Monday, April 29, 2013

ஹெல்தி பேக்ட் & ஃப்ரைட் ஃபிஷ் / Healthy Baked & Fried Fish

மீனை ஆரோக்கியமாகவும் சாப்பிடனும் ஆனால் ஃப்ரை செய்தும் சாப்பிடனும் என்ற நினைப்பவர்களுக்காகத்தான் இந்த ரெசிப்பி.

தேவையான பொருட்கள்;
மீடியம் சைஸ் முழு மீன் - அரைக் கிலோ(3 எண்ணம்)

மீனில் விரவ மசாலா:
சில்லி பவுடர் -1- 2 டீஸ்பூன்
மஞ்சள், சீரகம், மிளகுத் தூள்கள் - தலா அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  2 டீஸ்பூன்
அல்லது பூண்டு சின்ன வெங்காயம் பேஸ்ட் ருசிக்கு தக்க,
எலுமிச்சை ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் அல்லது மற்ற எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 செய்முறை:
மீனை செதில் எடுத்து வயிற்றை சுத்தம் செய்து,நன்கு அலசி,கல் உப்பு போட்டு உலசி, பல  தடவை வாடை போக அலசி கத்தியால் லேசாக இரு புறமும் கீறி விட்டு எடுத்து தண்ணீர் வடித்து எடுக்கவும்.
மேற் சொன்ன மசாலாவை விரவி மீனை ஒரு மணி நேரம் குறைந்தது ஊற வைக்கவும்.எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ அவ்வளவு ருசி.

 ஊற வைத்த மீனை மைக்ரோவேவில் என்றால் ஓவன் ஃப்ரூஃப்  தட்டில் 2 நிமிடம் வைத்தோ அல்லது எலெக்ட்ரிக் ஒவன் என்றால் அலுமினியம் ஃபாயிலில் வைத்து  பேக் செய்து எடுக்கவும்.
பேக் செய்து எடுத்த மீன் வெந்து  சிறிது தண்ணீர் கசிந்து இருக்கும்.அதனை அப்படியே கவனமாக எடுத்து சூடான நான்ஸ்டிக் பேனில் போடவும்.இரு புறமும்  திருப்பி போட்டு மீன் நன்கு வறுபட்டவுடன் எடுத்து பரிமாறலாம்.
அப்படியே பேனிலேயே சிஸ்லிங் எஃபெக்டுடன் கூட பரிமாறலாம்.

செய்து பாருங்க ,அருமையாக இருக்கும்.அப்படியே லட்டு மாதிரி புட்டு புட்டு சாப்பிடலாம்.முள் கூட தனியாக அப்படியே வந்து விடும்.

சுவையான ஹெல்தி பேக்ட் & ஃப்ரைட் ஃபிஷ் ரெடி.
மசாலா உங்க விருப்பம் தான்.இஞ்சி பூண்டுக்கு பதிலாக பூண்டு,சின்ன வெங்காயம்   கூட தட்டி சேர்க்கலாம்.


13 comments:

Sangeetha Nambi said...

OMG ! Its tempting me badly !

திண்டுக்கல் தனபாலன் said...

டூ இன் ஒன் பிஷ் சமையல் சூப்பர்... நன்றி...

Vimitha Anand said...

Arumaiya irukku paakave

spicyrecipes said...

Wow.. super.. ippadiye puttu puttu sapidanum pola iruku

Priya Anandakumar said...

Wow very inviting and tempting. simply superb...

Shama Nagarajan said...

awesome recipe..thanks for sharing

VijiParthiban said...

Wow superb..பாக்கும் பொழுதே சாப்பிடனும் போல் தோன்றுகிறது....அருமை அக்கா...

VijiParthiban said...

பாக்கும் பொழுதே சாப்பிடனும் போல் தோன்றுகிறது....அருமை அக்கா...

S.Menaga said...

பார்க்கவே அருமையாக இருக்குக்கா..என்ன மீன் பயன்படுத்தியிருக்கீங்க??

Asiya Omar said...

சங்கீதா கருத்திற்கு நன்றி.
தனபாலன் சார் மிக்க நன்றி.
விமிதா மிக்க நன்றி.
ஃபாயிஜா மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
ஷாமா மிக்க நன்றி.
விஜி மிக்க நன்றி.
மேனகா sheri fish (vilai meen) பயன்படுத்தியிருக்கேன்.செய்து பாருங்க,mackerel fish -யிலும் செய்யலாம்.

Meena Selvakumaran said...

inviting pictures,super aa iruku,

Priya Suresh said...

Adada Akka supera irruku intha baked fish..temptingaa irruku.

athira said...

ஆஹா சூப்பர்ர்..