Tuesday, May 7, 2013

பாதாம் மில்க் ஷேக் - Almond Milk Shake

 தேவையான பொருட்கள்;
கெட்டியாக காய்ச்சிய பால் 600 மில்லி
பாதாம் பருப்பு - 50 கிராம்
சாஃப்ரான் - 1 பின்ச்
சீனி - 3  டேபிள்ஸ்பூன்.

பரிமாறும் அளவு - 2-3 நபர்கள்.

செய்முறை:
பாதாம் பருப்பை நன்கு ஊறவைத்து தோல் நீக்கி கொள்ளவும்.அதனை சிறிது காய விடவும்.



 உலர்ந்த பாதாம் மற்றும் தேவைக்கு பின்ச் சாஃப்ரானை மிக்ஸியில் போட்டு mநைசாக தூள் செய்து கொள்ளவும்.



மிக்ஸி ஜாரில் பால்,சர்க்கரை,தூள் செய்த பாதாம் சாஃப்ரான் மிக்ஸ் சேர்த்து, சர்க்கரை நன்கு கரையும் வரை அடிக்கவும்.


 விருப்பம் போல் ஜில்லென்றோ அல்லது வெது வெதுப்பாகவோ பரிமாறலாம்.


 சுவையான பாதாம் மில்க் ஷேக் ரெடி. இப்படி பாதாம் ட்ரிங் மிக்ஸ் பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் சமயம் கொடுக்க வசதியாக இருக்கும்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. நினைவாற்றலை அதிகரிக்கும்.சத்தானதும் கூட.தினமும் ஏதாவது ஒரு பானம் செய்து கொடுக்கும் பொழுது இடை இடையே இதுவும் செய்து கொடுத்து அசத்தலாம்.






15 comments:

Vijayalakshmi Dharmaraj said...

really very very healthy shake akka...

VijiParthiban said...

Healthy milk shake akka... superb...

Meena Selvakumaran said...

refreshing drink,looks so delicious.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாதாம் மில்க் ஷேக் படங்கள் செய்முறை விளக்கங்கள் எல்லாமே ருசியோ ருசி.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்>

கோமதி அரசு said...

பாதாம் மில்க் ஷேக் மிக நன்றாக இருக்கிறது ஆசியா.

Radha Rani said...

சுவையான நல்ல மணம் வீசும் மில்க் ஷேக் அருமை.

priyasaki said...

ஈசியான சத்தான மில்க் ஷேக் ஆசியா. நல்ல குறிப்புகளாக தருவதற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ருசியான பாதாம் மில்க் ஷேக்... படத்துடன் விளக்கம் அருமை... நன்றி...

Vimitha Anand said...

Kids will love it... nice one

Mahi said...

நல்லா இருக்கு ஆசியா அக்கா! நானும் இப்படி பாதாம்-முந்திரி-ஏலக்காய் எல்லாம் சேர்த்து அரைச்சு வச்ச பவுடர் பத்திரமா ஃபிரிட்ஜ்ல தூங்குது. காய்ச்சிக் குடிக்க சோம்பேறிதனம்! உங்க பதிவு கொஞ்சம் உசுப்பி விட்டிருக்கு! :)

Sangeetha Nambi said...

Super tasty and rich shake...

மனோ சாமிநாதன் said...

பாதாம் மில்க் ஷேக் இப்போதே குடிக்கலாம் போல இருக்கிறது ஆசியா!

ஸாதிகா said...

சுலபமாக செய்து அசத்திட்டீங்க ஆசியா.

Jay said...

looks sooooooooooo yumm
Tasty Appetite

S.Menaga said...

சுலபமான சத்தான மில்க்ஷேக்!!