Tuesday, May 21, 2013

ப்லைன் பாலக் / Plain Palak


 தேவையான பொருட்கள்;
பாலக் - ஒரு கட்டு
வெங்காயம்  (சிறியது )- 1
தக்காளி ( சிறியது )-1
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1-2
கடுகு,சீரகம் - தலா கால் டீஸ்பூன்
பட்டர் அல்லது எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
விரும்பினால் - அலங்கரிக்க 1 டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் உபயோகிக்கலாம்.
கால் டீஸ்பூன் கரம் மசாலா விரும்பினால் பாலக்குடன் சேர்க்கலாம்.

செய்முறை:
 கீரையை சுத்தமாக அலசி பொடியாக நறுக்கி தண்ணீர் வடித்து கொள்ளவும்.பின்பு ஒரு கப் நீரை கொதிக்கவிட்டு அதனில் நறுக்கிய கீரை 3  நிமிடம்  போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.வெந்து பச்சையாகவே நிறம் மாறாமல் இருக்கும்.ஆறியபின்பு தண்ணீரை வடித்து விட்டு கீரையை மட்டும் எடுத்து விழுதாக்கி வைக்கவும்.
 இஞ்சி,  பூண்டு, பச்சை மிளகாய்,வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 வாணலியில் பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடுவரவும்,கடுகு,சீரகம் போட்டு வெடிக்க விடவும்.கீரையை தவிர நறுக்கி வைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றன் ஒன்றாய் சேர்த்து நன்கு வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.
 வதங்கிய பின்பு வேகவைத்து விழுதாக்கிய பாலக்கை சேர்க்கவும்.
 நன்கு கலந்து விட்டு உப்பு சரி பார்க்கவும்.சிம்மில் வைத்து ஒரு கொதி வரட்டும். அடுப்பை அணைக்கவும்.

 பவுலில் விட்டு விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் மேலே கலந்து விட்டு பரிமாறவும்.



சுவையான ப்லைன் பாலக் ரெடி.
சூடான சாதம் ரொட்டி வகைகளுடன் பரிமாறலாம்.
நான் வீட்டில் சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக அடிக்கடி செய்வதுண்டு.அருமையாக இருக்கும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆக போடக் கூடாது நறுக்கி தான் போட வேண்டும்.சீரகம் முழுதாகவோ தூளாகவோ போடலாம்.பொதுவாக பனீர்,உருளை,பருப்பு,சிக்கன் சேர்த்து பாலக் கீரையை சமைப்போம்.இப்படி ப்லைன் ஆக செய்தாலும் மிக அருமையாக இருக்கும்.பாலக்கின் சுவையே தனி தான்..


10 comments:

Vimitha Anand said...

Healthy dish akka

கோமதி அரசு said...

தக்காளி பச்சை மிளகாய் போட்டு செய்தது இல்லை செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி ஆசியா.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் உள்ள முக்கியமான குறிப்புகளுக்கும் நன்றி...

தொடர வாழ்த்துக்கள் சகோதரி...

S.Menaga said...

இதன் சுவையே தனிதான்,அருமையாக இருக்குக்கா..

மாதேவி said...

அருமையான குறிப்பு.

Priya Suresh said...

Wat a healthy dish akka, ricekuda supera irrukume.

Vijayalakshmi Dharmaraj said...

romba different ah iruku akka... lovely greeny healthy one...

இளமதி said...

பூண்டு சேர்ப்பதுண்டு தக்காளி, இஞ்சி சேர்த்ததில்லை. வித்தியாசமாக உள்ளது உங்கள் குறிப்பும்.
செய்து ருசித்துப்பார்க்கிறேன்.
நன்றி ஆசியா குறிப்பிற்கு!...

Shama Nagarajan said...

yummy and inviting dear

Nivedhanams Sowmya said...

cannot get more healthier or more tastier!!! Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...

Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway