Monday, June 24, 2013

சாம்பார் பொடி போட்ட சிக்கன் 65 / Chicken 65 with sambar powder

சென்ற வாரம் முழுவதும் வலைச்சரத்தில் பிஸியாக இருந்தேன் என்று நட்புகள் அனைவருக்கும் தெரியும், அந்த பிஸியில் நான் செய்து அசத்திய சிக்கன் 65.
ஊரில் இருந்து மகன் கொண்டு வந்த சாம்பார்பொடி,சிக்கன் 65  மசாலா பாக்கெட் இரண்டும் ஒரே இடத்தில் இருந்தது.
அவசர வேலையில் சமையலின் போது பாக்கெட் மாறிப்போச்சு.

இதோ அந்த சிக்கன் 65 செய்முறை:
தேவையான பொருட்கள்;
சிக்கன் - 1 கிலோ
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்(உங்க சுவைக்கு)
கரம் மசாலா அல்லது  (ஏலம் பட்டை கிராம்பு தூள்) அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
முட்டை - 1
எண்ணெய் - தேவைக்கு.
உப்பு - தேவைக்கு.
செய்முறை:

அவசரத்தில் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடித்த சிக்கனில் சாம்பார் பொடியை போட்டு விரவி விட்டேன். அதன் பின்பு தான் பார்க்கிறேன் சாம்பார் பொடி என்பதை, பின்பு மேனேஜ் செய்ய கரம் மசாலா,இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை என்று கலந்து ஊற வைத்தேன்.மூச்சு காட்டாமல் சிக்கனை பொரித்து பரிமாறினேன், பிள்ளைகள்,மா, இன்று காரசாரமாக வித்தியாசமாக டேஸ்டாக  இருக்கு என்று சொல்லியவண்ணம் சாப்பிட்டு விட்டு எழுந்தார்க்ள்.அப்பாடா ! தப்பித்தேன்.

 அதனால என்ன சொல்ல வரேன்னா சாம்பார் பொடி போட்டு சிக்கன் 65 செய்யலாம் என்ற ஒரு டிப்ஸ் தான்.


வீட்டில் சிக்கன் 65 மசாலா இல்லையா,சாம்பார் பொடி,கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து விரவி பொரித்து அசத்துங்க.

19 comments:

Mahi said...

//அதனால என்ன சொல்ல வரேன்னா சாம்பார் பொடி போட்டு சிக்கன் 65 செய்யலாம் என்ற ஒரு டிப்ஸ் தான்.//hahaha! நான் இன்னொரு டிப்ஸ் சொல்லவா? அடுத்த முறை சிக்கன் 65 போட்டு சாம்பார் வைச்சுப் பாருங்க, அதும் ஜூப்பரா இருக்கும்! ஹஹாஹிஹி!! ;) :)

Mahi said...

சக்தி சாம்பார் பொடி தான் நானும் யூஸ் பண்ணறேன் ஆசியாக்கா! சேம் பிஞ்ச்! ;))))

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சுவை போல... செய்து விடுவோம்...

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் பல...

உங்களுக்கு நன்றி...

Asiya Omar said...

ஆஹா ! மகி சிக்கன் பக்கம் புதுசாக வந்த மாதிரி இருக்கு,நான்வெஜ் பக்கம் உனக்கு நோ எண்ட்ரி, ஆமா இது தானே வேண்டாங்கிறது.

//நான் இன்னொரு டிப்ஸ் சொல்லவா? அடுத்த முறை சிக்கன் 65 போட்டு சாம்பார் வைச்சுப் பாருங்க, அதும் ஜூப்பரா இருக்கும்! ஹஹாஹிஹி!! ;) :) //

கோவை குசும்பு ஹி.ஹி..? !

Asiya Omar said...

தனபாலன் சார் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

இளமதி said...

ஆசியா... ச்சும்மா இங்கை உங்களை கண்டதும் வரவேற்க என் மகிழ்சியை, நன்றியை தெரிவிக்க வந்தேன் ஆசியா.

நோன்வெஜ் ஐட்டெம் இங்கே... ம்ஹும் அந்தப்பக்கம் உங்க குறிப்பு (பார்த்தும்) பார்க்கல நான்...:))).

வலைச்சரத்தில இம்முறை பின்னிப்பெடலெடுத்துட்டீங்க... ராப் அத்தனையும்!
உளம் நிறைந்த வாழ்துக்கள்!

Shama Nagarajan said...

inviting recipe..love it

Radha Rani said...

உங்க மறதி ஒரு பதிவுக்கு வழி காட்டியிருக்கு. இப்பிடியும் ஒரு நாள் செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்..:)

Vijayalakshmi Dharmaraj said...

ha ha... nalla recipe akka... mahi akka sonna tipsum nalla iruku... aana nanthan senjupakka mudiyathu...;)

ஸாதிகா said...

சாம்பார் பொடி போட்டு சிக்கனை பிரை செய்தீர்களா?அவசியம் டிரை பண்ணுகிறேன்.

கவிநயா said...

//அடுத்த முறை சிக்கன் 65 போட்டு சாம்பார் வைச்சுப் பாருங்க, அதும் ஜூப்பரா இருக்கும்!//

ரசித்தேன் :)

சாம்பார் சிக்கனையும் செய்து பார்த்து விடுகிறேன்...

S.Menaga said...

சாம்பார் பொடி போட்டு சிக்கன் 65யா,ம்ம்ம் சூப்பர்ர்,சிலநேரம் மறதியாக செய்யும் சமையல்தான் நன்றாக வரும்.அனுபவம்தான் அக்கா.

Vimitha Anand said...

Nalla idea va irukke. try panren

Vimitha Anand said...

Nalla idea va irukke. try panren

Sangeetha Nambi said...

Sambar podi pottu, chicken 65 ah ??!!! Super ponga...

Priya Suresh said...

Packet marinathula oru puthu disha akka,super kalakitinga ponga.

Meena Selvakumaran said...

kalakitinga ponga,mistake ium super aa matitinga.

Mahi said...

//மகி சிக்கன் பக்கம் புதுசாக வந்த மாதிரி இருக்கு// புதுசா வரலே, எட்டிப் பார்த்துப்புட்டு நைஸா நழுவிருவேன், ஆனா அன்னிக்கு உங்க நல்ல்ல்ல்ல நேரம், கமெண்ட்டிட்டேன்! ;)))))

/கோவை குசும்பு ஹி.ஹி..? !// ஹிஹி...ஹி! நான் சும்மா அமைதியா இருக்கத்தான்க்கா நினைக்கிறேன், ஆனா பாருங்க, இந்த கைதான் கம்முன்னே இருக்க மாட்டீங்குது! டொக்குடொக்குன்னு டைப் பண்ணி போஸ்ட்டும் பண்ணிருது! ஹிஹி...

Jaleela Banu said...

அவரசரத்தில் சில நேரம் இப்படி மாறுவதுண்டு, ஆனால் அது தான் நல்ல ருசியாக இருக்கும்.,
நான் முன்பு ம்மீனுக்கு போட்டு பொரிச்ச கதையா இருக்கு, அறுசுவையில் போஸ்ட் பண்ணேன் , எல்லாரும் என்ன சாம்பார் பொடி போட்டு மீன் ப்ரையான்னு கேட்டாங்கா..