Friday, May 3, 2013

ஈசி கேப்பை கூழ் / Easy Ragi Porridge


கேப்பை கூழ் காய்ச்சுவது மிகச் சுலபம்.இதனை நாம் வீட்டிலேயே  செய்து கொடுத்து   அசத்தலாம்.எங்க ஊர் பக்கம் ரோட்டில் வண்டிகளில்  மண் பானையில்  வைத்து கேப்பை கூழ் விற்பனை நடக்கும்.கூட்டம் கூட்டமாக மக்கள் எப்பவும் வாங்கி பருகிக் கொண்டிருப்பார்கள்.நானும் வாங்கி பருகியிருக்கிறேன்.அந்த நினைவு வந்தது.எனவே இந்த பகிர்வு.நீங்களும் செய்து சாப்பிடுங்க. ருசியில் அசந்து போயிடுவீங்க.
இரண்டு முறையாக ராகி கூழ் காய்ச்சலாம்.முதலில்
ராகி 2 டேபிள்ஸ்பூன்,தண்ணீர் 2 கப்,உப்பு தேவைக்கு சேர்த்து கூழ் காய்ச்சி ஆர வைங்க.தேவைக்கு அத்துடன் 1 அல்லது 2 கப் மோர் சேர்த்து கரைத்து குடிங்க செமையாக இருக்கும்.

இந்த முறை நான் அடிக்கடி செய்வது.

இரண்டாவது முறையில் மோரையும் சேர்த்து ராகியோடு சேர்த்து காய்ச்சலாம்.
 தேவையான பொருட்கள்;
கேப்பை மாவு - 6 டீஸ்பூன்
மோர் - 4 கப் அல்லது 2 கப் மோர் 2 கப் தண்ணீர்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாற சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் (ஒயிட் சில்லி காரம் இருக்காது)
பரிமாறும் அளவு - 2 நபர்கள்
சமைக்கும் நேரம் - 7- 10 நிமிடங்கள்

செய்முறை:

 மோரை சமைக்கும் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
 மோருடன் ராகி மாவு சேர்க்கவும்.
 சீரகத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 அடுப்பை பற்ற வைக்கவும்.
 கைவிடாமல் கலக்கவும்.
 5 நிமிடத்தில் கொதித்து கெட்டியாக ஆரம்பிக்கும்,இரண்டு நிமிடம் நன்கு அகப்பையால் கலந்து விடவும்.அடுப்பை அணைக்கவும்.
 10 நிமிடத்திற்குள் கூழ் ரெடியாகிவிடும்.
சுவையான சத்தான கேப்பை கூழ் ரெடி.
வெது வெதுப்பாக அல்லது சில்லென்று பரிமாறவும்.கோடைக் கேற்ற சூப்பர் பானம், காலை உணவாகவும் உட்கொள்ளலாம்.


15 comments:

angelin said...

சுலபமான அதே நேரம் சத்து நிறைந்த உணவு .என்கிட்டே எல்லாமே இருக்கு ..இன்னிக்கு செய்யவென் .நன்றி ஆசியா சுவையான குறிப்புக்கு

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு எளிதாக இருக்கே... முதலில் செய்ய சொல்ல வேண்டும்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சத்துள்ள் கேப்பைக்கூழ் செய்முறை அருமை. பாராட்டுக்கள்.

இளமதி said...

மிக அருமையான சத்துக்கூழ்.
நல்ல குறிப்பு. பகிர்விற்கு நன்றி ஆசியா...

Geetha Lakshmi A said...

எப்பவும் நான் கூழ் செய்து பின்னர் மோரை கலக்குவேன்,இது புதுவிதமாக உள்ளது, நன்றி

Vimitha Anand said...

Very healthy preparation

கோமதி அரசு said...

ஆசியா, கேப்பை கூழ் மிக நன்றாக இருக்கிறது.
மோரில் கலந்து காய்ச்சியது இல்லை, செய்துப்பார்க்கிறேன்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

நல்ல குறிப்பு. பகிர்விற்கு நன்றி.

VijiParthiban said...

சுலபமான அதே நேரம் சத்து நிறைந்த உணவு .நான் கூழ் செய்து பின்னர் மோரை கலக்குவேன்...

கோவை2தில்லி said...

சத்தான பானம். தண்ணீரில் காய்ச்சி மோர் விட்டு பார்த்திருக்கிறேன். இது மோரிலேயே காய்ச்சுவது.... கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

nisha s said...

Super sis,brings me lots of nostalgic memories from childhood.I love this ragi porridge!!Thanks a million for sharing this wonderful recipe.

krish said...

கேப்பை என்றால் என்ன?

Asiya Omar said...

Krish,எங்க ஊர்( நெல்லை) பக்கம் ராகியை கேப்பை என்று சொல்வது வழக்கம்.வருகைக்கு நன்றி.

Mahi said...

எங்க மாமியார் செய்வாங்க. ஆனால் செய்முறை வேறு. கோடைக்கேற்ற பானம்!

Nivedhanams Sowmya said...

romba nalla irukku.. Thanks for linking it to my event!! Looking for more yummy recipes!!
Sowmya
Event - WTML w giveaway