Saturday, July 6, 2013

நோன்பு கஞ்சி - வீடியோ சமையல் / Iftar Porridge -Video Recipe


அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.
என்னுடைய வலைப்பூவில் நோன்பு கஞ்சி குறிப்புக்கள்  வெரைட்டியாக ஏற்கனவே கொடுத்துள்ளேன். தற்பொழுது சிம்பிளாக நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று நான் செய்யும் முறையை வீடியோ சமையலாக பகிர்ந்திருக்கிறேன். நிச்சயம் இது புதிதாக கஞ்சி செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

video



வெரைட்டி கஞ்சிப் பகிர்வுக்கு இங்கே கிளிக்கவும்.
மட்டன் போன்  கஞ்சி பகிர்வைக் காண இங்கே கிளிக்கவும்.

நோன்பு கஞ்சி செய்முறையை பார்த்தீர்களா? தங்கள் கருத்துக்களைப் பகிருமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நீங்கள் பகிரும் கருத்துக்கள் எனக்கு மேலும் பல வீடியோ சமையல் வெளியிடும் ஊக்கத்தைத் தரும். இதுவரை என் சமையலை பார்வையிட்டு செல்பவர்களுக்கும், அன்போடு கருத்துக்களையும் மகிழ்ச்சியினையும் தவறாமல்  தெரிவித்து செல்பவர்களுக்கும் மிக்க நன்றி.

28 comments:

ஸாதிகா said...

தெளிவான குரலில்,அருமையான முறையில் மிகவும் சுலபமாக செய்ய கற்றுத்தந்து விட்டீர்கள் ஆசியா.வரும் ரமலானின் போது பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.ரமலான் முபாரக்.

Asiya Omar said...

ரமலான் முபாரக் தோழி .முதல் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.எனக்குத் தெரிந்த பல பேச்சிலர் சகோக்களின் வேண்டுகோளுக்காகவே இந்தக் குறிப்பை செய்து பகிர்ந்தேன் ஸாதிகா.

Meena Selvakumaran said...

super asiya madame.Lovely video,would love to try this time.will be very useful for everybody.please do upload more videos.

Mahi said...

ஹைய்ய்யா!! ஆசியா அக்கா முகத்தைப் பார்த்துட்டேனே! :) :)

கஞ்சி செய்முறை அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்கள்! நான் இதுவரை இந்தக் கஞ்சி சுவைத்ததே இல்லை..ஒவ்வொரு வருஷமும் ரமலான் டைமில உங்க வலைப்பூக்களுக்கு வரும்போது செய்து பார்க்க நினைப்பேன், இந்த வருஷமாவது கண்டிப்பா முயற்சித்துப் பார்த்துடறேன்!

வீடியோ பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா! கீப் ராக்கிங்! :)

திண்டுக்கல் தனபாலன் said...

என்னதான் நாங்கள் செய்தாலும், பக்கத்து உறவினர்கள் வீட்டில் கொண்டு வந்து கொடுக்கும் அளவு சுவை இருப்பதில்லை... உங்களின் குறிப்பின் படி செய்து பார்ப்போம்... நன்றி...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

கோமதி அரசு said...

ரமலான் நோன்பு கஞ்சி நேரடி செய்முறை விளக்கம் மிக அருமை ஆசியா.
உங்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.
ஆடி மாதம் பிறக்க போகிறது ’ஆடி கஞ்சி தேடி குடி’ என்று சொல்வார்கள் எல்லா அம்மன் கோவில்களிலும் ஆடி கஞ்சி பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது இல்லாமல் அம்மனுக்கு நிவேதிக்கப்படும்.
நான் உங்கள் முறையில் வீட்டில் செய்து குடிக்க குறித்து வைத்துக் கொண்டேன்.
உங்கள் குரல் மிக இனிமை.
உங்களையும் பார்த்துவிட்டேன்.
நன்றி.

Asiya Omar said...

மீனா வாங்க, கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி.

மகி,ஃப்ப்பூ இவங்க தானான்னு ஆகட்டும்னு தான்! சும்மா எட்டிப் பார்ப்பவர்கள் கூட அடிச்சி பிரண்டு ஒடட்டுமேன்னு தான்.நிச்சயம் முயற்சி செய்து பாருங்க,கஞ்சி செய்யும் பொழுது வீடே மணமாக இருக்கும்.

Asiya Omar said...

தனபாலன் சார் தொடர் வருகைக்கு நன்றி.இந்தளவு கஞ்சி செய்தால் நான்கு பேர் தாராளமாக குடிக்கலாம்.மைல்டாக இருக்கும்.செய்து பாருங்க.

Asiya Omar said...

கோமதிக்கா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.ஆடிக் கூழ் ருசித்ததில்லை.கேள்விபட்டிருக்கிறேன்.கஞ்சியை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க,இது ஒரு முறை அக்கா.நானும் சாமான்களை மாற்றி மாற்றி போட்டு ஒரு நாளைக்கு ஒரு விதம் என்று செய்து பார்ப்பதுண்டு.

Kanchana Radhakrishnan said...

கஞ்சி நேரடி செய்முறை விளக்கம் மிக அருமை ஆசியா.
ரமலான் வாழ்த்துகள்.

சே. குமார் said...

அருமையா பதிவு செய்திருக்கிறீர்கள் அக்கா...
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தோழியின் வீட்டில் உண்ட ரமலான் கஞ்சி நினைவுக்கு வந்தது....


வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

Asiya Omar said...

காஞ்சனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வாழ்த்திற்கு நன்றி குமார்.கருத்திற்கு மகிழ்ச்சி.

சகோ.வெங்கட் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

வை.கோ சார் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Shama Nagarajan said...

yummy and drooling

S.Menaga said...

அருமையான பகிர்வு,வாழ்த்துக்கள் அக்கா!!

aboobacker said...

thank u sister for posting this KANJI receipe.Insha allah I will try for this Ramadan.Only 2 days before I was searching ur blog for MPM nonbu kanji,but today u posted a new one really big help for us.
thanks indeed ---- abubacker

Asiya Omar said...

Thanks Shama for watching and for the lovely comments.

மேனகா வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

Asiya Omar said...

சகோ.அபூபக்கர் வருகைக்கு மிக்க நன்றி.இந்த முறையில் செய்து பாருங்க,நம்ம ஊர் கஞ்சி மாதிரியே இருக்கும்,பச்சை மிளகாய் காரத்திற்கு வேண்டுமானால் கூட்டிக் கொள்ளவும்.இங்கே வீட்டில் அண்ணனுக்கு கஞ்சி காரமாக இருந்தால் பிடிக்காது,அதனால் நான் 2 மிளகாய் தான் சேர்த்திருக்கேன்.
மொத்தமாகக் கூட கஞ்சிப் பொடி திரித்து வைத்துக் கொண்டால் 200 கிராம் அரிசிக்கு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு போட்டுக் கொள்ள்லாம்.செய்து பாருங்க,நீங்க எதிர்பார்க்கிற டேஸ்ட் கிடைக்கும்,
பாசிப்பருப்பு,கடலைபருப்பு,கேரட்,
பச்சை பட்டாணி,கொத்துக்கறி
இப்படி பிரியப்பட்டதையும் தனியாக தாளித்து பிரியம் போல மசாலா சேர்த்தோ அல்லது கஞ்சியுடன் வெந்தோ பின்பு தாளிக்கலாம்.நான் இங்கு கொடுத்திருப்பது பேசிக் கஞ்சி ரெசிப்பி.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

chitrasundar said...

சகோதரி ஆஸியா ஓமர்,

நல்ல கைதேர்ந்த செஃப் சொல்லித் தருவது போலவே உள்ளது உங்க வீடியோ சமையல்.குரலின் ஒத்துழைப்பும் சூப்பரா இருக்கு.உங்களையும் பார்த்த மகிழ்ச்சி.

கஞ்சியில் இவ்வளவும் சேர்ப்பது புதுசா இருக்கு.இதுவரை சுவைத்ததில்லை. நாங்க செய்வதெல்லாம் யாருக்காவது உடல் நலமில்லை என்றால் புழுங்கல் அரிசி நொய்யில் கொஞ்ச‌ம் குழைவாக செய்து தண்ணீர்+உப்பு சேர்த்து சாப்பிடுவோம்.இதுபோல் ஒருதடவை செய்து பார்க்கிறேன்.நன்றிங்க.

Asiya Omar said...

சித்ரா சுந்தர் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி. செய்து பாருங்க,டேஸ்டாக இருக்கும்,நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

Manjula Bharath said...

asiya dear first time here to this blog of your's :) lovely video tutorial :)

ராமலக்ஷ்மி said...

வீடியோ பகிர்வு அருமை. புதிய முயற்சி தொடரட்டும்.

கோவை2தில்லி said...

இதுவரை நோன்பு கஞ்சி குடித்ததில்லை. உங்கள் காணொளி செய்து பருக தோன்ற வைத்தது. நன்றி. ரமலான் நோன்பு வாழ்த்துகள்.

Mohideen Masthan said...

சூப்பர் மேடம்,உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்,

கறி கஞ்சி பத்தி சொன்னா நல்ல இருக்கும்

Asiya Omar said...

வெரைட்டியாக கஞ்சி பகிர்வுக்கு
கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.இதில் மட்டன் கீமா கஞ்சி இருக்கு.
http://asiyaomar.blogspot.ae/2010/08/blog-post_18.html

மட்டன் போன் கஞ்சிக்கு:
http://asiyaomar.blogspot.ae/2010/08/blog-post_30.html

மைதீன் மஸ்தான் கருத்திற்கு நன்றி.

Asiya Omar said...

Thanks Manjula Bharath for your lovely comments.

ராமலஷ்மி கருத்திற்கு நன்றி மகிழ்ச்சி.

கோவை2 தில்லி வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

Anbarasu Annamalai said...

எளிய செய்முறை, அருமையான விளக்கம். நன்றி.