Wednesday, April 17, 2013

வெந்தயக்கீரை பனீர் பிரியாணி / Methi Paneer Briyaniதேவையான பொருட்கள்;

வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு
(கீரை ஆய்ந்தால் முக்கால் - ஒரு கப் வரும்)
பனீர் துண்டுகள்- 100 கிராம்
பாசுமதி அரிசி - 300 கிராம்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் + நெய் -2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்
மல்லி புதினா நறுக்கியது - தலா ஒரு கை பிடியளவு
பச்சை மிளகாய் கீறியது - 3
தயிர் - அரை கப்
சாஃப்ரான் - 2பின்ச் அல்லது லெமன் எல்லோ கலர் - 1 பின்ச்
உப்பு தேவைக்கு.
3 நபர்களுக்கு:

செய்முறை:
அரிசியை அலசி, கால் மணி நேரம் ஊறவைத்து உதிரியாக உப்பு சேர்த்து வடித்து வைக்கவும்.

கீரையை சுத்தமாக ஆய்ந்து நன்கு மண்போக அலசி எடுக்கவும்.பனீரை குளிர் நீரில் போட்டு வைக்கவும்.

 தேவையானவற்றை நறுக்கி தயார் செய்யவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.இளஞ்சிவப்பாக சிவறும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.சிம்மில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும்.
 நறுக்கிய மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும். நன்கு சுருள வதக்கவும்.கரம் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

 பின்பு அத்துடன் தயிர் சேர்க்கவும்.

 கலந்து விடவும்.
 சுத்தம் செய்து அலசிய வெந்தயக் கீரை சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.
 பனீர் சேர்க்கவும்.கலந்து விடவும்.உப்பு சிறிது தேவைக்கு சேர்க்கவும்.நன்கு ஒரு சேர பிரட்டி விடவும்.
 சிறிது கொதிக்கும் நீரில் சாஃப்ரான் அல்லது லெமன் எல்லோ கலரை கரைத்து வைக்கவும்.
 ரெடியான கீரையுடன் சூடான வடித்த சோறை தட்டி பரத்தி விடவும்.
சாஃப்ரான் கரைசலை மேலே பரவலாக ஊற்றி விடவும்.2 டீஸ்பூன் நெய் மேலே விடவும்.

 சிக்கென்று மூடி 10 நிமிடம் தம் போடவும்.அடுப்பை அணைக்கவும்.
 திரும்ப 10 நிமிடம் கழித்து திறந்து ஒரு போல் பிரட்டி பரிமாறவும்.அப்பளம், துவையல், சிப்ஸ் உடன் பரிமாறலாம்.


சுவையான மேத்தி பனீர் பிரியாணி ரெடி.
அப்பளம்,துவையல்,சிப்ஸ் உடன் பரிமாறலாம்.
ஆரோக்கியமான சத்தான குறிப்பு.விருப்பப்பட்டால் செய்து பாருங்க.அருமையாகயிருந்தது.
லஞ்ச் பாக்ஸில் எடுத்து செல்ல ஏற்றது.

வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து சாப்பிடலாம். வெந்தயக்கீரை உடல் நலத்திற்கு மிக நல்லது, அதனை பருப்புடன் சேர்த்து பொதுவாக சமைப்போம்.மாறுதலாக பனீருடன் சேர்த்து இந்த பிரியாணியாக  செய்து பாருங்க.
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. 
வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. இனி குறிப்பிற்கு வருவோம்.

19 comments:

ஸாதிகா said...

வித்த்யாசமாக யோசித்திருக்கீங்க ஆசியா.பிரியாணி படத்தில் பார்க்கும் பொழுதே நல்லா வந்திருக்கு.

இளமதி said...

ம்.. படத்தைப்பார்க்கவே சுவை சுண்டி இழுக்கின்றதே...:)
அருமை. நல்ல குறிப்பு ஆசியா.
பகிர்விற்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான படங்கள். அற்புதமான செய்முறை விளக்கங்கள். பாராட்டுக்கள்.

Asiya Omar said...

மேத்தி புலாவ் பொதுவாக எல்லாரும் செய்றாங்க ஸாதிகா. அருமையாக இரூந்தது.

இளமதி செய்து பாருங்க.நல்ல மணமாக இருக்கும்.

வை.கோ சார் கருத்திற்கு மிக்க நன்றி.

Priya Anandakumar said...

Romba nalla irrukku Asiya, nicely explained. Good clicks. Thanks for sharing...

கோமதி அரசு said...

ஆசியா, வெந்தயக்கீரை புலாவ் இந்த கோடைக்கு ஏற்ற உணவு தான். வெந்தயகீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.
நீங்கள் சொன்ன பலன்களும் அருமை.
செய்துபார்த்து விடுகிறேன்.

http://mathysblog.blogspot.com/2013/04/blog-post_665.html//

என் வலைத்தளம் குதிக்கிறது வரமுடியவில்லை என்றீர்கள் அல்லவா? அதை சரி செய்து இருக்கிறேன் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னது போல் நீங்கள் வந்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
நன்றி.

Shama Nagarajan said...

tempting and inviting

Vijayalakshmi Dharmaraj said...

very different n healthy biryani akka... nice...Thanks for linking to my event...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல படங்களுடன் செய்முறை விளக்கங்களுக்கு நன்றி...

Meena Selvakumaran said...

super asiya,could feel the flavor,quite healthy too.

Sumi said...

romb nalla iruku. Iniki kandippa ithai seiy aporen, veetil vendhaya keerai matrum paneer ready'a ulathu.
Thanks for the recipe

Vimitha Anand said...

Romba healthy biryani.. super

Priya Suresh said...

Very flavourful and super delicious briyani,superaa irruku Akka.

Sangeetha Nambi said...

Very innovative and healthy Briyani...

VijiParthiban said...

அற்புதமான செய்முறை விளக்கங்கள்.
அருமை அருமை........

வெங்கட் நாகராஜ் said...

Good one.... will try on sunday....

சே. குமார் said...

வெந்தயக்கீரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி பருப்புப் போட்டு வைத்துக் கொள்ளுவேன்... அருமை அக்கா...

மாதேவி said...

உங்கள் கை வண்ணத்தில் பிரியாணி சுவையாக இருக்கின்றது ஆசியா.

Sivagamasundhari Sikamani said...

Very nice recipe Asiya and I am going to try. I think we can try with tofu also if someone has milk allergy.