Wednesday, April 24, 2013

மசாலா பீன்ஸ் / Masala Beans

பொதுவாக பீன்ஸ் என்றால் பொரியல் ,சாம்பார்,குருமா,கூட்டு,வெஜ் பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் இவற்றை செய்ய பயன் படுத்துவோம்.புதிதாக மசாலா பீன்ஸ் செய்திருக்கிறேன்.அருமையாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க.


தேவையான பொருட்கள்;
பீன்ஸ்- கால் கிலோ
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய தக்காளி - சிறியது 1
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்;
நறுக்கிய வெங்காயம் - சிறியது 1
பூண்டு - 3 பற்கள்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்
செய்முறை:

 அரைக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.பின்பு அத்துடன் தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.எள்ளு அவ்வளவாக அரை படாது.பரவாயில்லை.
 காம்பு நார் எடுத்து நறுக்கிய பீன்ஸ் உடன் அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.பீன்ஸ் நான் பொரியலுக்கு நறுக்குவது போல் மிகப் பொடியாக நறுக்கி விட்டேன்.நீங்கள் ஒரு இஞ்ச் அளவிற்கு நறுக்கினால்  பார்க்க அழகாக இருக்கும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு காய விடவும்,அரைத்த மசாலாவை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.
 வேக வைத்த பீன்ஸ் சேர்க்கவும்.வெந்த தண்ணீர் இருந்தாலும் சிறிது சேர்த்து மசாலா,  பீன்ஸ் சேர்ந்து பிரட்டியது போல் வர வேண்டும்.நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.
 தக்காளி குழைந்து எல்லாம் சேர்ந்து பிரட்டியது போல் வரும்.

அத்துடன் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.பிரட்டி விடவும்,அடுப்பை அணைக்கவும்.
 சுவையான மசாலா பீன்ஸ் ரெடி.இதனை பக்க உணவாக சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.சூடான சாதம்,கெட்டி பருப்பு,அப்பளம்,ரசத்துடன் பரிமாறினால் அபாரம்.காரம் உங்கள் விருப்பம்.
இந்த மசாலா உபயோகித்து உங்கள் விருப்ப காய்கறிகளை செய்து பார்க்கலாம்.

Sending this to 

  
Viji's Soul Food Show and Give Away.





16 comments:

Mahi said...

Beans is my favorite veggie..this is an interesting version without coconut, will try it soon n let u know Asiya Akka! :)

Savitha Ganesan said...

Chapathi kku romba nalla irukkum nu ninaikkiren.super akka.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்.. (மட்டன் சுக்கா மாதிரி இருக்கிறது...)

செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Sangeetha Nambi said...

Super delicious masala...

இளமதி said...

ஆசியா... நல்ல மசாலாச் சுவையுடன் அசத்தலாக இருக்குமென நினைக்கின்றேன்.

செய்து பார்த்துவிடுகிறேன். பகிர்விற்கு மிக்க நன்றி ஆசியா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. ஏதேதோ புதிதுபுதிதாகச் சொல்லி அசத்துகிறீர்கள். நன்றி.

VijiParthiban said...

பார்த்தாலே நல்லா இருக்கு நானும் செய்து பார்க்கிறேன் அக்கா ...

கோவை2தில்லி said...

வித்தியாசமாக இருக்கு. செய்து பார்க்கலாம்.

Priya Suresh said...

Love that masala part akka,super beans.

வெங்கட் நாகராஜ் said...

மசாலா பீன்ஸ்.... நல்லா இருக்கும்போல தான் இருக்கு.... செஞ்சிடுவோம்!

மனோ சாமிநாதன் said...

மசாலா பீன்ஸ் வித்தியாசமான குறிப்பாக இருக்கிறது ஆசியா! நேரம் கிடைக்கும்போத்து செய்து பார்க்கிறேன்!!

ஸாதிகா said...

அட வித்த்யாசமாக சமைத்து இருக்கீங்க ஆசியா.கண்டிப்பா டிரை பண்ணுகிறேன்.

priyasaki said...

பீன்ஸ் வாங்கினால் கறி அல்லது கூட்டு,பொரியல்தான்.இது புதுசா , வித்தியாசமா இருக்கு ஆசியா. நிச்சயம் செய்கிறேன். நன்றி

கோமதி அரசு said...

அருமையான மசாலாபீன்ஸ் செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி ஆசியா.

Malar Gandhi said...

Looks very nice, healthy choice too.

http://kitchentantras.com/oreo-milk-shake/

Jaleela Kamal said...

பீன்ஸ் எனக்குரொம்ப பிடிக்கும் ரசம் சாதத்துக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக் இருக்கும்
எங்க வீட்டில் யாரும் சாப்பிடாததால் ஃப்ரைட் ரைஸ் , சாம்பார் குருமா, பிரியாணி, சேமியாவில் கலந்து விடுவது
அதில் உள்ள பீன்ஸ் நான் மட்டும் சாப்பிடுவது..

இது எனக்கு பார்சல் அனுப்பினால் ஒரு முன்று நாளைக்கு வைத்து நானே மதிய உணவுக்கு சாப்பிட்டு கொள்வேன்.