Sunday, September 15, 2013

பீட்ரூட் பச்சடி மற்றும் ஓணம் சத்யா குறிப்புக்கள் / Beetroot Pachadi & some other onam sathya recipes.

 ஓணம் கேரளாவில் மட்டுமல்ல நம்  கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டிலும் பரவலாக மலையாளிகள் வசித்து வருவதால் கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணம் நம்ம ஊரிலும் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
ஓணம் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் நெஞ்சார்ந்த ஒணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஒன்பது வகை சுவைகளில் ஓணம் சத்யா பரிமாறப்படுகிறது. கிட்ட தட்ட 64 வகை உணவுகள் இருக்கிறதாம்.
இன்று ஓணம் ஸ்பெஷலான பீட்ரூட் பச்சடி குறிப்பினை உங்களுடன் பகிர்கிறேன்.இக்குறிப்பை முன்பே என் ஆங்கில ப்ளாக்கில்  (English Blog) பகிர்ந்திருக்கிறேன்.

பீட்ரூட் பச்சடி:
தேவையான பொருட்கள்;
பீட்ரூட் - துருவியது 1 கப் ( 100 கிராம்)
கெட்டித்தயிர் - 3- 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
தாளிக்க தேவையான பொருட்கள்;

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு& உளுத்தம்பருப்பு - தலா அரைடீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 1
கருவேப்பிலை - சிறிது
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2- 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்-1 - 2
கடுகு - கால் டீஸ்பூன்

சேர்த்து அரைக்கவும்.
 செய்முறை:
கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை,வற்றல் போடவும்.

 துருவிய பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

 பீட்ரூட் வெந்த பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்கட்டும்.கெட்டியாக இருக்கும். கொதித்து கெட்டியான பின்பு கெட்டித்தயிர் சேர்த்து உடன் அடுப்பை அணைக்கவும்.

 சுவையான கேரளா ஓணம் ஸ்பெஷல் பீட்ரூட் பச்சடி தயார். இது சூடு சாதத்துடன் தொட்டோ பிரட்டியோ சாப்பிட சுவையாக இருக்கும்.


என் வலைப்பூவில் பகிர்ந்த ஒரு சில ஓணம் சத்யா குறிப்புக்கள்.
( கிளிக் செய்து பார்க்கவும்.)

கேரள பருப்புக்கறி
கேரள கடலைக்கறி
மாம்பழ புளிசேரி
உல்லித்தீயல் 
வெண்டைக்காய் கிச்சடி
ஓலன்
சேனைத்தீயல் 
எரிசேரி
அவியல்
நேந்திரங்காய் சிப்ஸ்
அடைப்பிரதமன் ( 2 வகை)வித விதமாக மலர்க்கோலம் ஓணம் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சம்.முன்பொரு சமயம் ஓணத்தின் போது எங்கள் வீட்டுப் பக்கம் உள்ள லூலூ ஹைப்பர்மார்க்கெட்டில் நான் கிளிக்கிய காய்கறி பழங்களில் ஆன ஓணம் கோலம் உங்கள் பார்வைக்காக.


13 comments:

ஸாதிகா said...

ஆஹா அசத்துறீங்க ஆசியா.

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா.மகிழ்ச்சியும் கூட.

Saratha said...

செய்முறை,படங்கள் இரண்டும் அருமை.

கோமதி அரசு said...

ஆசியா, பீட்ரூட் பச்சடி மிக அருமை.
பழ,காய்கறி கோலப் பகிர்வு அழகு.
ஓணப்பண்டிகை வாழ்த்துக்களுக்கு நன்றி.

Manjubashini Sampathkumar said...

ஹீமோக்ளோபின் குறைபாடு இருப்பதால் பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி படுத்தல் வீட்டில்.. பீட்ரூட் எனக்கு பிடிக்காது. ஆனால் சாப்பிட்டே ஆகவேண்டிய கட்டாயம்.. இது புதிவிதமான ரெசிப்பியா இருக்கு.. இப்படியே நானும் செய்து பார்த்துடறேனேப்பா. பார்க்கவே அழகா வேற இருக்கு படங்கள்.. அன்பு நன்றிகள்பா எனக்கு பிடிச்ச தயிர் வேற சேர்த்திருக்கீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை. படங்களும் கோலமும் அழகு. பாராட்டுக்கள்.

Asiya Omar said...

சாரதா தொடர் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கோமதியக்கா உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

மஞ்சுபாஷினி செய்து பாருங்க, சுடு சாததில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

Asiya Omar said...

வை.கோ சார் மிக்க நன்றி.பாராட்டிற்கு மகிழ்ச்சி.

S.Menaga said...

சூப்பர்ர் பச்சடி...

Shama Nagarajan said...

wow!!!Tempting !!! lovely pic dear

Savitha Ganesan said...

romba colourfull ana pachadi .super ponga.

athira said...

பீற்றூட் பச்சடி சூப்பர். அதெதுக்கு றைசால மறைச்சிட்டீங்க பீற்றூட் பச்சடியை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

மரக்கறிக் கோலம் சூப்பர்.

Priya Suresh said...

eye catching pachadi akka..my fav.