Monday, May 13, 2013

மீன் புலாவ் / Fish Pulav



தேவையான பொருட்கள்;
மீன் பொரிக்க:
மீன் துண்டுகள்- 400 கிராம் ( முள்ளில்லாதது)
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
எண்ணெய் -   2 டேபிள்ஸ்பூன்
சிறிய எலுமிச்சை பழம் - 1
கார்ன் ஃப்லோர் சிறிதளவு.
உப்பு - தேவைக்கு
புலாவிற்கு:
பாசுமதி அரிசி - 400 கிராம் (ஊற வைக்கவும்)
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 துண்டு,ஏலம் ,கிராம்பு - தலா 3
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப் + தேவைக்கு தண்ணீர்
மல்லி,புதினா சிறிது.
விரும்பினால் கேரட்,க்ரீன் பீஸ் - 100 கிராம்.

பரிமாறும் அளவு - 4  நபர்கள்
 செய்முறை:
மீனை சுத்தமாக அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
மீனுடன் முதலில்,லைம் ஜூஸ்,மிளகுத்தூள்,உப்பு தேவைக்கு சேர்த்து பிரட்டி பிரட்டி வைக்கவும்.


 பின்பு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா சேர்த்து கலந்து மீனில் விரவி வைக்கவும்.அரை மணி நேரம் ஊற விடவும்.ஊறிய பின்பு லைட்டாக கார்ன்ஃப்லோரில் டிப் செய்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி மீனை இருபக்கமும் லேசாக சிவந்து வேகும் படி சாலோ ஃப்ரை செய்து பொரித்து எடுக்கவும்.
 மீன் புலாவிற்கு மீன் ஃப்ரை ரெடியாகிவிட்டது.


மீன் புலாவ் செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும்,நெருப்பை மீடியமாக வைத்து பட்டை,கிராம்பு ஏலக்காய் போடவும்.வெடிக்கட்டும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.வாடை மடங்கட்டும்.

நறுக்கிய  மல்லி,புதினா பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்,பிரட்டி விடவும்.சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 நறுக்கிய கேரட்,உரித்த பட்டாணி சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
 அரிசி அளவிற்கு இரண்டு அளவு இருக்குமாறு- 1கப் தேங்காய்ப்பால் = 3 கப் தண்ணீர் கலந்து அளந்து சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.கொதி வரட்டும்.விரும்பினால் கால்- அரை டீஸ்பூன் ஆல் ஸ்பைஸ் பவுடர் தூவிக் கொள்ளலாம்.
 ஊற வைத்த அரிசியை தண்ணீர் நன்கு வடிகட்டி விட்டு சேர்க்கவும்.
அரிசி வெந்து மேலெழும்பி வரும்.

 பொரித்த மீனை வெந்து வரும் புலாவின் மீது வைக்கவும்.

 சாதம் மீனை மூடுமாறு பிரட்டி விடவும்.
 சிறு தீயில் 7-10 நிமிடம் தம்மில் போடவும்.அடுப்பை அணைக்கவும்.
 கால் மணி நேரம் கழித்து திறந்து ஒரு போல் மீன் புலாவ் உடையாதவாறு பிரட்டி விட்டு சூடாகப் பரிமாறவும்.
 சுவையான மீன் புலாவ் ரெடி. நீங்களும் செய்து பாருங்க.மணக்க மணக்க அருமையாக இருக்கும்.வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

11 comments:

ஸாதிகா said...

நான் செய்யும் மீன் பிரியாணிக்கு முற்றிலும் வித்தியாசமானது.இந்த முறையில் செய்து பார்த்திட வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு அழகாக மீன் புலாவ் செய்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

படத்துடன் கூடிய விளக்கமான செய்முறைக்கு நன்றி...

Meena Selvakumaran said...

super aa iruku,love the veg and fish combo,

Shama Nagarajan said...

yummy and tempting

S.Menaga said...

ஆஹா சூப்பரா செய்துருக்கீங்க,அருமை!!

Divya Pramil said...

Akka parkavae semaya iruku, feel like grabbing that dish.. Yum :) Wish I wr your neighbor :)

Sangeetha Nambi said...

I can feel the smell !

Vimitha Anand said...

Looks so tempting... yummy pot

Mano Saminathan said...

மீன் பிரியாணி அருமை ஆசியா! மீன் பிரியாணி செய்யும்போது எந்த மீன் இங்கு வாங்கி செய்கிறீர்கள்? கொஞ்சம் நன்றாக இல்லாத ஸ்மெல் வந்தால் பிரியாணி வாசனை கெட்டு விடும். அதற்காகத்தான் பெயரைக் கேட்கிறேன்!

Asiya Omar said...

மனோ அக்கா, நான் இந்த ரெசிப்பியில் உபயோகித்திருக்கும் மீன் Neil Perch Fish Fillet(fresh)( சீப் & பெஸ்ட் ) எல்லா லூலூவிலும் இங்கு சாதாரணமாக கிடைக்கிறது அக்கா. கிங் ஃபிஷ்,கொடுவா,பாறை,விலை மீன் நல்லதாக கிடைத்தாலும் இவைகளிலும் செய்வதுண்டு. வருகைக்கு நன்றி அக்கா.FROZEN WHITE FISH FILLET கூட கழுவி நன்றாக தண்ணீர் வடித்து விட்டு மசாலா தடவி பொரித்து செய்தால் அதிலும் அருமையாக இருக்கும் அக்கா.

Savitha Ganesan said...

Romba irukku pulao.