Wednesday, July 3, 2013

மீன் குழம்பு / Fish kuzhambu


மீன் குழம்பு விதம் விதமாக செய்து ருசிக்க எனக்குப் பிடிக்கும்.முன்பொரு முறை மனோ அக்கா வலைப்பூவில் பார்த்த அந்த மீன் குழம்பின் நிறம் என்னை செய்யத் தூண்டியதால் தேடி எடுத்து  செய்து பார்த்தேன் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.சிம்ப்ளி சூப்பர்.நீங்களும் செய்து பாருங்க.
இதோ ஒரிஜினல் ரெசிப்பி பார்க்க இங்கே கிளிக்கவும்.பகிர்வுக்கு மிக்க  நன்றி மனோ அக்கா.

தேவையான பொருட்கள்;
மீன் -  10 துண்டுகள்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 1  டேபிள்ஸ்பூன் ( காரம் அவரவர் விருப்பம்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1  1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்+ 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 அல்லது 1 . 1/2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 20
தக்காளி பொடியாக நறுக்கியது - அரை கப்
மாங்காய் - 4 துண்டுகள் ( விரும்பினால்)

செய்முறை:
புளியை 2 கப்  கொதி நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி ரெடியாக வைக்கவும்.
மீன் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விடவும்.எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் போடவும்,பொன்னிறமாக சிவந்து வரும் பொழுது வெங்காயம்,கருவேப்பிலை,மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.


வெங்காயம் சிவந்து வரும் பொழுது நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் சேர்க்கவும்.

நன்கு தக்காளி வதங்கி எண்ணெய் மேலே வரும்.
புளிக்கரைசலுடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள் ,உப்பு தேவைக்குச் சேர்க்கவும்.
நன்கு கொதித்து மசாலா வாடை மடங்கி வற்றி வரும்.மாங்காய் சேர்க்கவும்.மாங்காய் பாதி வெந்து வரும் பொழுது மீன் துண்டுகளை கவனமாகச் சேர்க்கவும்.
மீன் நன்கு வெந்து குழம்பு கெட்டியாக வரும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.மீதியுள்ள ஒரு டீஸ்பூன் நல்லெண்ணையை விடவும்.
அடுப்பை அணைக்கவும்.மூடி வைக்கவும்.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.பார்க்கவே நாவில் எச்சில் ஊறுகிறதா? செய்து ருசி பாருங்க,நான் காரம் கொஞ்சம் குறைத்துக் கொண்டேன். உங்கள் டேஸ்டிற்கு நீங்க செய்து அசத்துங்க.
தேங்காய் விடாமல்,பூண்டு,பச்சை மிள்காய்  சேர்க்காமல் நான் மீன் குழம்பு செய்ததில்லை,ஆனால் மனோ அக்கா அதெல்லாம் சேர்க்கவிலை.என்றாலும் சுவை அபாரம். இரண்டு நாள் வைத்து திருப்தியாக சாப்பிட்ட பின்பே இந்த பகிர்வு.


19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்ஸ்... படமே சூப்பர் போங்க...!

நன்றி சகோதரி...

Asiya Omar said...

நன்றி தனபாலன் சார்.உடன் கருத்திற்கு மகிழ்ச்சி.

S.Menaga said...

மனோ அம்மா சமையல் ரொம்ப பிடிக்கும்.சூப்பரான மீன் குழம்பு!!

Priya Suresh said...

Kuzhambu Va va'nu kupiduthu.

சே. குமார் said...

மண் பாத்திரத்தில் மீன் குழம்பு செய்தாலே தனி சுவைதான் அக்கா.

நாளை இதுதான் எங்கள் மதியா சாப்பாடு...

மனோ சாமிநாதன் said...

எனது மீன் குழம்பை செய்து பார்த்து ரசித்து, எழுதியிருப்பதற்கு அன்பு நன்றி ஆசியா! விரால் மீன் குழம்பு தனி ருசியாக இருக்கும். நீங்கள் என்ன மீன் போட்டிர்கள் குழம்பில்?

Asiya Omar said...

விலை மீன் மனோ அக்கா, நிச்சயம் விரால் மீனில் செய்து பார்க்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,மகிழ்ச்சி அக்கா.

ஸாதிகா said...

பார்க்கவே சூப்பர் ஆக உள்ளது ஆசியா

அமைதிச்சாரல் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

வேற ஒண்ணுமில்லை. ஜொள்ளுதான் :-))

Asiya Omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

மாதேவி said...

பார்க மட்டும் முடியும் :) நன்றாக இருக்கின்றது.

Jaleela Kamal said...

ஆஹா நாவூற வைத்து விட்டீர்கள்
மண் சட்டியில் குழம்பும் அந்த கலரும் உடனே சாப்பிட தூண்டுகிறது

Asiya Omar said...

மாதேவி கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி.

கவிக்காயத்ரி said...

வணக்கம் தங்களுடைய வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப்பார்வையிடவும். வாழ்த்துகள்.
http://blogintamil.blogspot.in/2013/08/6.html

புகைப்படபிரியை புனிதா said...

நன்றி பகிர்வுக்கு

Bharathi Dasan said...

super

Prabhakaran John said...

I do add what is given still I am not getting the right test.

kamalaveni said...


How many grams in one onion and one tomotto please answer mam

Asiya Omar said...

வெங்காயம் தக்காளி தலா 100 கிராம் கமலவேணி.நன்றி வருகைக்கு.