Monday, July 1, 2013

ஒட்ஸ் பிரட்டிய சுறா மீன் வறுவல் / Oats coated shark fish fry



பொதுவாக சுறா மீனில் புட்டோ அல்லது  மிளகு வைத்து ஆணம் செய்வோம்.ஆனால் இந்த ஃப்ரை சூப்பர் சுவையாக இருந்தது.நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
 சுறா மீன் துண்டுகள்( போன்லெஸ்) - 500 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1-  2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - ஒரு சிறிய பழம்
உப்பு - தேவைக்கு

ஊறிய மீனில் பிரட்ட:
முட்டை - 1
(விருப்பமானால் 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து முட்டையுடன் கரைத்துக் கொள்ளலாம்)
பொடித்த ஓட்ஸ் - ஒரு கப் அல்லது தேவைக்கு

பொரிக்க தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை:

தோல் நீக்கி முள் நீக்கி கட் செய்து வாங்கிய சுறா மீன் துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி தண்ணீர் வடித்துக் கொள்ளவும்.சுத்தமாக தண்ணீர் இருக்கக் கூடாது.
பின்பு மீன் துண்டுகளோடு மேற்சொன்ன தேவையான பொருட்கள் சேர்த்து விரவி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

நன்கு ஊறிய மீனை கலக்கிய முட்டைக் கரைசலில் முக்கி எடுத்து மிக்ஸியில் பொடித்த ஒட்ஸில் பிரட்டி வைக்கவும்.ஃப்ரிட்ஜில் அல்லது ஃப்ரீசரில் கூட இப்படி முன்பே ரெடி செய்து வைத்துக் கொண்டு குளிர் போன பின்பு பொரிக்கலாம்.


ஒரு வாணலியில் எண்ணெய் காய விடவும்.
எண்ணெய் பக்குவமாக காய்ந்து வரும் பொழுது ரெடி செய்த மீன் துண்டுகளைப் போட்டு  பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
கிச்சன் பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடிய விடவும்.
உடனே பரிமாறவும்.மொறு மொறுவென்று வெளியேயும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.
சுவையான ஓட்ஸ் பிரட்டிய சுறா மீன் வறுவல் ரெடி.

இது அபுதாபி போயிருந்த சமயம் என் தங்கை ஸாஹிதா செய்து பரிமாறியது. சூப்பராக இருந்தது. நீங்களும் நல்ல பால் சுறாவாக இருந்தால் வாங்கி இப்படி குட்டீஸ்க்கு செய்து கொடுங்க. ஆறினாலும் வெளியே மொறு மொறுப்பு அப்படியே இருக்கும். சுறாவில் நான் முயற்சி செய்ததில்லை என்பதால் உடனே மொபைலில் கிளிக்கினேன் உங்களுடன் பகிர்வதற்காக.


11 comments:

Priya Suresh said...

Super crispy fish fry, semaiyaa irruku akka..

திண்டுக்கல் தனபாலன் said...

புதுசு புதுசா செய்கிறீங்க...!

வாழ்த்துக்கள்...

செய்முறைக்கு நன்றி...

Asiya Omar said...

Thanks Priya,ithu en co-sister shahitha seythathu.Super hit.

நன்றி தனபாலன் சார்,கருத்திற்கு மகிழ்ச்சி.

Shama Nagarajan said...

yummy and inviting recipe...

GEETHA ACHAL said...

wow...Different and yummy fry...

Jaleela Banu said...

ரொம்ப நல்ல இருக்கு ஆசியா.

சே. குமார் said...

புதிய செய்முறை அக்கா...
அருமையா படத்துடன் சொல்லியிருக்கீங்க...

Asiya Omar said...

ஷாமா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

ஜலீலா மிக்க நன்றி.

சகோ.குமார் மிக்க நன்றி.

ஸாதிகா said...

பார்ப்பதற்கு மீன் துண்டுகள் போல் இல்லை.கேரளா சுக்குவரட்டி போல் இருந்தது..ஹி..ஹி...தோழி,நான் சுறா மீனே சாப்பிடுவதில்லை.

Asiya Omar said...

ஸாதிகா போட்டோ சரியில்லைன்னு நினைக்கிறேன்,அருமையாக இருந்தது.சுறா மீன் சாப்பிடமாட்டீங்களா? தோழி.கருத்திற்கு நன்றி.

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.

எங்கள் அம்மா நன்கு சுறாமீன் சமைப்பார்.