Thursday, June 13, 2013

மாம்பழ ஸ்ரீ கண்ட் / Mango Shrikhand


 தேவையான பொருட்கள்;
ஃப்ரெஷ் கெட்டித் தயிர் - 4 டேபிள்ஸ்பூன்
மாம்பழக் கூழ் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 பின்ச்
சாஃப்ரான் - 4 இதழ் ( சூடு பாலில் கரைத்தது)
சீனி - 1 டேபிள்ஸ்பூன்
அலங்கரிக்க- நறுக்கிய பாதாம்,பிஸ்தா பருப்பு

செய்முறை:
மேற்கூறிய பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.ஒரு மீடியம் சைஸ் மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி பாதியை கூழ் போல் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.மீதியை அலங்கரிக்க பயன்படுத்தவும்.தயிர் அதிகம் சேர்க்க விரும்பினால் கூட்டிக் கொள்ளலாம்.


ஒரு பவுலில் ஃப்ரெஷ்  கெட்டி தயிருடன் சர்க்கரை ஏலப்பொடி சேர்க்கவும்.
 அத்துடன் சாஃப்ரான் மில்க் சேர்க்கவும்.

 மாம்பழக்கூழ் சேர்க்கவும்.
 நன்கு எல்லாம் சேருமாறு கலந்து கொள்ளவும்.அலங்கரிக்க,மாம்பழ துண்டுகள், பாதாம் பிஸ்தா எடுத்துக் கொள்ளவும்.

பவுலில்  ரெடியான மாம்பழ ஸ்ரீ கண்ட் நறுக்கிய மாம்பழம்,பாதாம் பிஸ்தா அலங்கரித்து பரிமாறவும்.
 சூப்பர் சுவையுள்ள மாழ்பழ ஸ்ரீ கண்ட் ரெடி.

செய்து சுவைத்து பாருங்க,அசந்து போயிடுவீங்க..
மேனகா முன்பு செய்திருந்தாங்க, சில மாற்றங்களுடன் நான் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.நன்றி மேனகா.
மாம்பழ சீசன் முடிவதற்குள் இதை செய்து  பகிர வேண்டும் என்று நினைத்திருந்தேன்..போஸ்டிங் ரெடி செய்து விட்டு பார்க்கிறேன், இது தற்செயலாக 500 வது பதிவாக அமைந்து விட்டது.பொழுது போக்காக ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் இன்று 500 பதிவுகளோடுவலம் வந்து கொண்டிருகிகிறது.இவை அனைத்தும் உங்கள் அனைவரின் ஆதரவால் தான் சாத்தியமானது.  மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய மனமார்ந்த நன்றியினை வருகையாளர்கள் அனைவருக்கும் அன்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

24 comments:

priyasaki said...

500ஆவது பதிவுக்கு இனிய‌ நல்வாழ்த்துக்கள் ஆசியா.இன்னும் பல பதிவுகள் பகிர்ந்துகொள்ள இறையருள் கிடைக்கட்டும்.

priyasaki said...

இப்ப இங்கிருக்கும் வெயிலுக்கு நல்லதொரு சுவையான குறிப்பு.பார்க்கவே
உடன் செய்யத்தூண்டுகிறது. மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஐநூறாவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஆசியா! தொடரட்டும் உங்கள் சேவை.

மாம்பழ சீசன் முடிவதற்குள் நானும் செய்து ருசித்து விடுகிறேன்:)! நன்றி.

middleclassmadhavi said...

Congrats for 500th post!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிக்கும் மாம்பழமாக 500வது பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Radha Rani said...

தயிர் , மாம்பழம், சாப்ரான், பிஸ்தா, எல்லாம் ரொம்ப சத்தான பொருட்களால் செய்யப்பட்ட ஆரோக்கியமான சுவையான குறிப்பா இருக்கு. எல்லா பொருளும் கைவசம் இருக்கிறதுனால இப்பவே செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஆசியா..:)

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி சகோதரி...

500-வது சுவையான பதிவு... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

Kalpana Sareesh said...

sooper..

Kalpana Sareesh said...

sooperrr n my fav too..

GEETHA ACHAL said...

வாழ்த்துகள்....இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துகள்...


அருமையான ஸ்ரீகண்ட்...

Sangeetha Nambi said...

Congrats !!! Super lip smacking shrikhand...

Vimitha Anand said...

Congrats for the milestone... inda shrikhand romba arumaiya irukka

Shama Nagarajan said...

congrats akka..delicious and inviting

Jaleela Kamal said...

500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மாம்பழ ஸ்ரீ கண்ட் ரொம்ப அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேன் மேலும் 1000 க்கும் மேற்பட்ட குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

athira said...

அடடா என்னா ஒரு அருமையான மங்கோ மில்க் சேக். சூப்பர்ர்... நிறையக் குடிக்கலாம் ஆனா உடம்புக்கு நல்லதோ தெரியாதே.. இனிப்பெல்லோ... பிறகு குண்டாக்கிடும்:)

athira said...

500 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசியா. தொடர்ந்து எழுதுங்கோ.. தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஸ்ரீகண்ட் சாப்பிட்டு இருக்கிறேன். மாம்பழ ஸ்ரீகண்ட் புதியதாக இருக்கிறது. செய்வதற்கு சோம்பேறித்தனம். அதுனால தில்லிக்கு கொஞ்சம் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்...

500 வது பதிவிற்கு வாழ்த்துகள் ஆசியா.....

S.Menaga said...

500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா,குறிப்பு செய்து பார்த்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

இதனை சப்பாத்தி,பூரியுடன் தொட்டு சாப்பிட அட்டகாசமா இருக்கும்,பொண்ணுக்கு ரொம்ப பிடித்தது.

Mahi said...

500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா! ஶ்ரீகண்ட் அருமையா இருக்கு. நான் மேங்கோ லஸி குடிப்பேன், ஆனா ஶ்ரீகண்ட் ஏனோ பிடிப்பதில்லை. மாம்பழம் இருக்கு, செய்து பார்க்கிறேன்.

Sumi said...

romba nall iruku..naan srikhand, try panathu illai. will try this recipe.

அமைதிச்சாரல் said...

இதை எங்கூர்ல ஆம்ரகண்ட்ன்னு சொல்லுவோம். பூரி,சப்பாத்திக்கு தொட்டுக்க நல்லாருக்கும்.

ஐநூறுக்கு வாழ்த்துகள்..

Saratha said...

500வது குறிப்புக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிவுகள் பகிர வாழ்த்துக்கள்.

மாதேவி said...

இனிக்க இனிக்க 500 வது பதிவு. வாழ்த்துகள் ஆசியா.

Suchi Sm said...

good for summer... love the clicks asiya mam...