Wednesday, May 29, 2013

வெந்தயப் பருப்பு / Dal Methi



பொதுவாக வெந்தயக்கீரையும் பருப்பும் சேர்த்து கீரை கூட்டாக செய்வது வழக்கம், இங்கு முழு வெந்தயத்தை பருப்புடன் சேர்த்து செய்திருக்கிறேன்.உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும்,தோல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும்,பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்;
பருப்பு வேக வைக்க:
துவரம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்  டீஸ்பூன்
பெருங்காயப் பொடி - கால் டீஸ்பூன்
தாளிக்க:
நெய் & எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன்
கடுகு,சீரகம் -தலா  கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
விரும்பினால் நறுக்கிய  வெங்காயம் சிறிது
கீரிய பச்சை மிளகாய் - 1
நறுக்கிய பூண்டு - 2 பல்
கருவேப்பிலை, மல்லி இலை - சிறிது.

செய்முறை:
பருப்புடன் வெந்தயத்தையும்  ஊற வைக்கவும்.
குக்கரில் ஊறிய பருப்பு,வெந்தயம் ,மஞ்சப்பொடி,பெருங்காயம் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து அடுப்பை அணைக்கவும்.
ஆவியடங்கியவுடன்,தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
கடாயில் எண்ணெய் நெய் விடவும்.கடுகு,சீரகம் மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,கீரிய மிளகாய்,பூண்டு  சேர்த்து வதக்கி தாளித்ததை வேக வைத்த பருப்பில் கொட்டவும்,நறுக்கிய மல்லி இலை மணத்திற்கு சிறிது சேர்க்கவும்.
சுவையான சத்தான வெந்தயப் பருப்பு ரெடி.
இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

வெந்தயத்தின் பயன்கள்;
நன்றி - கூகிள்
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


வெந்தயக்கீரை பனீர் பிரியாணி குறிப்பைக் காண இங்கே கிளிக்கவும்.

என்னுடைய சில சுரைக்காய் குறிப்புக்கள்;
சுரைக்காய் கூட்டு & தோல் துவையல் 
சுரைக்காய் மசாலா கூட்டு
சுரைக்காய் பால் கறி
சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு


Sending this to Viji's SYS-W- Series - 4.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு... மிகவும் நல்ல குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரி...

Sangeetha Nambi said...

super healthy and tasty dal !

Mahi said...

Interesting dal! Healthy n yummy!

Shama Nagarajan said...

tempting recipe

அமைதிச்சாரல் said...

அட!! வெந்தயப்பருப்பு நல்லாருக்குதே ஆசியா.

ஸாதிகா said...

படத்தைப்பார்த்ததும் சமைத்து சாப்பிடத்தூண்டுகிறது.

Vimitha Anand said...

Comfort and healthy food

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பயனுள்ள ஒரு சமையல் குறிப்பு. வெந்தயத்தின் குளிர்ச்சி இந்த வெயில் காலத்தில் மிகவும் நல்லது!

Vijayalakshmi Dharmaraj said...

enaku piditha dal... arumai akka... thanks for participating on our sys-w series...