Saturday, September 7, 2013

கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி / Coriander Peanut Chutney / Healthy Green Chutney



 தேவையான பொருட்கள்;
கொத்தமல்லி கீரை - சிறிய கட்டு
வறுத்த தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
பச்சை மிள்காய் - 2
பூண்டு - 1-2 பல்
மிளகு - 2
சீரகம் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைப் பழம் - பாதி
உப்பு - தேவைக்கு.



 செய்முறை:
கொத்தமல்லி இலை ஆய்ந்து மண் போக நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
மேற்சொன்ன அனைதுப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.உப்பு பார்த்து சிறிதளவு சேர்க்கவும்.


சுவையான சத்தான கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி ரெடி.விரும்பினால் கடுகு ,கருவேப்பிலை தாளித்து கொட்டலாம்.
இதனை ப்ரெட் டோஸ்ட் செய்து,  அப்படியே தடவி சூடாக மடித்து சாப்பிட்டால் செம ருசி.

 இல்லாட்டி இருக்கவே இருக்கு,நம்ம இட்லி தோசை,தொட்டு சாப்பிட்டு பாருங்க.சூப்பராக இருக்கும்.நமக்கும் ஏதோ ஹெல்தியான சட்னி பரிமாறிய சந்தோஷமும் கிடைக்கும்.


இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கு அனுப்பி வைக்கிறேன்.

12 comments:

Priya Anandakumar said...

Very healthy and delicious chutney akka, love the color and the flavour...
Thank you for linking it to the wtml event @ priyas virundhu
waiting for more mouthwatering recipes from you akka...

ஸாதிகா said...

அருமையான சட்னி ஆசியா.அவசியம் டிரை பண்ணவேண்டும்

இளமதி said...

அருமையான சட்னியுடன் ஆரம்பம்...
ம். செய்து பார்க்கணும்.

கொத்தமல்லி முளைக்கப் போட்டிருக்கிறேன். முளைத்து வருகிறது. இன்னும் சில நாட்களில் செய்யலாம்..:)

ஆமா வேர்க்கடலை - 2 டீஸ்பூன்-ன்னு போட்டிருக்கிறீங்க வறுத்ததா? பச்சையாகவேவா.. .

நல்ல பகிர்வு.
நன்றியும் வாழ்த்துக்களும் ஆசியா!

Asiya Omar said...

ப்ரியா உடன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா செய்து பாருங்க.நன்றி தோழி.

இளமதி வறுத்த தோல் நீக்கிய வேர்க்கடலை தான்.செய்து பாருங்க.வருகைக்கு நன்றிபா.

இமா said...

வேர்க்கடலை, பூண்டு, மிளகு சேர்க்காமல்தான் செய்திருக்கிறேன். அடுத்த தடவை நிச்சயம் வேர்க்கடலை சேர்ப்பேன் ஆசியா.

Saratha said...

நல்ல சுவையான சட்னி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான சட்னி. பாராட்டுக்கள்.

“சட்னி இல்லையேல் பட்னி"

என நினைக்கும்

VGK

Kanchana Radhakrishnan said...


அருமையான சட்னி.பகிர்விற்கு நன்றி.

கோமதி அரசு said...

கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி செய்முறை நன்றாக இருக்கிறது செய்து பார்க்கிறேன் ஆசியா.

Vijayalakshmi Dharmaraj said...

wow super akka... favorite combo...

Mahi said...

கொத்தமல்லியை பச்சையாக அரைச்சு சட்னி செய்வதே இல்லை! அப்படி செய்தாலும் வட இந்திய சாட் ஐட்டஙக்ளுக்குதான் செய்வேன். உங்க சட்னில இருக்க பொருட்கள் எல்லாமே புது காம்பினேஷன் எங்களுக்கு. சீக்கிரம் செய்து பார்த்து சொல்றேன் ஆசியாக்கா!

priyasaki said...

குறிப்பை பார்க்கவே செய்யத் தூண்டுகிறது.நான் வேர்க்கடலை சேர்த்ததில்லை.சேர்த்து செய்து பார்க்கிறேன் ஆசியா.