Sunday, June 16, 2013

தேசி தம் ஃப்ரைட் நூடுல்ஸ் / Desi Dum Fried Noodles

நூடுல்ஸ் என்றால் எல்லோருக்குமே கொஞ்சம் பிடிக்கும் தான்.ஒரே முறையில் செய்யாமல் வித விதமாக செய்து அசத்தலாம்.
நான் இன்று கொஞ்சம் பிஸியாக இருந்தேன்,கல்லூரி விடுமுறையில் வந்திருக்கும்  என் மகன் இன்று நான் நூடுல்ஸ் செய்கிறேன்மா, என்றார்,பிஸி என்றாலும் இலவசமாக ஒரு ரெசிப்பி கிடைக்கிறதே என்று அவர் செய்ய செய்ய அவசரமாக கிளிக்கினேன். பின்ன உங்களுடன் பகிர வேண்டாமா? ருசி..ஆஹா ! அருமை தான்.

தேவையான பொருட்கள்;
ஃப்ரைட் நூடுல்ஸ் - 4 பாக்கெட் ( 300 கிராம்)
எண்ணெய் -2- 3 டேபிள்ஸ்பூன்
முட்டை - 3 - 4( விருப்பமானால்)
காய்கறிகள் - விருப்பம் போல் (மஷ்ரூம்,கொடைமிள்காய்,கேபேஜ்,கேரட்)
அத்துடன் வெங்காயம் - 1
இது ஹோம் ஸ்டைல் எனவே
எல்லா மசாலாவும் கொஞ்சம் கொஞ்சம் போட்டார்.
மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள்,கரம் மசாலா தூள்( ஒரு கால், கால் ஸ்பூன் அளவு இருக்கும், கையால் தான் தூவ வேண்டுமாம்,ஸ்பூனால் போட்டால் ஒரே இடத்தில் விழுந்து விடுமாம்.)
உப்பு - தேவைக்கு.
அலங்கரிக்க - நறுக்கிய மல்லி இலை.
நூடுல்ஸ் உடன் இருக்கும் டேஸ்ட் மேக்கரும் கொஞ்சம்  போடலாம்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

செய்முறை:
காய்கறிகள், வெங்காயத்தை அழகாக ஒரு போல் நறுக்கிக்கோங்க.விரும்பினால் காய்கறியை ஓவனில் 2 நிமிடம் வேக வைத்து எடுத்து வைக்கலாம் ,நூடுல்ஸ் வடிக்க தேவையான அளவு தண்ணீர் கொதி வந்தவுடன் எல்லா பேக்கை இரண்டாக உடைத்து போடவும்.சிறிது உப்பு,எண்ணெய் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்தவுடன் பொல பொலவென்று வடிகட்டியில் வடித்து வைக்கவும்.

ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விடவும்,காய்ந்து வரும் பொழுது முட்டையை உடைத்து விடவும்,சிறிது உப்பு மட்டும் தூவவும், நன்கு பிரட்டி விடவும்.

அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
அடுத்து ஓவனில் வேக வைத்த காய்கறியை சேர்க்கவும்.சிறிது தண்ணீர் தெளிக்கவும்(இந்த ஸ்டெப் முக்கியம்),பிரட்டி விடவும்.
நூடுல்ஸ் சேர்க்கவும்.
நூடுல்ஸ் மேல் எல்லா மசாலாவும் மனம் போல் சேர்க்கவும்.உப்பு அல்லது டேஸ்ட் மேக்கர் சேர்க்கவும்,பிரட்டி விடவும்,சிறிது மீண்டும் தண்ணீர் தெளிக்கவும்.ஃப்ரைட் நூடுல்ஸ் என்பதால் ஒன்றொன்றாக இருக்கும்,உதிரியாக பக்குவமாக வடித்தால் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும்.அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.ஐந்து நிமிடம் தம்மில் இருக்கட்டும்.

திறந்தால் நூடுல்ஸ் அப்படியே விரிந்து பொல பொலவென்று வரும்.
திறந்து பிரட்டி விட்டுஅடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான தேசி தம் ஃப்ரைட் நூடுல்ஸ் ரெடி.
அருமையாக இருந்தது,ஊரில் லீவில் தாத்தா, பாட்டிக்கும் செய்து கொடுத்தாராம்,அவர்கள் ரசித்து சாப்பிட்டார்களாம்.நீங்களும் இந்த முறையில் செய்து பாருங்க.

வெஜ் நூடுல்ஸ் பிரியாணிக்கு இங்கு கிளிக்கவும்.

3 comments:

அமைதிச்சாரல் said...

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா :-))

ரொம்ப நல்லா டேஸ்ட்டியா செய்திருக்கார் உங்க ஜூனியர்.

Shama Nagarajan said...

delicious and tempting dear

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர ஆசிரியருக்கு அன்பான வாழ்த்துக்கள் சகோதரி... அசத்துங்க...