Monday, April 22, 2013

மாங்காய் ஆப்பிள் தொக்கு / Mango Apple Thokku

மாங்காய் சீசன்,ஏதாவது புதுசாக முயற்சி செய்து பார்க்கலாம்னு செய்து பார்த்தது தான் இது.சத்தானதாகவும்,ஆரோக்கியமானதாகவும்  இருக்க வேண்டும் என்று அதனுடன்,ஆப்பிள்,காய்ந்த திராட்சை,இஞ்சி,பூண்டு என்று சேர்த்து செய்து பார்த்தது தான் இந்தக்  குறிப்பு.

 தேவையான பொருட்கள்;
காய் வெட்டான மாம்பழம் - 2
ஆப்பிள் - 1
காய்ந்த திராட்சை - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு -1- 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால்டீஸ்பூன் - அரை டீஸ்பூன்
உப்பு,சீனி - தலா கால் டீஸ்பூன் ( உங்க டேஸ்ட்டுக்கு)
வினிகர் - 1 டீஸ்பூன் ( கெடாமல் இருக்க)
உடனே காலி செய்வதாய் இருந்தால் வினிகர் கூட தேவையில்லை.

இஞ்சி பூண்டு விரும்பாதவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
 மாங்காயை நன்கு கழுவி தோல் சீவி ,கொட்டை அல்லது உள்ளே பருப்பு இருந்தால் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.


 வெங்காயம் ,இஞ்சி பூண்டு ,மாங்காய் ,ஆப்பிள் தோல் சீவி நறுக்கி தயாராய் இருக்க வேண்டும்.
 ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் விட்டு காய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிம்மில் வைத்து 5 நிமிடம் வதக்கவும்.
 பின்பு அத்துடன் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
 பின்பு நறுக்கிய ஆப்பிள் மாங்காய் சேர்க்கவும்.சிறிது வதங்க விடவும்.
 அத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி ,காய்ந்த திராட்சை சேர்க்கவும்.
 நன்கு வதங்கட்டும்.
 கால் - அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மீடியமாக  வைத்து மூடி வேக விடவும்.நன்கு வெந்து சுண்டி வரும்.
 மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்.
 அடுப்பு சிம்மில் இருக்கட்டும். ருசிக்கு உப்பு,சீனி சிறிது சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.விரும்பினால் வினிகர் சேர்த்து நன்கு மீண்டும் கலந்து விடவும்.
 நன்கு இப்படி தொக்கு போல் திரண்டு வரும்.
அடுப்பை அணைக்கவும்.குளிர்ந்த பின்பு ஒரு பவுல் அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும். தேவைக்கு எடுத்து சாப்பிடலாம்.எங்கே எடுத்து வைப்பது ஆளுக்கு இரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் உடனே காலியாகி விடும்.நல்ல ஹெல்தியான தொக்கு.வாயும் ருசி படும்.இனிப்பு,புளிப்பு,காரம்னு சுவை அசத்தலாக இருக்கும்.
முதலில் மாங்காய், ஆப்பிள் மட்டும் சேர்த்து தொக்கு செய்யலாம்னு யோசித்தேன்,பின்பு காய்ந்த திராட்சை வீட்டில் நிறைய இருந்ததால் அதனையும் சேர்த்து செய்து பார்த்தேன். சுவை நன்றாக இருந்தது.

சுவையான சத்தான மாங்காய் ஆப்பிள் தொக்கு ரெடி. ஏதாவது வித்தியாசமாய் தொக்கு செய்யலாம்னு நினைக்கிறவங்க செய்து பாருங்க.செய்து ஒரு மணி நேரமாவது கழித்து சாப்பிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து  ருசி அட்டகாசமாக இருக்கும்.



and


13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாங்காய்த்தொக்கு தெரியும். செய்துள்ளோம்.

நிறையவே சாப்பிட்டுள்ளோம்.

மாங்காய் + அப்பிளா ? புதுமை.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

priyasaki said...

வித்தியாசமான புது முயற்சி. நல்லா இருக்கு பார்க்க. மாங்காய் கிடைக்கும்பட்சத்தில் செய்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

VijiParthiban said...

நல்ல முயற்ச்சி அக்கா ... நானும் செய்து பார்க்கிறேன்... பார்த்தாலே தெரிகிறது
அருமையாக இருக்கும் என்று. மாங்காய், இனிப்பு என்றால் ம்ம்ம் எனக்கு சொல்லவே தேவைஇல்லை ... சுவைப்பேன் அக்கா.

VijiParthiban said...

நல்ல முயற்ச்சி அக்கா ... நானும் செய்து பார்க்கிறேன்... பகிர்வுக்கு நன்றி அக்கா.

Priya Suresh said...

Puthusa romba interestingana thokku Akka,kalakals ponga.

கோமதி அரசு said...

ஆசியா, மாங்காய், ஆப்பிள் இரண்டும் இருக்கிறது செய்துப்பார்த்து விடுகிறேன்.

Shama Nagarajan said...

interesting

S.Menaga said...

வித்தியாசமான காம்பினேஷன்,ரொம்ப நல்லாயிருக்குக்கா..

Meena Selvakumaran said...

super aa iruku asiya,interesting idea ,sounds yummy.

இளமதி said...

ஆஹா.. நல்ல குறிப்பு ஆசியா. மாங்காய் கிடைக்கட்டும் செய்து பார்த்துவிடுகிறேன்.

பகிர்விற்கு நன்றி ஆசியா...

athira said...

சூப்பர் பார்க்கவே ஆசை. எனக்கு மாங்காய் ஐட்டமெல்லாம் ரொம்பவும் பிடிக்கும்.

Malar Gandhi said...

Looks yummilious, very tempting in fact.

I moved my blog to a new doamin: http://www.kitchentantras.com

Please feel free to check it out. :)

கோவை2தில்லி said...

செய்து பார்க்கலாம் என்று தோணுது. நல்ல முயற்சி. பாராட்டுகள்.