Wednesday, May 1, 2013

ஈசி கேப்பை தோசை / Easy Ragi Dosai

கேப்பையில் கூழ், சேமியா, கேப்பை உருண்டை,களி போன்ற பதார்த்தம் செய்வதை  விட எனக்கு இந்த ஈசியாக செய்யக் கூடிய தோசை  மிகவும் பிடிக்கும்.இரண்டு தோசை சாப்பிட்டாலும் வயிற்றில் பதம் இருக்கும்.ருசியாகவும், தெம்பாகவும் இருக்கும்.


தேவையான பொருட்கள்;
கேப்பை மாவு / ராகி மாவு - ஒரு கப்
இட்லி மாவு - 1 கப்
தண்ணீர் - 1- ஒன்றரை கப்
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிள்காய் -  1
மல்லி,கருவேப்பிலை நறுக்கியது - தலா இரண்டு டேபிள்ஸ்பூன்
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2-3 நபர்கள்.

செய்முறை:
ஒரு கப் கேப்பை மாவுடன் ஒரு கப் இட்லி மாவு ,தேவைக்கு தண்ணீர்,உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.குறைந்தது அரை- ஒரு மணி நேரம் கரைத்த மாவை மூடி வைக்கவும்.

தோசைக் கல்லை சூடு செய்யவும்.லேசாக எண்ணெய் தடவவும்.ஒரு குழிக் கரண்டியில் மாவு எடுத்து வட்டமாக பரத்தி விடவும்.சிறிது எண்ணெய் தெளிக்கவும். அடுப்பு மீடியம் நெருப்பில் இருக்கட்டும்.சிறிது மூடி திறக்கவும்.திருப்பி போடவும்.பக்குவமாக சுட்டு எடுக்கவும்.இப்படியே அனைத்து மாவையும் சுட்டு எடுக்கவும்.ஆறு - எட்டு மீடியம் சைஸ் தோசை வரும்.

சுவையான ஆரோக்கியமான கேப்பை / ராகி தோசை ரெடி.

இதனை புளிக்குழம்பு,காரக் குழம்பு அல்லது மீன்,கறிக் குழம்புடன் பரிமாற சுவை அபாரம்.தேங்காய் சட்னி, இட்லி மிள்காய்ப் பொடியுடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
முதல் நாள் இட்லி மாவை மறுநாள் இந்த தோசை செய்ய பயன் படுத்தினால் தோசை  சூப்பர் சுவையாக  இருக்கும்.ஒரு சிலர் காலைஇட்லி,இரவு தோசை எனச் செய்வதுண்டு, வெறும் தோசைக்குப் பதில் கேப்பை தோசை செய்து கொடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.ஒரு சிலர்,ரவை,அரிசி மாவு  சேர்த்து இந்த தோசை செய்வதுண்டு, நான் சிம்பிளாக இட்லி மாவு சேர்த்து தான் செய்வேன்.சூப்பராக இருக்கும். நீங்களும் செய்து பாருங்க.
என்னுடைய மற்ற கேப்பை குறிப்புக்கள்
ராகி சேமியா முளைகட்டிய பயறு
கேப்பை கூல் கூழ்
கேப்பை உருண்டை
Sending this to Viji's Soul Food Show & Giveaway.

Gayathri's Walk Through Memory Lane @ Nivedhanam.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இதனை புளிக்குழம்பு,காரக் குழம்பு அல்லது மீன்,கறிக் குழம்புடன் பரிமாற சுவை அபாரம். ///

இதை தான் வீட்டில் சொல்லணும்...!

நன்றி சகோதரி...

Aruna Manikandan said...

healthy and delicious dosa, I too prepare the same way :)

VijiParthiban said...

Superb Akka...

கோமதி அரசு said...

நல்ல சத்துள்ள கேழவரகு தோசை ஆசியா..
இந்த தோசைக்கு தக்காளி சட்னியும் நன்றாக இருக்கும்.

Meena Selvakumaran said...

very healthy and delicious dosa.

S.Menaga said...

சத்தான தோசை சூப்பர்ர் அக்கா!!

Vimitha Anand said...

Healthy dosa akka

Priya Suresh said...

Super nutritious dosa akka.

கோவை2தில்லி said...

நானும் செய்ததுண்டு...தோசை மிளகாய் பொடி, கறிவேப்பிலைக் குழம்பு முதலியவையும் நன்றாக இருக்கும்.

VijiParthiban said...

மறுதினமே செய்துவிட்டேன் அக்கா மிகவும் அருமையாக இருந்தது... நன்றி ...

Mahi said...

ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் அசத்தறீங்க! நல்ல பகிர்வு!

Nivedhanams Sowmya said...

romba nalla irukku... very healthy also.. thanks for linking..
Sowmya
Event - WTML w giveaway