Sunday, April 7, 2013

வாழைக்காய் பொரியல் & தோல் துவையல் / Plantain Stir Fry & Thuvaiyal

 வாழைக்காய்,வாழைப்பூ,வாழைத்தண்டு இப்படி ஏதாவது ஒன்றை வாரத்தில் ஒரு நாள் மெனுவில் சேர்த்துக் கொள்ளலாம்.அதன் சத்து,பயன்  பற்றி அனைவரும் அறிந்ததே!

வாழைக்காய் பொரியல்:
தேவையான பொருட்கள்;
வேக வைக்க:
வாழைக்காய் - 2 (மொந்தன் வெரைட்டி )
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கு.

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 2 பின்ச்
நறுக்கிய வெங்காயம் - 1
கருவேப்பிலை - 1 இணுக்கு.

 அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
மிள்காய் வற்றல் - 2-3

வாழைக்காயை இப்படி பாதியாக நறுக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் என்றால்  ஒரு விசில், பாத்திரத்தில் என்றால் பக்குவமாக வெந்து எடுக்கவும்.
 தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
 வாணலியில் எண்ணெய் காய்ந்து வரும் பொழுது கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,பெருங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வெடித்து வரும் பொழுது வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
 அத்துடன் நறுக்கிய வேக வைத்த வாழைக்காய் சேர்க்கவும்.
 கொரகொரப்பாக அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.பிரட்டி விடவும்,தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

 நன்கு சிம்மில் வைத்து சிவற பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான வாழைக்காய் பொரியல் ரெடி.இதனை சாதத்திற்கு பக்க உணவாகப் பயன் படுத்தலாம்.சப்பாத்தியில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.

வாழைக்காய் தோல் துவையல் :
வெந்த வாழைக்காயில் உரித்த தோலை வேஸ்ட் செய்ய மனம் வராததால் அதன் துவையலாக தயார் செய்தேன் .சூப்பர் சுவை.

தேவையான பொருட்கள்;
வெந்த பின்பு உரித்த வாழைக்காய் தோல் - 2 காயோடது
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2-3
புளி - மிகச் சிறிது
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு சிறிது.
முதலில் சூடான வாணலியில் கடலை,பருப்பு,உளுத்தம் பருப்பு வற்றல் மணம் வர வறுத்து எடுக்கவும்.
அதனை ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும்,அத்துடன் உப்பு,புளி,தேங்காய் துருவல் சேர்த்து கொர கொரவென்று அரைத்து எடுக்கவும்.
சுவையான சத்தான் வாழைக்காய் தோல் துவையல் ரெடி.துவையல் அரைத்து அரைமணி நேரம்  கழித்து சாப்பிட சுவை கூடுதலாக இருக்கும்.

இதனை சூடான மோர் சாதம், ரசம் சாதத்துடன் பரிமாற சுவை அபாரம்.நீங்களும் செய்து பாருங்க.



Sending this Soul food to Viji's Soul Food Show and Give Away.




And also

Sending this Healthy recipe to Vimitha's Hearty and Healthy - Hudson Canola Oil Giveaway.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழைக்காய் தோல் துவையல் செய்ததில்லை... செய்முறைக்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல ரெசிபி

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழைக்காய் பொரியல் + தோல் துவையல் பற்றிய அருமையான பதிவு.

நல்ல செய்முறை விளக்கங்கள்.

படங்களும் ஜோர்.

ருசியான பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

Meena Selvakumaran said...

plantain chutney never tried ,new to me,poriyal my favorite.

கோமதி அரசு said...

ஆசியா, வாழைக்காய் பொரியல், துவையல், எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.

நானும் வாழைக்காய் அப்பளம், வாழைக்காய் பொரியல், வாழைக்காய் தோல் துவரன் எல்லாம் பகிர்ந்து கொண்டேன்.

இளமதி said...

ம்.. நல்ல குறிப்பு ஆசியா...:)
எனக்கும் இந்த வாழைக்காய் சமையல் எல்லாமே ரொம்பவே பிடித்தமானது.

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வித்தியாசமான முறையில் பொரியல் குறிப்பு தந்துள்ளீர்கள்.கூடவே தோலையும் துகையல் பண்ணி விட்டீர்களே!

Priya Suresh said...

Rendume yen favurite akka, superaa irruku.

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைத்து அன்பான நட்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

வாழைக்காய் தோல் துவையல் super.

VijiParthiban said...

நல்ல செய்முறை விளக்கங்கள். அருமை அக்கா .....

Jaleela Kamal said...

இரண்டு குறீப்பும் அருமை