Monday, September 9, 2013

சுரைக்காய் பொரியல் / Bottle gourd stir fry

சுரைக்காய் எங்கள்  வீட்டில் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று.மாதம் இரு முறையாவது மெனுவில் வரும்.
இதோ சுவையான சுரைக்காய் பொரியல் உங்களுக்காக:சைடு பாரில் இருக்கும் சுரைக்காயை கிளிக் செய்தால் மற்ற சுரைக்காய் 
குறிப்புக்களைப்  பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;
சுரைக்காய் - 400 கிராம்.( முழுசு - பிஞ்சாக இருக்கும்)
( தோல் சீவி, கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும், பிஞ்சு சுரைக்காயாக இருந்தால் விதை அவ்வளவாக இருக்காது.நான் விதை நீக்குவதில்லை)
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் ( ஒரு மணி நேரம் ஊறவைத்தது)
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
நறுக்கிய வெங்காயம் - மீடியம் சைஸ் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.

கொர கொரப்பாக அரைக்க:
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிள்காய் - 2 -4
சீரகம் -அரை டீஸ்பூன் 

அலங்கரிக்க -நறுக்கிய மல்லி இலை சிறிது.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.நறுக்கிய சுரைக்காய், ஊறவைத்த பாசிப்பருப்பு சேர்த்து பிரட்டி விடவும்.அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.சுரைக்காயும் பாசிப்பருப்பும் ஒற்றை ஒற்றையாய் வெந்து வரும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.அல்லது பாசிப்பருப்பை தனியாக வேக வைத்து சுரைக்காய் வெந்த பின்பும் சேர்க்கலாம்.
வெந்து இப்படி காணப்படும். 

கொரகொரப்பாக  அரைத்த தேங்காய்,மிளகாய்,சீரகம்  அரவையை சேர்க்கவும்.சட்னி மாதிரி அரைத்து விடக் கூடாது.முதலில் மிளகாய் சீரகம் போட்டு  அரைத்து விட்டு பின்பு தேங்காய் துருவல் போட்டு ஒரே சுற்று அவ்வளவு தான்.
(அரைக்காமல் அப்படியே தேங்காய் துருவல் சேர்ப்பதாய் இருந்தால் சீரகத்தை தாளிப்பில் சேர்த்து,பச்சை மிளகாயை கீறி போடவும்,முழுச்சீரகம் சேர்க்கப் பிரியபடாத்வர்கள்  சீரகப் பொடி கூட கால் ஸ்பூன் சேர்க்கலாம்,மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். உங்கள் விருப்பம் தான்,.)
 நன்கு சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி விடவும்.

 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.பிரட்டி விட்டு பரிமாறவும்.இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கு அனுப்பி வைக்கிறேன்.

14 comments:

Manjubashini Sampathkumar said...

சுரைக்காய் சாம்பார் தான் வைப்போம் நாங்க. சிலசமயம் கூட்டு செய்வோம். அதையும் பிள்ளைகள் நைசா தொடாது. இப்ப நீங்க போட்டிருக்கிற குறிப்பு கண்டிப்பா சுவையாக இருக்கும்.. படங்களும் பார்க்க ரொம்ப அழகா இருக்குப்பா.. கண்டிப்பா செய்து சாப்பிடுகிறோம்.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

இளமதி said...

ஆசியா... பார்க்கவே வாயூறுதே..:)
இதுவரை சுரைக்காயில் பொரியல் செய்ததில்லை.
ஏனைய காய்ப் பொரியல்கள் இப்படித்தான் நானும் ப.மி, தே.பூ, சீரகம் அரைத்துச் சேர்ப்பது வழக்கம்.

இக்காய் அதிகம் தண்ணீர்விடும், கொளகொளவெனப் பொரியல் போய்விடும் என்பதால் இதுவரை செய்யத் தோணவில்லை..

இனிமேல்க் காய் கிடைக்கும்போது செய்துடணும்..

பகிர்விற்கு மிக்க நன்றி ஆசியா!

ஸாதிகா said...

சுரைக்காயே சமைத்ததில்லை ஆசியா.டிரை பண்ணுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய செய்முறை... நன்றி...

இமா said...

நாங்களும் வறை (பொரியல்தான்) செய்வோம். உங்கள் குறிப்பு நிறையவே வித்தியாசமாக இருக்கிறது ஆசியா. எனக்கு சுரைக்காய் சொதியில் போட்டு எடுத்துச் சாப்பிடப் பிடிக்கும்.

Meena Selvakumaran said...

super aa iruku.love this version.

Saratha said...

சுரைக்காய் பொரியல் சாம்பார் சாதத்திற்கு ஏற்றஅருமையான பொரியல்.

Jaleela Kamal said...

பாசிப்பருப்பு போட்டு செய்த பொரியலுன்னா சும்மாவா சாப்பிடுவேன்.

எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு தான் அவ்வளவாக சுரைக்காய் ஓடாது.
பார்க்கவே அருமையாக இருக்கு

சே. குமார் said...

பார்க்கவே அருமையா இருக்கு. எனக்கு சுரக்காய் ரொம்ப பிடிக்கும் செஞ்சு பார்த்திருவோம்....

Shama Nagarajan said...

delicious recipe

Priya Anandakumar said...

Very very healthya and very inviting akka...
Thanks for linking it to the wtml event.
Waiting for more delicious entries from you akka...

கோமதி அரசு said...

நாங்களும் இப்படி செய்வோம். ஆனால் பச்சைமிளகாய்க்கு பதில் காய்ந்த மிளகாய், சீரகம், ஒரு பல் பூண்டு தேங்காய் கொர கொரப்பாய் அரைத்து போடுவோம். பாசிபருப்பும் மொட்டு மொட்டாய் வேக வைத்து போடுவோம்.
உங்கள் பக்குவத்தில் பச்சை மிளகாய் போட்டு செய்து பார்க்கிறேன்.

Mahi said...

We buy suraikkai every week! Shall try this poriyal soon!

Mahi said...

Akka, I prepared this poriyal for today's lunch. Thanks for the recipe! Btw, my green chilies were very mild n we had the poriyal almost without karam! ;) but it tasted good! :)