Saturday, October 5, 2013

ஈசி ப்ரெட் அல்வா / ப்ரெட் ஸ்வீட் / Easy Bread Halwa / Bread Sweet

 தேவையான பொருட்கள்;
ப்ரெட் மீடியம் சைஸ் - 5 துண்டுகள்
கெட்டிப் பால் - ஒரு கப்
சீனி  - 6  டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன் ( விருப்பம் போல் கூட்டிக் கொள்ளலாம்)
முந்திரி - 10
காய்ந்த திராட்சை - 10
கலர் விருப்பப்பட்டால் துளி கேசரி கலர் சேர்க்கலாம்.நான் சேர்க்கவில்லை.

பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்.

செய்முறை:
 முதலில் வாணலியில் நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து முந்திரி திராட்சையை லேசாக சிவற வறுத்துக் கொள்ளவும். வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
 அதே வாணலியில் ப்ரெட்டை துண்டாக்கி போட்டு லேசாக பிரட்டி பிரட்டி டோஸ்ட் செய்யவும். ஆற வைக்கவும்.

 ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பால் விட்டு சூடு செய்யவும்.பொங்கி வரும் பொழுது சர்க்கரை சேர்த்து சிம்மில் வைத்து கலந்து விடவும்.சர்க்கரை கரைந்து சிறிது வற்ற ஆரம்பிக்கும்.


 தூள் செய்த ப்ரெட்டை போட்டு கிண்டவும்.அடுப்பு மிக சிம்மில் இருக்க வேண்டும்.அப்படியே இறுகி வரும்.வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.
 விரும்பினால் தேவைக்கு  இன்னும் நெய் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.அடுப்பை அணைக்கவும்.


சுவையான ஈசி ப்ரெட் ஹல்வா/ ப்ரெட்  ஸ்வீட் ரெடி.

 ப்ரெட் ஹல்வா ரெசிப்பிற்கு இங்கு கிளிக்கவும்.

 இதனை பிரியாணிக்கு சைட் டிஷ்சாக வைக்கலாம்.  ஊர் சென்றிருந்த பொழுது  பிரியாணிக்கு சைட் டிஷாக எங்கு விருந்துக்கு சென்றாலும் இதை தான் பரிமாறியிருந்தார்கள். நெய் ஒழுக ஒழுக இனிப்பாய்.எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை, ஆனால் குழந்தைகள் ரசித்து சாப்பிடுவார்கள்.10-15 நிமிடத்தில் அல்வா ரெடியாகி விடும்.குழந்தைகளுக்கு செய்து கொடுங்க.நான் என் டேஸ்டிற்கு கொஞ்சம் நெய், சீனி குறைத்து செய்திருக்கிறேன்.நீங்க உங்க டேஸ்டுக்கு சேர்த்துக்கோங்க.ஏலப் பொடி கூட சேர்த்தால் மணமாக இருக்கும்.
இனிப்பு பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் நெருங்குகிறது.ஏதாவது ஈசி ஸ்வீட் செய்ய நினைத்தால் இதையும் லிஸ்டில் வைத்துக் கொள்ளவும். செய்து அசத்துங்க.

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, அருமை ....
ருசியோ ருசி.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

புது வகையில் பிரட் ஸ்வீட் செய்து காட்டி இருக்கீங்க ஆசியா.

சே. குமார் said...

படங்களுடன் அருமையா விளக்கி இருக்கீங்க...
அருமை அக்கா....
நம்ம பக்கமெல்லாம் உங்களைக் காணோம்...
எப்படியிருக்கீங்க?

கோமதி அரசு said...

என் தங்கை அடிக்கடி யார் வந்தாலும் செய்யும் ஈஸி ப்ரெட் அலவா.
ஆசியா, செய்முறையும் படங்களும் மிக அருமை.

Mahi said...

Quick n yummy halwa!

Asiya Omar said...

மிக்க நன்றி வை.கோ சார்.மகிழ்ச்சி.

கருத்திற்கு மகிழ்ச்சி ஸாதிகா.

கருத்திற்கு மிக்க நன்றி குமார்.இப்ப அதிக நேரம் சிஸ்டத்தில் அமருவதில்லை.ஏதோ போஸ்டிங் மட்டும் போட்டு வருகிறேன்.அப்ப அப்ப வரத்தான் செய்கிறேன்.

கருத்திற்கு மிக்க நன்றி கோமதியக்கா.மகிழ்ச்சி.

மிக்க நன்றி மகி,மகிழ்ச்சி.

Vimitha Anand said...

Enakku romba pudicha halwa... Super

priyasaki said...

ஈசியான+ சீக்கிரமே செய்திடக்கூடிய‌ அல்வா ஆசியா.நன்றி.

இளமதி said...

அட.. இதுகூட நல்லாத்தான் இருக்கு..:)

வீட்டில் பிரட் மீதமானால் சின்னதாக வெட்டி வறுத்து உப்புமாவுடன் சேர்த்திடுவேன்...

இனி இப்படிச் செய்திடலாம்!...
மிக்க நன்றி ஆசியா!

Saratha said...

பிரட் அல்வா சூப்பர்.திருநெல்வேலி அல்வா செய்முறை விளக்கம் கொடுங்களேன்!!!

Priya Suresh said...

Quick and delicious halwa, prefect for sudden guests.

கோவை2தில்லி said...

ஈசியான ப்ரெட் அல்வா....நல்லா இருக்கே! செய்து பார்க்கிறேன்.