Thursday, May 30, 2013

வெங்காயக்கறி / Onion curry / வெந்தயக்கறி / Fenugreek Curry / Methi Curry

 வெந்தயத்தில் மீன் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் இருப்பதால் மீன் சாப்பிட பிரியப்படாதவர்கள் வெந்தயம் உணவில் சேர்த்து வந்தால் அந்த சத்து கிடைக்கும்.உடலிற்கு குளிர்ச்சியை தரக்கூடியது.வெந்தயத்தின் பயன்களை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.என்னுடைய முந்தைய பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்தக்கறி வெங்காயத்தின் இனிப்பு,புளிப்பு,லேசான கசப்பு,காரம் என்று அருமையான சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பெரிய வெங்காயம் கால் கிலோ
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
புளி - பெரிய நெல்லியளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3- 4 நபர்கள்.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்,புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு போடவும்.நெருப்பு மிதமாக இருக்கட்டும்.பொன்னிறமாகட்டும்.  கரியக் கூடாது.

 கருவேப்பிலை போடவும்,வெடிக்கவும்,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.வெங்காயம் சிவற வேண்டாம்.சிறிது உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
 வெங்காயம் வதங்கி வரும் பொழுது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.

 புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்து வற்றி வரும்.உப்பு சரி பார்க்கவும்.கூட்டு போல் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்,இதில் வெங்காயம் அப்படியே சாஃப்டாக சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.
 இப்பொழுது கமகமக்கும் வெந்தயக்கறி / வெங்காயக்கறி தயார்..
 இதனை சுடு சாதத்துடன் பிரட்டியோ பக்க உணவாகவோ வைத்து சாப்பிடலாம்,சப்பாத்தி,இட்லி,தோசை, ஆப்பம் எல்லாவற்றுக்கும் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.
நான்கு வருடம் முன்பே இந்தக் குறிப்பை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.


Wednesday, May 29, 2013

வெந்தயப் பருப்பு / Dal Methiபொதுவாக வெந்தயக்கீரையும் பருப்பும் சேர்த்து கீரை கூட்டாக செய்வது வழக்கம், இங்கு முழு வெந்தயத்தை பருப்புடன் சேர்த்து செய்திருக்கிறேன்.உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும்,தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும்,பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்;
பருப்பு வேக வைக்க:
துவரம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்  டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன்
தாளிக்க:
நெய் & எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன்
கடுகு,சீரகம் -தலா  கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
விரும்பினால் நறுக்கிய  வெங்காயம் சிறிது
கீரிய பச்சை மிளகாய் - 1
நறுக்கிய பூண்டு - 2 பல்
கருவேப்பிலை, மல்லி இலை - சிறிது.

செய்முறை:
பருப்புடன் வெந்தயத்தையும்  ஊற வைக்கவும்.
குக்கரில் ஊறிய பருப்பு,வெந்தயம் ,மஞ்சப்பொடி,பெருங்காயம் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன்,தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் நெய் விடவும்.கடுகு,சீரகம் மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,கீரிய மிளகாய்,பூண்டு  சேர்த்து வதக்கி தாளித்ததை வேக வைத்த பருப்பில் கொட்டவும்,நறுக்கிய மல்லி இலை மணத்திற்கு சிறிது சேர்க்கவும்.
சுவையான சத்தான வெந்தயப் பருப்பு ரெடி.
இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வெந்தயத்தின் பயன்கள்;
நன்றி - கூகிள்
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


வெந்தயக்கீரை பனீர் பிரியாணி குறிப்பைக் காண இங்கே கிளிக்கவும்.

என்னுடைய சில சுரைக்காய் குறிப்புக்கள்;
சுரைக்காய் கூட்டு & தோல் துவையல் 
சுரைக்காய் மசாலா கூட்டு
சுரைக்காய் பால் கறி
சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு


Sending this to Viji's SYS-W- Series - 4.

Sunday, May 26, 2013

மீல் மேக்கர் (சோயா உருண்டை) வடை / Mealmaker Vadai
தேவையான பொருட்கள் ;
சோயா உருண்டைகள் - 20 எண்ணிக்கை
கடலை பருப்பு - 100 கிராம் (ஊறவைக்கவும்)
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி புதினா - சிறிது
இஞ்சி சிறிய துண்டு - பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
சோம்புதூள் - கால் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா -கால்-  அரை டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
கடலை பருப்பை  4 மணி நேரம் அல்லது .குறைந்தது 2 மணிநேரமாவது ஊறவைக்கவும். சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போடவும்.அது உப்பி வரும்.கால் மணி நேரம் கழித்து கொதி நீரை வடித்து விட்டு நீரை சுத்தமாக கையால் பிழிந்து சோயா உருண்டைகளை எடுக்கவும்.
மிக்ஸி ஜாரில் முதலில் ஊறிய பருப்பை பரபரப்பாக அரைத்து எடுத்து ஒரு பவுலில் வைக்கவும்.
அடுத்து சோயா உரூண்டைகளுடன் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து எடுத்து பவுலில் வைக்கவும்.


பொடியாக வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லி,புதினா நறுக்கி கொள்ளவும்.அதனையும் அரைத்த பருப்பு,சோயா உருண்டைகளுடன்  சேர்க்கவும்.அத்துடன் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,சோம்புத்தூள்,கரம் மசாலா சேர்க்கவும்.தேவைக்கு உப்பும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். வாணலியில் தேவைக்கு எண்ணெய் சூடு செய்யவும்.
எண்ணெய்  சூடானவுடன் அடுப்பை மீடியமாக குறைக்கவும்.
கலந்து வைத்ததை வடைகளாக தட்டி போடவும்.இரு பக்கமும் பொன்முறுகலாக சிவந்து வரும் பொழுது எண்ணெய் வடித்து எடுக்கவும்./
 இப்படியே தட்டிய அனைத்து வடைகளையும் பொரித்து எடுக்கவும்.


சுவையான மீல் மேக்கர் வடை ரெடி.பக்குவமாக பொரித்து எடுக்கவும். இது கொத்து கறி வடை போலவே சூப்பராக இருக்கும்.
பருப்பிலும்,சோயாவிலும் அரைக்கும் பொழுது சுத்தமாக தண்ணீரே இருக்கக் கூடாது.அப்பொழுது தான் எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுப்பாக இருக்கும்.

Tuesday, May 21, 2013

ப்லைன் பாலக் / Plain Palak


 தேவையான பொருட்கள்;
பாலக் - ஒரு கட்டு
வெங்காயம்  (சிறியது )- 1
தக்காளி ( சிறியது )-1
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1-2
கடுகு,சீரகம் - தலா கால் டீஸ்பூன்
பட்டர் அல்லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
விரும்பினால் - அலங்கரிக்க 1 டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் உபயோகிக்கலாம்.
கால் டீஸ்பூன் கரம் மசாலா விரும்பினால் பாலக்குடன் சேர்க்கலாம்.

செய்முறை:
 கீரையை சுத்தமாக அலசி பொடியாக நறுக்கி தண்ணீர் வடித்து கொள்ளவும்.பின்பு ஒரு கப் நீரை கொதிக்கவிட்டு அதனில் நறுக்கிய கீரை 3  நிமிடம்  போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.வெந்து பச்சையாகவே நிறம் மாறாமல் இருக்கும்.ஆறியபின்பு தண்ணீரை வடித்து விட்டு கீரையை மட்டும் எடுத்து விழுதாக்கி வைக்கவும்.
 இஞ்சி,  பூண்டு, பச்சை மிளகாய்,வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 வாணலியில் பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடுவரவும்,கடுகு,சீரகம் போட்டு வெடிக்க விடவும்.கீரையை தவிர நறுக்கி வைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றன் ஒன்றாய் சேர்த்து நன்கு வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.
 வதங்கிய பின்பு வேகவைத்து விழுதாக்கிய பாலக்கை சேர்க்கவும்.
 நன்கு கலந்து விட்டு உப்பு சரி பார்க்கவும்.சிம்மில் வைத்து ஒரு கொதி வரட்டும். அடுப்பை அணைக்கவும்.

 பவுலில் விட்டு விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் மேலே கலந்து விட்டு பரிமாறவும்.சுவையான ப்லைன் பாலக் ரெடி.
சூடான சாதம் ரொட்டி வகைகளுடன் பரிமாறலாம்.
நான் வீட்டில் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக அடிக்கடி செய்வதுண்டு.அருமையாக இருக்கும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆக போடக் கூடாது நறுக்கி தான் போட வேண்டும்.சீரகம் முழுதாகவோ தூளாகவோ போடலாம்.பொதுவாக பனீர்,உருளை,பருப்பு,சிக்கன் சேர்த்து பாலக் கீரையை சமைப்போம்.இப்படி ப்லைன் ஆக செய்தாலும் மிக அருமையாக இருக்கும்.பாலக்கின் சுவையே தனி தான்..


Sunday, May 19, 2013

தற்பூசணி ஜூஸ் / Watermelon Punchதேவையான பொருட்கள்;
நறுக்கிய தற்பூசணி துண்டுகள் - 4-6 கப்
சர்க்கரை - 4 -6 டேபிள்ஸ்பூன்
ஐஸ்கியூப்ஸ் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - ஒரு பெரிய பழம்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.


 நறுக்கிய தற்பூசணி பழத்துடன்,சர்க்கரை,ஐஸ்கியூப்ஸ் சேர்த்து நன்கு மிக்ஸி ஜாரில் அடிக்கவும். தற்பூசணி விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் அடித்தால் வடிகட்டாமலே கூட குடிக்கலாம்.

 பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.தேவைக்கு லைம் ஜூஸ் பிழியவும்.
கலந்து விடவும்.


 கண்ணாடி கிளாஸ்களில் விட்டு பரிமாறவும்.அழகுக்கும்,மணத்திற்கும் புதினா இலையுடன் பரிமாறலாம்.

இந்த கோடைக்கு இதமாக ஜில்லென்று இருக்கும்.நீங்களும் எடுத்துக்கோங்க..

Thursday, May 16, 2013

மலாய் சிக்கன் கபாப் / Malai Chicken Kebab


தேவையான பொருட்கள்;
முதலில் ஊற வைக்க:
போன்லெஸ் சிக்கன் - அரை கிலோ
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
லைம் ஜூஸ் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1-2 பின்ச் அல்லது கரம் மசாலா கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டீஸ்பூன்
மீட் டெண்டரைசர் - கால் - அரைடீஸ்பூன்(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
இளம் கோழியாக இருந்தால் தேவையில்லை.

அடிக்கடி கபாப், டிக்கா, கிரில்,பார்பிக்யூ  செய்பவர்கள் இந்த மீட் டெண்டரைசர் வாங்கி வைத்துக் கொண்டு சேர்த்து ஊற வைத்து செய்தால்  சாஃப்டாக இருக்கும்.

சிக்கனை நன்கு அலசி தண்ணீர் சுத்தமாக வடிகட்டி மேற் சொன்ன அனைத்து பொருட்களும் சேர்த்து ஊற வைக்கவும்.

இரண்டாவது ஊற வைக்க:
ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
கெட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 3- 4 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்
2 சிறிய பச்சை மிளகாய்
நறுக்கிய மல்லி இலை - 1-2  டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - மிகச் சிறிது.

 மேற் சொன்ன பொருட்களை மிக்ஸியில் ஒரு 2 சுற்று சுற்றி எடுக்கவும்.
 முதலில் ஊற வைத்த சிக்கனுடன் ரெடி செய்த மிக்ஸை சேர்த்து நன்கு கலந்து விரவவும்.ஃப்ரிட்ஜில் 1 - 2 மணி நேரம் ஊற விடவும்.
 பின்பு ஊறிய சிக்கனை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து கபாப் குச்சிகளில் 4 அல்லது 5 துண்டுகளாக அடுக்கி வைக்கவும்.இப்படியே அனைத்து துண்டுகளையும் கபாப் குச்சிகளில் அடுக்கி முடிக்கவும்.
எலெக்ட்ரிக் ஓவனை  முற்சூடு செய்து கொள்ளவும். எண்ணெய் தடவி ரெடி செய்த நான் ஸ்டிக் ட்ரே அல்லது அலுமினியம் ஃபாயில் போட்டு ரெடி செய்த ட்ரேயில் கபாப் குச்சிகளை அடுக்கவும்.வெப்பம் மேக்சிமம் செட் செய்து கொள்ளவும்.
 கால் மணி நேரம் கழித்து சிக்கன்  கபாப் குச்சிகளை திருப்பி வைக்கவும்.முறுக விடக் கூடாது.

 பஞ்சி மாதிரி வெந்து வரும்.உடனே கவனமாக எடுத்து அப்படியே அல்லது குச்சியில் இருந்து எடுத்தும் சிக்கன் கபாபை சூடாகப் பரிமாறலாம். நறுக்கிய கேரட்,கொடைமிளகாய், வெள்ளரி,வெங்காயம்,லெட்டூஸ் இலைகள் எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறவும்.
சுவையான மலாய் சிக்கன் கபாப் ரெடி. விரும்பினால் நீங்களும் செய்து பாருங்க.ஏதாவது ஸ்பெஷல் நாட்களில் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.

Monday, May 13, 2013

மீன் புலாவ் / Fish pulavதேவையான பொருட்கள்;
மீன் பொரிக்க:
மீன் துண்டுகள்- 400 கிராம் ( முள்ளில்லாதது)
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் -   2 டேபிள்ஸ்பூன்
சிறிய எலுமிச்சை பழம் - 1
கார்ன் ஃப்லோர் சிறிதளவு.
உப்பு - தேவைக்கு
புலாவிற்கு:
பாசுமதி அரிசி - 400 கிராம் (ஊற வைக்கவும்)
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 துண்டு,ஏலம் ,கிராம்பு - தலா 3
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப் + தேவைக்கு தண்ணீர்
மல்லி,புதினா சிறிது.
விரும்பினால் கேரட்,க்ரீன் பீஸ் - 100 கிராம்.

பரிமாறும் அளவு - 4  நபர்கள்
 செய்முறை:
மீனை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மீனுடன் முதலில்,லைம் ஜூஸ்,மிளகுத்தூள்,உப்பு தேவைக்கு சேர்த்து பிரட்டி பிரட்டி வைக்கவும்.


 பின்பு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து கலந்து மீனில் விரவி வைக்கவும்.அரை மணி நேரம் ஊற விடவும்.ஊறிய பின்பு லைட்டாக கார்ன்ஃப்லோரில் டிப் செய்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி மீனை இருபக்கமும் லேசாக சிவந்து வேகும் படி சாலோ ஃப்ரை செய்து பொரித்து எடுக்கவும்.
 மீன் புலாவிற்கு மீன் ஃப்ரை ரெடியாகிவிட்டது.


மீன் புலாவ் செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்,நெருப்பை மீடியமாக வைத்து பட்டை,கிராம்பு ஏலக்காய் போடவும்.வெடிக்கட்டும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.வாடை மடங்கட்டும்.

நறுக்கிய  மல்லி,புதினா பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்,பிரட்டி விடவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 நறுக்கிய கேரட்,உரித்த பட்டாணி சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
 அரிசி அளவிற்கு இரண்டு அளவு இருக்குமாறு- 1கப் தேங்காய்ப்பால் = 3 கப் தண்ணீர் கலந்து அளந்து சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.கொதி வரட்டும்.விரும்பினால் கால்- அரை டீஸ்பூன் ஆல் ஸ்பைஸ் பவுடர் தூவிக் கொள்ளலாம்.
 ஊற வைத்த அரிசியை தண்ணீர் நன்கு வடிகட்டி விட்டு சேர்க்கவும்.
அரிசி வெந்து மேலெழும்பி வரும்.

 பொரித்த மீனை வெந்து வரும் புலாவின் மீது வைக்கவும்.

 சாதம் மீனை மூடுமாறு பிரட்டி விடவும்.
 சிறு தீயில் 7-10 நிமிடம் தம்மில் போடவும்.அடுப்பை அணைக்கவும்.
 கால் மணி நேரம் கழித்து திறந்து ஒரு போல் மீன் புலாவ் உடையாதவாறு பிரட்டி விட்டு சூடாகப் பரிமாறவும்.
 சுவையான மீன் புலாவ் ரெடி. நீங்களும் செய்து பாருங்க.மணக்க மணக்க அருமையாக இருக்கும்.வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.