Sunday, September 22, 2013

நெத்திலி ஃப்ரை / Nethili fry / Anchovies Fry

சாச்சி, சுகமா இருக்கியளா? சின்ன சாச்சா பெரிய சாச்சா சுகமா? பாப்பா சுகமா ?என்று ஓடோடி வந்து விசாரிக்கும் அமலி அக்காவிற்காக இந்த பகிர்வு. ஊர் போகும் சமயம் எல்லாம் எங்கள் வீட்டுப் பக்கம் மீன் விற்று வரும் அமலி அக்காவின் அன்பிற்காகவே அடிக்கடி மீன் வாங்கி விடுவது வழக்கம்.பத்து வருடப் பழக்கம்.இந்த முறை சென்றிருந்த பொழுது அவர்கள் தந்த இந்த நெத்திலி மீனின் சுவையை இன்னும் நாக்கு தேடுகின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மீன் ஃப்ரையை எத்தனை முறை தான் பதிவிடுவது என்று நினைத்து இதனை ட்ராஃப்டில் வைத்திருந்தேன்,முன்பே என் ஃபேஸ்புக் பேஜில் படங்களைப் பகிர்ந்திருந்தேன், குறிப்பு கொடுக்கவில்லை,என்றாலும் இதன் சுவைக்காக இந்த பகிர்வு.






தேவையான பொருட்கள்;
உருட்டு நெத்திலி மீன் - அரைக்கிலோ
மிளகாய்த்தூள் -1- 2 டீஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்( விரவும் பொழுது சேர்த்தால் மசாலா அப்படியே மீனில் ஒட்டிக் கொண்டு விடும்.)
ரெட் கலர் - 2 பின்ச்
ஒயிட் வினிகர்  - 2 டீஸ்பூன் அல்லது ஒரு எலுமிச்சை சாறு
கார்ன் ஃப்லோர் - 1-2 டேபிள்ஸ்பூன்  அல்லது அரிசி மாவு அல்லது கடலை மாவு( வீட்டில் என்ன மாவு இருக்கோ அது உபயோகிக்கலாம் (மைதா, கோதுமை மாவு  உட்பட) உபயோகித்தால் கொஞ்சம் மொறு மொறுப்பாக பொரிக்கும் பொழுது எண்ணெயில் மசாலா கலக்காது.
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
சுத்தமாக ஆய்ந்து பலமுறை கழுவிய மீனை தண்ணீர் வடித்து மேற்சொன்ன பொருட்கள் விரவி ஃப்ரிட்ஜிலோ அல்லது வெளியிலோ ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
தேவைக்கு எண்ணெயை ஒரு கடாயில் காயவிடவும்.மொறுக பொரித்து எடுக்கவும்.கொஞ்சம் ஃப்ரெஷ் கருவேப்பிலையை மீனை பொரித்து எடுக்கும் பொழுது சேர்த்து பொரித்து எடுத்தால் அதன் சுவையே தனிதான்.
சுவையான நெத்திலி ஃப்ரை ரெடி.
சப்பை நெத்திலியில் முள் அதிகம் இருக்கும்,அதனால் பார்த்து உருட்டு நெத்திலி வாங்க வேண்டும்.

அமலி அக்கா தந்த  இந்த முழு மஞ்சப்பாறை மீன் அதன் சுவையும் அமோகம் தான்.

நெத்திலி மீன் சுத்தம் செய்வது எப்படி ? வீடியோ பார்க்க இங்கு கிளிக்கவும்.

9 comments:

ஸாதிகா said...

அட அருமை..மீன் விறபவரே மீனை சுத்தமும் செய்து தந்துவிடுகின்றாரே?நீங்கள் அல் ஐனில் மீன் வாங்கும் நாட்ட்களில் சுத்தம் செய்வதற்குள் படும பாட்டை படித்து இருக்கிறேன்.எனக்கு மீன் சாப்பிட மட்டும்தான் தெரியும்..ஹி..ஹி..

திண்டுக்கல் தனபாலன் said...

மொறு மொறு மொறு நெத்திலி சுவையே தனி....

Asiya Omar said...

நன்றி ஸாதிகா,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.பெரிய மீன் என்றால் இங்கு ஃபிஷ் மார்க்கெட்டிலேயே சுத்தம் செய்து தந்து விடுவார்கள்.சின்ன மீன் நாம் பார்க்க வேண்டும்..ஹி..ஹி..

நன்றி தனபாலன் சார்,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சே. குமார் said...

ஆஹா... அமலி அக்கா போட்டோவுடன் மீன் வறுவல் வாவ்...

இப்பவே நெத்திலி ப்ரை சாப்பிடணும் போல இருக்கு....

mymoon said...

sari taan akka intha mathiri enga oorlaium meen akka,pazham akka,keerai paati,samosa akka,engal veetu akka nu oru listey iruku eppo ooruku poonaalum ena paappa epdi iruka padippu mudinjutha nu anbaai,akkaraiyaai visaarippathudan puthiya receipe um solli taruvaarhal...ithai ipadi senja nalla irukkum antha pazham ipadi orithal easy enru ellam tips veru...kelambukiren enraal soothanama poitu vaa paappa enru solli karuvaadu,appalam,tanthu(yen pomegranate kuda dubai vanthurku he he) kangal kalanguvaargal akka,naan piranthatil irunthey palakkamanavargal 20-22 years palakkam paasamana ullangal ethu kuduthaalum itz not equal to them.....ovvoru time ooruku porappovum naan ivargalai adutha varudamum nanraaga paarka vendum enru prathippen...




enakum fish clean panna teriyathu akka amma taan clean panni senju taruvaanga...pearl onion poathu fry pannuvaaanga smell supera irukkkummmm
(but ippo laam only cleaning taan kulamboo fry yoo neeye pannunu sollidraaanga)

Mahi said...

முன்பு எங்க வீட்டுப் பக்கத்திலும் மீன்காரரே மீனை சுத்தம் செய்து தருவதைப் பார்த்திருக்கேன், இப்பல்லாம் எப்படின்னு தெரில! உங்க அமலி அக்கா சூப்பரா செய்து குடுக்கிறாங்களே! :)

Saratha said...

அமலி அக்காவுடன்சேர்ந்து நெத்திலி மீன் ப்ரையும் சூப்பர்.

Priya Suresh said...

Ada super Akka, paati oorula ippadi than fresha meen sutham panni kodupanga, pazhaga nabagam, missing this akka..

Fry superaa irruku.

Asiya Omar said...

சே.குமார் வருகைக்கு நன்றி.

மைமூன் மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

சாரதா மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.