Sunday, June 9, 2013

முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா / Moringa Leaves Potato Stew

 முருங்கைக்கீரையுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்து பாருங்க, மணமும் சுவையும் அருமையாக இருக்கும்.முயற்சி செய்தேன் எங்களுக்கு பிடித்து விட்டது.நீங்களும் செய்து பாருங்க..


தேவையான பொருட்கள்;
முருங்கைக்கீரை - 2
உருளைக்கிழங்கு - 1 மீடியம் சைஸ்
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பூண்டு - 4 பல் பொடியாக நறுக்கியது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம்  முழுதாக அல்லது சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மிள்காய் வற்றல் - 2
உப்பு - தேவைக்கு,

அரைத்துக் கொள்ள:
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 3
பச்சை மிளகாய் - 1
சிறிது தண்ணீர் சேர்த்து மேற் சொன்ன பொருட்களை நைசாக அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டாக நறுக்கவும்.
வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன் உளுத்தம் பருப்பு,வற்றல் சேர்த்து சிவந்து வரும் பொழுது,பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.முழுச்சீரகம் என்றால் தாளிக்கும் பொழுது போடவும்  சீரகப் பொடி என்றால் வெங்காயம் வதக்கும் பொழுது போடவும். கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.உருளைக்கிழங்கு சேர்க்கவும்,அரிசிக்  கழனியிருந்தால் 2 கப் சேர்க்கவும்.உப்பு தேவைக்கு சேர்த்து இரண்டு விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.குக்கரில் விசில் வரும் பொழுது வீடே மணக்கும்.

 வெந்து இப்படி காணப்படும்.
 அரைத்த தேங்காய் விழுது சேக்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 நன்கு கொதிக்க விடவும், தேங்காய் வாடை மடங்கி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
 சுவையான முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா ரெடி.

சும்மாவே பவுலில் விட்டு சாப்பிடலாம்.
சூடான சாதத்துடன் சூப்பராக இருக்கும். அப்பளம் வடகம் தொட்டு சாப்பிட்டாலே அருமையாக இருக்கும்.நிச்சயம் செய்து சாப்பிட்டு பாருங்க.
.

Sending this to Gayathri's Walk Trough Memory Lane @Shruti Rasoi.

11 comments:

Princy Vinoth said...

Very healthy and different never tried this way.must try.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்கள், செய்முறை, பதிவு, பகிர்வு எல்லாமே அசத்தல் தான்.

பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாக இருக்கு... செய்து பார்ப்போம் சகோதரி... நன்றி...

Divya Pramil said...

Nice version akka, havent tried this type of salna.. Looks super delicious akka!!

S.Menaga said...

இவ்விரண்டும் சேர்த்து சமைத்ததில்லை,அருமை அக்கா!!

Saratha said...

hai very nice

Priya Suresh said...

Healthy and quite a new salna akka..

Sangeetha Nambi said...

Wow ! That'a a very different combo !

Mahi said...

வித்யாசமான குறிப்பா இருக்கு ஆசியாக்கா! கீரையை ப்ரெஷர் குக் செய்யணுமா? அதிலிருக்கும் சத்துக்கள் வீணாகாதா? தனியே கிழங்கை மட்டும் வேக வைத்து சேர்த்தா சுவை மாறுமா?

மு.கீரை கிடைக்கும்போது டிரை பண்ணிப் பார்க்கிறேன்.

Asiya Omar said...

மகி,ஒரு முறை செய்து பாரு,டேஸ்ட் சூப்பராக இருக்கும்.எனக்கு இங்கு கிடைக்கும் கீரை வெடு வெடு என்று இருக்கும் குக்கரில் வைத்தால் தான் சாஃப்டாக இருக்கு.ஒரே விசிலில் கூட வெந்து விடும்.சூப் மாதிரி குடிக்க சூப்பராக இருக்கும்.சத்துக்கள் எல்லாம் அதில் இருப்பது கிடைக்கும்..ஹி..ஹி.

வெங்கட் நாகராஜ் said...

முருங்கைக் கீரை இங்கே கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்......

கிடைச்சா செய்து பார்த்திட வேண்டியது தான். அது சரி, இது சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக சரிவருமான்னு ஒரு யோசனை.....