Wednesday, September 25, 2013

கோங்கூரா பச்சடி / புளிச்சக்கீரை பச்சடி( மசியல்) / Sour Leaves Pachadi / Masiyal

 தேவையான பொருட்கள்;
நறுக்கிய புளிச்சக் கீரை - 2 கப்
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 10
கீரை புளிக்க வில்லை என்றால் பாக்களவு புளி சேர்க்கவும்.
உப்பு தேவைக்கு.

வறுத்து அரைக்க:
வறுக்க - 1 டீஸ்பூன் எண்ணெய்
உளுந்து - 1 டீஸ்பூன்
முழு மல்லி  - 1 டீஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3 அல்லது 4( காரம் அவரவர் விருப்பம்)

தாளிக்க :
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
செய்முறை:


 கீரையை ஆய்ந்து நன்கு மண் போக அலசி நறுக்கி வைக்கவும்.
 ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க குறிப்பிட்டவற்றை சிவற வறுத்து ஆற வைக்கவும்.
 மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.


 நறுக்கிய கீரை சேர்க்கவும்.
நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

 மிக்ஸியில் பொடித்தவற்றுடன் கீரையை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் தாளிக்கவும்.
 அரைத்த கீரை விழுதை சேர்க்கவும்.மிக்ஸி ஜாரில் கீரை ஒட்டியிருந்தால் சிறிது அலசி  விடவும்.உப்பு சரி பார்த்து போடவும்.
 சிறிது கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான சத்தான் கோங்கூரா பச்சடி ரெடி.
சுடு சாதத்தில் போட்டு சாப்பிட அல்லது தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.இதனை ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.

13 comments:

GEETHA ACHAL said...

ரொம்ப சூப்பராக இருக்கு அக்கா...

ஆமாம் அக்கா...நானும் இதே மாதிரி தான் இன்று போஸ்டிங்கு போட்டு இருக்கின்றேன்...

உங்களுடைய Step-step விளக்கம் ரொம்ப சூப்பர்ப்...

Priya Suresh said...

Omg, tongue tickling pachadi Akka, love it with rice topped with gingelly oil.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் செய்முறை மிகவும் அருமை... நன்றி சகோதரி....

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, புளிக்காத பதிவு. ;)

பச்சடியும் மசியலும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள்.

சே. குமார் said...

படங்களுடன் கீரை பச்சடி அருமை அக்கா... செய்து பார்த்திடுவோம்...

ஸாதிகா said...

ஆந்திர மீல்ஸில் கண்டிப்பாக இந்த பச்சடி உண்டு.எனக்கும் பிடிக்கும்.

priyasaki said...

அழகாக படங்களுடன் செய்முறையை பகிர்ந்திருக்கிறீங்க ஆசியா. நன்றி.

sabana said...

pasumaiyana recipe. keerai kidaitha vudan chatneydhan!

அமைதிச்சாரல் said...

ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தது.. நன்றி ஆசியா.

Priya Anandakumar said...

Supera irrukku akka, romba varusham aachu indha keerai sappitu really missing them. very very beautifully done. Thank you for linking it to the wtml event , waiting for more yummy recipes from you akka.

கோமதி அரசு said...

செய்துப் பார்க்க தூண்டும் அழகிய படங்களுடன் குறிப்பு மிக அருமை.
ஊருக்கு போனவுடன் புளிச்சகீரை வாங்கி செய்து பார்த்து விருகிறேன்.
நன்றி ஆசியா.

Jaleela Banu said...

மிக அருமை

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.