Thursday, September 26, 2013

ஈசி ஆப்பம் / Easy Appamதேவையான பொருட்கள்;
பச்சரிசி - 300 கிராம் (ஒரு டம்ளர்)
தோல் நீக்கிய உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - அரை அல்லது1 டீஸ்பூன்
சோறு - 1 சிறிய கப் (விரும்பினால்)
சோடா உப்பு - பெரிய பின்ச்
சீனி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்
12 - 15 ஆப்பம் வரும்.

செய்முறை:
அரிசி,உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
 தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.சாதம் சேர்க்காமல் அரைத்து வைத்து பொங்கி வந்த பின்பு சுட்டாலும் சூப்பராகத்தான் இருக்கும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து விடவும். உப்பு,சோடா உப்பு,சீனி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும்.முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.

 குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும்.மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால் லேசாக இருக்கும்.நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளக்கமாக கரைத்து கொள்ளவும்.

 ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு விடவும்.ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும்.மூடி போடவும்.

 சுற்றி லேசாக சிவந்து ஆப்பம் வெந்து வரும்.

அகப்பையக் கொண்டு லேசாக சைடில் விட்டால் ஆப்பம் அப்படியே சூப்பராக சட்டியில் இருந்து எழும்பி வரும்.
எடுத்து சூடாக பரிமாறலாம்.

 நடுவில் ஸ்பாஞ்சாக சுற்றி முறுகலான ஆப்பம் ரெடி. விருப்பமான சைட் டிஷ் உடன் பரிமாறவும்.


ஆப்பம் தேங்காய்ப்பாலுடன் சூப்பர் காம்பினேஷன்.


 
சிக் பீஸ் ஸ்டூ ரெசிப்பிக்கு இங்கு கிளிக்கவும்.

25 comments:

priyasaki said...

ஆவ்வ் ஆப்பம்.எனக்கு மிகவும் பிடித்தமான டிஷ்.எப்போ பதிவு போடுவீர்கள் என எதிர்பார்த்திருந்தேன். நன்றி நன்றி. உடனே செய்துசாப்பிடனும் போல் படங்களும் போட்டு விளங்கப்படு த்தியிருக்கிறீங்க. கண்டிப்பா செய்கிறேன். நன்றி ஆசியா.

ஸாதிகா said...

வாவ்.. புஸு புஸுஎன்று அருமையான ஆப்பம்.இன்னும் வழக்கத்தில் உள்ள வெரைட்டி ஆப்பம் போடுங்கள் தோழி.

Saratha said...

appam seymuraium vilakkamum wow!

இமா said...

எங்கள் பக்கம் அப்பத்துக்கு உளுந்து வெந்தயம் எதுவும் சேர்ப்பதே இல்லை ஆசியா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆப்பத்திற்கு உப்புக்கு பதில் வெல்லம் சேர்த்தால் அது நாங்கள் செய்யும் அப்பமோ?

சரியாகத்தெரியவில்லை.

பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.

Asiya Omar said...

நன்றி,ப்ரியசகி, வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.இது ஒரு வகை ஆப்பம்.

ஸாதிகா நன்றி,உங்களுக்கு தெரியாததா?நிச்ச்யம் எனக்கு தெரிந்தவற்றை போடுகிறேன்.

நன்றி சாரதா,கருத்திற்கு மகிழ்ச்சி.

இமா உங்க முறையை எங்களுக்கும் சொல்லி தாங்களேன்,எனக்கு ஆப்பம் என்றால் கொள்ளை இஷ்டம்.

Asiya Omar said...

நன்றி,வை.கோ சார்.எங்கள் வீட்டில் ஊரில் புகாரி காக்கா என்று ஒருவர் சமையல் செய்தார்,அவர் பக்குவம் இது.

இளமதி said...

நல்ல ரெஸிப்பி ஆசியா!..

நான் படத்தைப் பார்ர்து ஆப்பமெண்டவுடனே பாலாப்பமாக்குமென நினைச்சன்..
இதற்கு நடுவில பால்(தேங்காய்ப் பால்) விட்டு சுடுறதில்லையோ..:0

நாங்க பொதுவா ஆப்பம் ன்னா பணிஸ் போல சைஸில் தாச்சிச் சட்டியில் சுடுவோம்.
இப்படி ஆப்பம் ன்னா.. அது நடுவில தே.பால் விட்டு சுடுவோம்... :) அதை பாலாப்பம் என்போம்.
ஆனா பணிஸ் ஆப்பத்துக்கு தயாரிப்பு முறை வேறு..

உங்களின் குறிப்புப் போலவே நானும் பால் ஆப்பத்துக்கு தயாரிப்பதுண்டு.

பகிர்விற்கு நன்றி ஆசியா!..

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்விற்கு நன்றி...

கோமதி அரசு said...

ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள தக்காளிசட்னி, தேங்காய் சட்னியா ?
படத்தில் தெரிவதை கேட்கிறேன்.
சாதம் கலக்காமல் செய்து இருக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

athira said...

ஆவ்வ் சூப்பர் குறித்து எடுத்துவிட்டேன்ன்.. விரைவில் செய்யோணும்.

athira said...

சோறும் பச்சை அரிசியும் ஒரே அளவோ ஆசியா?

Asiya Omar said...

இளமதி ஆப்பம் சுடும் பக்குவம் ஊருக்கு ஊர் கொஞ்சம் மாறுபடும் ஆனால் அனைவரும் ஆப்பத்திற்கு தேங்காய்ப்பால் தொட்டுச் சாப்பிடுவது மட்டும் ஒரே போல்.

நன்றி தனபாலன் சார்.

கோமதியக்கா ஆப்பம் என்றால் பச்சரிசி மெயின்,மத்தபடி ஆப்பச் சோடா இதனுடன் சேர்மானம் அவரவர் விருப்பம்.ஆப்பம் என்றால் எங்கள் வீட்டில் தேங்காய்ப் பால்,தேங்காய்ச் சட்னி தான்,இல்லாட்டி ஏதாவது சால்னா, சும்மா கலர் காம்பினேஷனுக்கு இட்லிக்கு செய்த சட்னியை வைத்தேன்.

Savitha Ganesan said...

Aappam romba nalla vandhirukku akka.

Asiya Omar said...

அதிரா மிக்க நன்றி.செய்து பாருஙக்க.பச்சரிசி 300 கிராமிற்கு சோறு ஒரு சின்ன கப் அவ்வளவே.

VijiParthiban said...

மிகவும் பிடித்தமான டிஷ்.செய்து பார்க்கிறேன்....நன்றி ஆசியா அக்கா ...

சே. குமார் said...

ஆப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....

Asiya Omar said...

மிக்க நன்றி,விஜி.வருகைக்கு மகிழ்ச்சி.

Priya Suresh said...

Akka,yen ippadi yenna kolluringa, super appam akka, thenga paalkuda naan appadiye saapiduven.

Chitra said...

Thank you for this easy recipe

Kanchana Radhakrishnan said...

பகிர்விற்கு நன்றி.

Priya Anandakumar said...

Super appam akka, perfect and lovely...
Thanks for linking it to the wtml event, waiting for delicious entries from you akka...

மாதேவி said...

சுவையான ஆப்பம்.

Suja Md said...

wow...love it..My favorite breakfast..:)

Mahi said...

Soft n spongy appam! Delicious!