Tuesday, June 4, 2013

பாகற்காய் வறுவல் / Bitter Gourd Fry

பாகற்காய் சாப்பிடாதவர்கள் கூட இப்படி வறுத்துக் கொடுத்தால் சாப்பிடுவார்கள்.கசப்பே தெரியாது.

தேவையான பொருட்கள்;
பாகற்காய் பெரியது - 1
உப்பு,மிளகாய்த்தூள்,எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:
பாகற்காயை நன்கு அலசி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கொள்ளவும்.

 நறுக்கிய பாகற்காயோடு உப்பு சேர்த்து பிரட்டி சுமார் ஒரு மணி நேரமாவது வைக்கவும்.
 தண்ணீர் ஊறி வரும்.அந்த தண்ணீரை வடித்து விட வேண்டும் அல்லது பிழிந்து எடுக்கவும்.
 பின்பு உப்பில் ஊறிய பாகற்காயை காட்டன் துணி அல்லது பேப்பர் டவலில் பரத்தி வைக்கவும்./நீர் எல்லாம் உறிஞ்சு விடும்.
 பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கொஞ்சம் கொஞ்மாக போட்டு பொன் முறுகலாக பொரித்து எடுக்கவும்.

 பொரித்து எடுத்தவற்றுடன் சிறிது காரத்திற்கு ஏற்ப மிளகாய்ப் பொடி தூவி குலுக்கி எடுக்கவும்.
சுவையான பாகற்காய் வறுவல் ரெடி.

இந்த வறுவல் வாய்க்கு ருசியாகவும்,தயிர் சாதம் லெமன் சாதத்துடன் சாப்பிட அருமையாகவும் இருக்கும்.
அப்பளம் பொரித்த,பூரி போட்ட எண்ணெய்யை வேஸ்ட் செய்யாமல் இந்தப் பாகற்காய் வறுவல் செய்ய பயன்படுத்தலாம்.




Sending this to Gayathri's Walk Trough Memory Lane @Shruti Rasoi.

13 comments:

ஸாதிகா said...

வாவ்..எனக்கு பிடித்த ஐட்டம்.

S.Menaga said...

சூப்பரா இருக்கு,அதுவும் சாம்பார் சாதத்துக்கு பொருத்தமா இருக்கும்..

Meena Selvakumaran said...

super tips.chips healthy and looks delish.

திண்டுக்கல் தனபாலன் said...

இதன் சுவையே தனி... நன்றி சகோதரி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

கசப்பான பாகற்காயை இனிப்பாக மாற்றியுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

VijiParthiban said...

Superb akka...

இளமதி said...

ம்.ம். எனக்கும் ரொம்பவே விருப்பமானதுதான். ஆனால் நான் பொரிப்பதில்லை. பேக்ட் பண்ணிவிடுவேன்.
பரவாயில்லை. இப்படியும் செய்து பார்த்துவிடுவோம்.
நல்ல குறிப்பு. பகிர்விற்கு நன்றி ஆசியா!...

Shruti Dhingra Wahi said...

Asiya ....please send me the pic so that I can keep it for the roundup :)
ShrutiRasoi

Priya Suresh said...

Romba pidicha pavakka fry..love it akka.

மாதேவி said...

சில தடவைகள் வடிய வைத்து செய்வேன். எங்கள் அம்மா இருந்தபோது அதிலுள்ள சத்துகள் போய்விடும் என்பார். இங்கு வெள்ளைப் பாவக்காய்கிடைக்கும் அது கசப்புக்குறைவாக இருக்கும் அப்படியே பொரிக்கலாம்.

இதை இங்கு நாங்கள் பொரியல் என்போம்.

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... பார்க்கவே பிடிச்சு இருக்கு....

என் மகளுக்கு மிகவும் பிடித்த காய் பாகற்காய்... :)

Saratha said...

parppatharkku nantraga irukkirathu.

padangal aththanaium arumai.

pkchandru chandru said...

Super and tasty