Tuesday, September 24, 2013

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu

இந்தச் செவ்வாய் தமிழர் சமையலுக்கு என்னுடைய பகிர்வு மணத்தக்காளிக் குழம்பு. நீங்களும் ஃப்ரெஷ் மணத்தக்காளி கிடைத்தால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளி - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.

தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ப்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 10
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -3 அல்லது 4
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மணத்தக்காளி காயை காம்பு நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல், உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு,மிளகு நன்கு மணம் வரும் படி சிவற வறுக்கவும்,அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்து லேசாக வதக்கவும்.


 ஆற விடவும்.
 சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு,கருவேப்பிலை,வெடிக்கவும் பெருங்காயம்,சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த மனத்தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 புளித்தண்ணீர்,தேவைக்கு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும், மணத்தக்காளி வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும். குழம்பு கெட்டியாகும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.விரும்பினால்  சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

 எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.சிறிது மூடி வைக்கவும்.
 சுவையான மணத்தக்காளிக் குழம்பு ரெடி.இத்துடன் சுடு  சாதம் பொரித்த அப்பளம்,கூட்டு என்று பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

தமிழ் நாட்டுக் கிராமங்களில் இந்த மணத்தக்காளியில் குழம்பு,கீரைக் கூட்டு, வற்றல் குழம்பு என்று பாரம்பரியமாக சமைப்பது வழக்கம். சத்து நிறைந்த இந்த மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணிற்கு  ஒரு நல்ல மருந்து.பசியைத் தூண்டும்.நீங்களும் செய்து பாருங்க.இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
மற்றும் இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கும் அனுப்பி வைக்கிறேன்.படம் சுமாராகத்தான் வந்துள்ளது.பொறுத்துக் கொள்ளவும்.அவசர கிளிக்குகள் தான் எப்பொழுதும்.

26 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மணத்தக்காளி வற்றல் குழம்பு ரொம்பவும் ருசியாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள். படங்கள் ஜோர் ஜோர்.

ஸாதிகா said...

மணத்தக்களி வற்றல் குழம்பு வைத்து இருக்கிறேன்,இது புதுசு.

Jaleela Kamal said...

உடல் நலத்திற்கு ஏற்ற ஹெல்தியான குழம்பு.

Jaleela Kamal said...

ஃப்ரஷ் மனத்தக்காளி எங்கு கிடைத்தது

Asiya Omar said...

நன்றி வை.கோ சார், வற்றல் குழம்பு சூப்பராக இருக்கும்,ஃப்ரெஷாக கிடைத்ததால் வைத்துப் பார்த்தேன்.நன்றி சார்.

வாங்க ஸாதிகா,கருத்திற்கு நன்றி,வருகைக்கு மகிழ்ச்சி.ஆரோக்கியமானது என்பதால் கிடைக்கும் பொழுது செய்து விடுவது தான்.

Asiya Omar said...

ஜலீலா,வாக்கிங் போகும் பொழுது தான் கிடைத்தது.ட்ராஃப்டில் இருந்த குறிப்பு,இப்போது தான் நினைவிற்கு வந்து பகிர்ந்தேன்.கருத்திற்கு நன்றி.

http://asiyaomar.blogspot.ae/2011/03/blog-post_29.html
இந்த லின்க்கில் விபரம்.

athira said...

சூப்பர்.. இப்பவே செய்யோணும்போல இருக்கு, ஆனா மணத்தக்காளிக்கு எங்கின போவேன்ன்ன் :).

Kalpana Sareesh said...

good one..

Priya Suresh said...

Fingerlicking kuzhambu...Such a healthy dish.

Priya R said...

looks superb akka :) love it

Manjubashini Sampathkumar said...

சாப்பிட்டது போல மனநிறைவுப்பா.. அழகிய செய்முறையோடு படங்கள் பிரமாதம் கண்களை அசத்துகிறது...

செய்முறையும் குறித்துவைத்துக்கொண்டேன்.

கண்டிப்பாக இதைப்போல் செய்து சாப்பிட்டு பார்க்கிறேன்பா..

வற்றல் குழம்பு என் விருப்பமான டிஷ்....

அன்பு நன்றிகள்பா...

கோமதி அரசு said...

ஆசியா, மணத்தக்காளி குழம்பு மிக அருமை.
கூட்டு, வத்தல் நன்றாக இருக்கும் இந்த குழம்புக்கு தொட்டுக் கொள்ள.
பச்சை பிஞ்சு சுண்டைக்காயும் நன்றாக இருக்கும் இது போல குழம்பு செய்தால்.

வெங்கட் நாகராஜ் said...

சுண்டைக்காய், மணத்தக்காளி போட்டு வற்றல் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.... உடனே செஞ்சு சாப்பிடவேண்டியது தான்.... :)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

Priya Anandakumar said...

Manathakkali kuzhambu super akka, very very healthy, paravaillai ungalluku fresh manathakkali kidakudhu lucky...
Thanks akka for linking it to the wtml event. Waiting for more yummy recipes.

Shama Nagarajan said...

delicious akka......ONGOING EVENT :SEASONAL FOOD EVENT

Mahi said...

தக்காளி சேர்க்காமல் குழம்பு செய்ததில்லை, எண்ணெய் மிதக்க மிதக்க சூப்பரா இருக்கு ஆசியாக்கா!

Manjula Bharath said...

such an delicious and inviting kozhambu :) tempting me dear :) wud love to have them with steamed piping hot rice now :)

sabana said...

akka thakkali searkamalea pakkuvama senjurukinga.naangalum idly dhosai chappathiku side disha seivadhundu.

sabana said...

aasiyakka oru chinna request aappamna enaku romba pidikum but Nalla varamatikudhu. enakaga aappam recipe podaringala with step wise clickudan... pls...

Asiya Omar said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

ஷபானா உங்களுக்காக ஈசி ஆப்பம் ரெசிப்பி அடுத்து..நன்றி கருத்திற்கு.

Saratha said...

manathakali kulambu supera vanthrukku.idli,thosaikkum nantraga irukkum.

priyasaki said...

நல்லதொரு ரெசிப்பி. ப்ரெஷ் மணத்தக்காளி???????? பார்ப்போம்,கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.நன்றி ஆசியா.

இமா said...

முயற்சிக்க மகியின் குறிப்பு ஒன்றும் இருக்கு. அதற்கு அடுத்ததாக ஆசியாவின் குறிப்பின்படிதான் மணத்தக்காளி சமைக்கப் போகிறேன்.

sabana said...

thank u akka. vudanea enaku reply tharuvinganu na nenaikalai. I'm eagerly waiting for ur easy aappam. ini enaku theavayana recipesa vungakita therinjukalam I'm rely happyka.

அமைதிச்சாரல் said...

குழம்பு அருமையாயிருக்கு..

Jaleela Banu said...

இங்கு ஃப்ரஷ் மனத்தக்காளி இதுவரை நான் பார்க்கல.
கிடைச்ச நல்ல இருக்கும்