Thursday, May 30, 2013

வெங்காயக்கறி / Onion curry / வெந்தயக்கறி / Fenugreek Curry / Methi Curry

 வெந்தயத்தில் மீன் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் இருப்பதால் மீன் சாப்பிட பிரியப்படாதவர்கள் வெந்தயம் உணவில் சேர்த்து வந்தால் அந்த சத்து கிடைக்கும்.உடலிற்கு குளிர்ச்சியை தரக்கூடியது.வெந்தயத்தின் பயன்களை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.என்னுடைய முந்தைய பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்தக்கறி வெங்காயத்தின் இனிப்பு,புளிப்பு,லேசான கசப்பு,காரம் என்று அருமையான சுவையுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பெரிய வெங்காயம் கால் கிலோ
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
புளி - பெரிய நெல்லியளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3- 4 நபர்கள்.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்,புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு போடவும்.நெருப்பு மிதமாக இருக்கட்டும்.பொன்னிறமாகட்டும்.  கரியக் கூடாது.

 கருவேப்பிலை போடவும்,வெடிக்கவும்,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.வெங்காயம் சிவற வேண்டாம்.சிறிது உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
 வெங்காயம் வதங்கி வரும் பொழுது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.

 புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்து வற்றி வரும்.உப்பு சரி பார்க்கவும்.கூட்டு போல் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்,இதில் வெங்காயம் அப்படியே சாஃப்டாக சாப்பிடும் பொழுது அருமையாக இருக்கும்.
 இப்பொழுது கமகமக்கும் வெந்தயக்கறி / வெங்காயக்கறி தயார்..
 இதனை சுடு சாதத்துடன் பிரட்டியோ பக்க உணவாகவோ வைத்து சாப்பிடலாம்,சப்பாத்தி,இட்லி,தோசை, ஆப்பம் எல்லாவற்றுக்கும் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.
நான்கு வருடம் முன்பே இந்தக் குறிப்பை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.


15 comments:

ஸாதிகா said...

வித்தியாசமாக உள்ளதே.கசக்காதா?

Asiya Omar said...

கசக்காது ஸாதிகா.கறி வைக்கும் பொழுது இடையில் வாயில் வைத்து பார்த்தால் கசப்பது போல் இருக்கும்,புளி,காரம் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்பு அந்தக் கசப்பு தெரியாது.மணமாக ருசியாக இருக்கும்,தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும். செய்து பாருங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தேகம் வந்தது... முடிவில் கருத்துரையில் விளக்கம்...

நன்றி சகோதரி...

Premas Culinary said...

Healthy yummy curry...

S.Menaga said...

வித்தியாசமான சத்தான குறிப்பு..

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமாய் ஒரு சமையல் குறிப்பு. நன்றி.

Mahi said...

புது ரெசிப்பியாக இருக்கு ஆசியா அக்கா! சீக்கிரமா செய்து பார்த்து சொல்லறேன். போட்டோஸ் கலக்கலா இருக்கு!

உங்களுக்காக என் சாப்பாட்டு ப்ளேட்டை சேர்த்துட்டேன், வந்து பாருங்கோ! ;) :)

Nivedhanams Sowmya said...

ippova sapidannum pola irukku... evalo flavor evalo ruchi... yummy!! Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...

Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway

athira said...

ஆகா சூப்பர் நாங்களும் இப்படியே செய்வோம், ஆனா வெந்தயத்தை எப்போதுமே கடசியாகப் போட்டு, ஒன்றிரண்டு செக்கனில் தண்ணி சேர்த்துவிடுவேன், ஏனெனில் வெந்தயம் கொஞ்சம் வதங்கினாலே கைக்கும் எமக்கு..

கோமதி அரசு said...

வெந்தயக்கறி செய்துப்பார்த்து விடுகிறேன்.
நன்றி ஆசியா.

Vijayalakshmi Dharmaraj said...

parakave super ah iruku akka... nice...
thanks for participating on our sys-w series...

Gayathri Ramanan said...

healthy dish..looks great

Akila said...

Never heard of this curry n does notmknownrhst it has the same benefits as that of the fish

மாதேவி said...

சுவையான சமையல்.

வெள்ளிக்கிழமை மச்சம் சாப்பிடாத நாட்களில் எங்கள் ஊரில் வெந்தயக் கறிதான்.

பக்கத்து ப்ளாட்களில் சமைத்தாலே மணம் அடுத்த ப்ளாட்டுகளுக்கு வரும்.

நானும் மாதம் ஓரிடுதடவை செய்வேன்.

Jaleela Banu said...

ஹெல்தியான மேத்தி கறி..