Monday, April 15, 2013

சிக்கன் கப்ஸா / Chicken Kapsa


தேவையான பொருட்கள்;
சிக்கன் நான்கு பெரிய  பீஸ்- 600 கிராம்
பாசுமதி அரிசி - 2 கப்
சிக்கன் ஸ்டாக் எடுக்க:
தண்ணீர் - 4 கப்
ஏலம்,பட்டை கிராம்பு  - தலா மூன்று எண்ணம்
பிரியாணி இலை -2
உப்பு - தேவைக்கு.

கப்ஸா தாளிக்க:
எண்ணெய் - 4- 5 டேபிள்ஸ்பூன் + 1 டேபிள்ஸ்பூன் பட்டர்( விரும்பினால்)
பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்( விருப்பமிருந்தால் சேர்க்கலாம்,நான் சேர்க்கலை)
நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 1
தக்காளி ப்யூரி -  1 மீடியம் சைஸ் தக்காளி
கேரட் துருவியது -1
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன் ( விருப்பம் போல்)
மல்லித்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - கால் - அரை டீஸ்பூன்
காய்ந்த எலுமிச்சை - சிறியது -1
சாஃப்ரான் - 2 பின்ச்.
சிக்கனை சுத்தமாக மஞ்சள் தூள்  போட்டு வாடை போக நன்கு அலசி தண்ணீர் வடித்து கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர்,பட்டை,கிராம்பு ஏலக்காய்,பிரியாணி இலை சேர்த்து கொதி வரவும்,சிக்கன் உப்பு சேர்க்கவும்.
 அடுப்பை சிம்மில் வைத்து 15-20 நிமிடம் வைத்து ஸ்டாக்  எடுக்கவும்.
 சிக்கன் பாதி வேக்காடு தான்  வெந்திருக்க வேண்டும்.

அரிசியை அலசி கால் மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.

 அலங்கரிக்க:
சிறிது நெய்யில் வறுத்த காய்ந்த திராட்சை, நறுக்கிய பாதாம்.
செய்முறை:

 ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய், பட்டர் சேர்க்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

 ஸ்டாக் எடுத்த சிக்கனை மட்டும் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும்.தக்காளி ப்யூரியை சேர்க்கவும்.நன்கு சேர்த்து பிரட்டவும்.
 நறுக்கிய தக்காளி, துருவிய கேரட் சேர்க்கவும்.நன்கு பிரட்டவும்.

 மசாலா வகைகளை சேர்க்கவும்.
 நன்கு மெதுவாக ஒரு சேர பிரட்டவும்.
 எடுத்த சிக்கன் ஸ்டாக் சூடாக சேர்க்கவும்.காய்ந்த எலுமிச்சையை நான்காக நறுக்கி  போடவும்,.
 ஊறிய அரிசியை சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 அரிசி வெந்து முக்கால் வேக்காடாக மேலெழும்பி வரும்.
 பாத்திரத்தில் சிக்கென்று மூடி அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் தம் போடவும்.அடுப்பை அணைக்கவும்.

 10 நிமிடம் கழித்து திறந்து சிக்கன் ,சோறு உடையாதவாறு பிரட்டி எடுத்து பரிமாறவும்.
வறுத்த கிஸ்மிஸ், பாதாம், அலங்கரித்து பரிமாறவும். மணம் சூப்பராக இருக்கும்.மைல்டாக இருக்கும்,சிக்கன் வெண்ணெய் போல் வெந்து காணப்படும்.சிவற வறுத்த வெங்காயம் சேர்த்தும் அலங்கரிக்கலாம்.


பின் குறிப்பு:
கப்ஸா ரைஸ் பல்வேறு முறையாக செய்யலாம். இது ஒரு முறை.சிக்கனை தோலோடு சேர்த்தும் வேக வைக்கலாம்.அல்லது கிரில் செய்தும் கப்ஸா ரைஸ் செய்து விட்டு கிரில் சிக்கனை உடன் வைத்தும் பரிமாறலாம்.நான் தோல் எடுத்து விட்டு  சமைத்ததை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.


இது பாதியாக சிக்கனை கட் செய்து ஸ்டாக் எடுத்து விட்டு பின்பு லைட்டாக கிரில் செய்து பின்பு ரைஸுடன் தம் செய்து எடுத்து பரிமாறியது.எப்படி செய்வது என்பது உங்கள் சாய்ஸ்.நல்ல காரசாரமாக சாப்பிட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த சுவை அதிகம் பிரியமாக இருக்காது.

13 comments:

சே. குமார் said...

Puthumaiyana murai...
Piriyani pol irukku...
try seithu pakkalaam akka.

S.Menaga said...

சூப்பரா இருக்குக்கா..காய்ந்த எலுமிச்சை பதில் ப்ரெஷ் காய் சேர்க்கலாமா??

Asiya Omar said...

நன்றி குமார் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை.

மேனகா வருகைக்கு மகிழ்ச்சி.காய்ந்த எலுமிச்சை வேறு மணம்.
இல்லையானால் லைம் ஜூஸ் சேர்க்கலாம்.நன்றி மேனகா செய்து பாருங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறை வித்தியாசமாக இருக்கு... செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...

Meena Selvakumaran said...

super asiya kalakitinga,kandipad try panuven,tips romba useful aa irukum,i like to have spicy...

Vijayalakshmi Dharmaraj said...

nice one akka...

VijiParthiban said...

இந்த முறை வித்தியாசமாக இருக்கு.சூப்பரா இருக்குக்கா...

Priya Suresh said...

I always want to make this famous kapsa dish akka, thanks for sharing ,will make some soon.

ஸாதிகா said...

ஆஹா அசத்திட்டீங்க தோழி.எனக்கு கப்சா சோறு மிகவும் பிடிக்கும்.அதிகம் காரம் இல்லாமல்.ஸ்பைஸஸ் இல்லாமல் அதனை சாப்பிட மிகவும் பிடிக்கும்.அதனை ச்டெப் பை ச்டெப்பாக தந்து சமைக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் தோழி.

Shama Nagarajan said...

inviting and a lovely treat

athira said...

படம் பார்த்ததுமே நா ஊற வைக்கிறீங்க ஆசியா... சூப்பரா இருக்கு கலர்.

Jaleela Kamal said...

ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு அசத்திட்டீங்க

வீட்டில் சின்ன குழந்தைகள் வந்தால் அடிக்கடி செய்வது, படம் சரியாக இல்லாததால் போஸ்டிங் தள்ளி கொண்டே போகிறது

Savitha Ganesan said...

Pere romba arumaya irukku.super ponga.