Sunday, April 28, 2013

கருவேப்பிலை சிக்கன் / Chicken in Curry Leaves.

 தேவையான பொருட்கள்;
ஊறவைக்க:
சிக்கன் - அரை கிலோ
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - அரை கப்
உப்பு - தேவைக்கு.

ஃப்ரை செய்ய:
பட்டர் - 50 கிராம்
கருவேப்பிலை - அரை கப்
பச்சை மிளகாய் - 1/3 கப் ( வட்டமாக பொடியாக நறுக்கியது)

(சில்லி பவுடர்,பச்சை மிளகாய் உங்கள் சுவைக்கு தகுந்த படி சேர்த்துக் கொள்ளவும்) நாங்கள் காரம் குறைவாக சாப்பிடுவதால் மேற்சொன்ன அளவை விட சிறிது குறைத்துக் கொண்டேன்.

Recipe Source -THANKS  Saute,  fry n bake - facebook page.

சிக்கனை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும்.அத்துடன் ஊற வைக்க சொன்ன பொருட்களை சேர்த்து இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் ஊற வைக்கவும்.

 ஊற வைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.
 இப்படி தண்ணீர் ஊறி அதிலேயே வெந்து வரும்.

 சிக்கன் வெந்து தண்ணீர் வற்றி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
 ஒரு கடாயில் 50 கிராம் பட்டர் சேர்க்கவும்.
 நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.
 ஊற வைத்து வேக வைத்த சிக்கனை சேர்த்து  ஃப்ரை செய்து எடுக்கவும்.
சுவையான கருவேப்பிலை சிக்கன் ரெடி.

இதில் இஞ்சி பூண்டு,கரம் மசாலா,வெங்காயம்,தக்காளி போன்ற பொருட்கள் சேர்க்காமலே சுவை அபாரமாக இருக்கும்.
பிரியப்பட்டால் செய்து பார்க்கவும்.

10 comments:

Jaleela Kamal said...

கருவேப்பிலை சிக்கன் நல்ல மணமாக இருக்குமே

சிக்கன் மற்றும் இறாலை நானும் அடிக்கடி இப்படி வேகவைத்து சுருட்டி வறுப்பதுண்டு, நல்ல மணமாக இருக்கும்

Asiya Omar said...

உடன் கருத்திற்கு நன்றி ஜலீலா.நானும் பொதுவாக ஃப்ரை செய்யும் பொழுது கருவேப்பிலை சேர்ப்பதுண்டு.அதன் மணமே தனி தான்.

faiza kader said...

Aaha.. nalla manamaga irukum poola super..

Meena Selvakumaran said...

super dish , not to worry when garlic/ginger not there,i also tried adding butter yesterday,it had wonderful aroma.

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

This recipe must be delicious and healthy ............ will try to make soon

Priya Suresh said...

Omg, super flavourful chicken akka..Love the addition of butter here.

VijiParthiban said...

நல்ல பகிர்வு . பாக்கும் பொழுதே சாப்பிடனும் போல் தோன்றுகிறது....
நானும் செய்து பார்க்கிறேன் அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...

ஸாதிகா said...

படிக்கும் பொழுது மணமணக்கிறது தோழி.

S.Menaga said...

கறிவேப்பிலை மணத்துடன் கமகமக்கிறது..