Thursday, April 4, 2013

பாலக் சிக்கன் - வீடியோ சமையல் / Palak Chicken - Video Samaiyal

வீடியோ சமையல் பகிர்ந்து நாளாச்சு. சரி ஏதாவது ஒரு குறிப்பை செய்து பகிரலாம் என்றால் அது அத்தனை எளிதான விஷயம் அல்லவே..
ஒரு டைரக்டர், ஒரு கேமரா மேன், ஒரு எடிட்டர் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்..என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒவ்வொரு வீடியோ பகிர்விற்கும் பின்னால் ஒரு அனுபவம்..!


பாலக் சிக்கன் - வீடியோ சமையல் செய்முறையை -கிளிக் செய்து  பார்க்கவும்.தேவையான பொருட்கள் உங்கள் வசதிக்காக கீழே தனியாக கொடுத்திருக்கிறேன்.

video


தேவையான பொருட்கள்;
கீரையுடன் வேக வைக்க:
பாலக் கீரை - ஒரு கட்டு -அலசி சுத்தம் செய்து நறுக்கியது
பூண்டு - 4 பற்கள்
சிறிய பெரிய வெங்காயம் நறுக்கியது- 1
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு - சிறிதளவு.

சிக்கனை ஊற வைக்க :
சிக்கன் - அரைகிலோ (சுத்தம் செய்து கட் செய்து அலசி வடிகட்டியது)
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரைடீஸ்பூன்.

சிக்கன் தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் மீடியம் சைஸ் - 2 நறுக்கியது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - அரைடீஸ்பூன்
தக்காளி - மீடியம் சைஸ் - 2 நறுக்கியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சிறிது உப்பு தேவைக்கு.

இறுதியாக சேர்க்க:
ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 2 டீஸ்பூன்(விரும்பினால்) பட்டர் சேர்க்கும் பொழுது கிரேவி தள தளன்னு மணமாக இருக்கும்.
அலங்கரிக்க - தக்காளி துண்டுகள்.

சுவையான பாலக் சிக்கன் செய்முறையை வீடியோவில் பாருங்க.பிடித்திருந்தால் செய்து பார்க்கவும்.
ரெடியான பாலக் சிக்கனை சப்பாத்தி,பரோட்டா,ப்லைன் ரைஸ், ஃப்ரைட் ரைஸ்,கீ ரைஸ் உடன் பரிமாறலாம்.இட்லி, தோசை,ஆப்பத்திற்கும் சூப்பர் காம்பினேஷன்..

Sending this to Vimitha's Hearty and Healthy  - HUDSON CANOLA OIL GIVEAWAY.

12 comments:

தளிகா said...

romba professionalaa irukku..sweet voice.Keep it up Asiyakka

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி தளிகா.கொஞ்சம் லைட்டிங் தான் பிரச்சனை..சும்மா இது,ப்ரபஷனல் எல்லாம் கிடையாது..ஒன்லி பொழுதுபோக்காக எடுத்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு பொருளையும் எடுத்து வைத்து, கேமிரா செல்வதற்கு போல் பேசினது... சிரமம் தான்... உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள்...

பொறுமையாக, அருமையான குரலில் சொல்லி உள்ளீர்கள்...

செய்முறை காணொளிக்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

மிக்க நன்றி தனபாலன் சார்.கருத்திற்கு மகிழ்ச்சி.

VijiParthiban said...

ரொம்ப அருமையான வீடியோ அக்கா . செய்துபார்க்கிறேன் ... நன்றி அக்கா.

Priya Suresh said...

Akka chance'e illa super video..Delicious dish.

S.Menaga said...

ரொம்ப அருமையான வீடியோ+குரல் சூப்பர்ர்!!

Indira.S.Pillai said...

Roomba Nalla pannureenga. Vazhthukkal...

Meena Selvakumaran said...

nice video,madam expecting more nonveg receipe videos.....

Vimitha Anand said...

Super dish akka
Hudson Canola Giveaway

Jaleela Kamal said...

மிக அருமை ஆசியா

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.