Saturday, April 6, 2013

மை எக் கட்டர் / My Egg Cutter

 பாத்திரங்கள்  உபகரணங்கள் பகுதிக்கு போஸ்டிங் போட்டு நாளாகுது.சரி என்னோட  எக் கட்டர் பற்றி பகிரலாம் என்று நினைத்ததால் இந்த பகிர்வு.


 முட்டை அவிக்கும் பொழுது தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்தால் உடையாது.அவித்து பின்பு சூடாக குளிர்ந்த நீரில் போட்டு  தோடை  உரித்தால் இலகுவாக உரித்து விடலாம்.மஞ்சள் கருவும் நிறம் மாறாமல் இருக்கும்.
  அவித்த முட்டையை உரித்து இப்படி எக் கட்டரில் குறுக்காக வைத்து மூடி அழுத்தினால் போதும்,அழகான ஒரே அளவான சிறிய துண்டுகளாக கட் ஆகி வந்து விடும்.
இப்படி கட் செய்வதை அழகாக அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம்.சிறியதாக கட் செய்து வைக்கும் பொழுது மஞ்சள் கரு விரும்பாதவர்கள் வெள்ளைக்கரு துண்டை மட்டும் எடுத்து சாப்பிடலாம்.
 டயட் இருப்பவர்கள் கூட பாயில்ட் எக்,ஆரஞ்ச் ஜூஸ் அல்லது ஆரஞ்சு பழம்  காலை உணவாக வாரம் ஒரு நாள் மெனுவில் வைத்துக் கொள்ளலாம்.
அவித்த முட்டையை இப்படி கட் செய்து வெது வெதுப்பாக உப்பு,மிளகுத்தூள் அல்லது சாட் மசாலா தூவி உடனே சாப்பிட்டால் சுவை அபாரம்.


13 comments:

இளமதி said...

ஆசியா... இதனை எக் கட்டராக மட்டும் பாவிப்பதென்காமல் வேறு மெதுமையானவற்றை வெட்டுவதற்கும் உபயோகப்படுத்தலாம்.

நான் அவித்த உருளைக்கிழங்கு வெட்டப் பயன்படுத்துவேன்.
இதில் அவித்த உ.கிழங்கை சிலைஸ்ஸாக வெட்டி உப்பு, மிளகாய்தூள் சேர்த்து, வெங்காயம் சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் தாளிதப் பொருட்கள் சேர்த்துத் தாளித்து சேர்த்துப்பிரட்டி உ.கிழங்குப் பிரட்டல் செய்வேன்...

நல்ல கருவி. பகிர்வுக்கு நன்றி ஆசியா!

Asiya Omar said...

நன்றி இளமதி. கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

VijiParthiban said...

நல்ல பகிர்வு அக்கா... நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு கடையில் பார்த்தேன். ஆனால் வாங்க வில்லை.. இதில் நல்ல பயன் உண்டு என்று அறிந்து கொண்டேன் உங்கள் பகிர்வின் மூலம் . நாளையே வாங்கிவிடவேண்டியதுதான். நன்றி அக்கா...

ஸாதிகா said...

அருமையான பொருள்தான்.உங்கள் எக் கட்டரின் கலரும் சூப்பர்.கூடவே இளமதி சொல்லித்தந்த டிப்ஸுக்கும் நன்றி.

Meena Selvakumaran said...

super post,unmai food waste aavathai thvirkalam

faiza kader said...

Naanum food decoration panna ithanai use pannuven.. pillaigaluku ippadi koduthaal santhoosama sapiduvaga.. super ra iruku

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் விளக்கம் பலருக்கும் உதவும்...

ரசித்து சுவைத்து பதிவு செய்தமைக்கு நன்றி...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லோருக்கும் உபயோகமான தகவல்.. பகிர்வுக்கு நன்றி ஆசியாக்கா

Priya Suresh said...

Egg cutter yenkitayum irruku but yenga vachi irruken'nu than terla..

Mahi said...

Nice cutter! I have seen it, but never thought of buying it! :) also, we don't eat boiled egg yolk Asiya Akka..renda cut seythu manjal pakuthiyai eduthuttuthaan saappiduvom/samaippen. :)

Jaleela Kamal said...

பச்சைகலரில் எக் கட்டர் பார்க்கவே அழகாக இருக்கு
இங்கு வந்த புதிதில் வாங்கியது. அதோடு அது எங்க போனதென்றே தெரியல.
நானும் உப்பு போட்டு தான் அவிப்பது.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

மாதேவி said...

அழகாக இருக்கிறது.
முன்னர் சில்வரில் வந்தபோது வாங்கி வைத்திருந்தேன்.
இப்போதுதான் முட்டை சாப்பிட்டே பலவருடங்கள் ஆகிவிட்டதே. கட்டரும் அக்கா மகளுக்கு கொடுத்தாகிவிட்டது.