப் செய்தால் என் வலைத்தளம் வரலாம்.
இது ஹுஸைனம்மா சொல்லிக் கொடுத்தது.
நிரந்தரதீர்வுக்கு தனபாலன் அவர்கள் சொன்னது போல் செய்ய வேண்டும். அது எனக்கு கொஞ்சம் புரிபடவில்லை.
உங்கள் முயற்சிக்கு நன்றி.


http://mathysblog.blogspot.com/ncr

VijiParthiban said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா .... சுவையான பால்கொழுக்கட்டை ம்ம்ம்ம் சூப்பர் அக்கா...

Asiya Omar said...

கருத்தும்,வாழ்த்தும் தெரிவித்த மற்றும் பார்வையிட்ட அனைத்து நட்புள்ளங்கலுக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

S.Menaga said...

பால் கொழுக்கட்டையின் சுவையே தனிதான்...

கோவை2தில்லி said...

பால் கொழுக்கட்டை அபாரம். எங்கம்மா தேங்காய்ப்பால் சேர்ப்பார். சுவை கூடும். முயற்சி செய்து பாருங்கள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஸாதிகா said...

மனோ அக்கா குறிப்பை உடனே செய்து பார்த்து விட்டீர்களே.வித்த்யாசமான பாயசம்தான்.

Vijayalakshmi Dharmaraj said...

superb recipe... enoda romba romba favorite recipe... thanks for participating on my event....

Mahi said...

உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியாக்கா! கொழுக்கட்டை பார்க்க அருமை, சாப்பிட ஆசையா இருக்குது! ;) இந்த முறையில் செய்ததில்லை, அதனால் செய்ய கொஞ்சம் பயமா(!) இருக்கு! :)

Jaleela Kamal said...

மிக அருமையாக இருக்கு,