Tuesday, October 22, 2013

பூண்டு சட்னி / Garlic Chutney


இந்த வார தமிழர் சமையல் செவ்வாய்க்கு TST என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பூண்டு - 6-8 பற்கள்(பெரிய பற்கள்)
மிளகாய் வற்றல் - 2
பெரிய தக்காளி - 1
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 பூண்டு பற்களைத் தோல் உரித்து வைக்கவும்.மிளகாய் வற்றலை சுட்டோ லேசாக எண்ணெயில் பொரித்தோ எடுக்கவும்.தாளிக்க வைத்துள்ள எண்ணெயிலேயே பொரித்து எடுக்கலாம்.
சிறிய மிக்ஸி ஜாரில்  பூண்டு,வற்றல், உப்பு போட்டு முதலில் அரைக்கவும்.

 பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
 நன்கு அரைத்து எடுக்கவும்.
 கடாயில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.
 அரைத்த சட்னியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.
 இப்படி சட்னி வற்றி தொக்கு போல் ஆகும் அடுப்பை அணைக்கவும்.தக்காளி,பூண்டின் பச்சை வாடை சுத்தமாகப் போய் மணமாக இருக்கும்.

சுவையான சத்தான பூண்டு சட்னி  ரெடி.
இட்லி தோசையுடன் பரிமாறவும்.காரசாரமாக இருக்கும்.

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படத்துடன் விளக்கம் அருமை... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

Manjula Bharath said...

very very flavorful and delicious chutney !! :)

ezhil said...

பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுதே...

Saratha said...

இட்லி,தோசைக்கு சூப்பரான சட்னி.

Shama Nagarajan said...

delicious chutney akka

இளமதி said...

அருமையான பூண்டுச் சட்னி - தொக்கு!

எனக்கும் ரொம்பவே பிடிக்கும்! வாசனையே வா வா என அழைக்குமே!..:)

மிக்க நன்றி ஆசியா! வாழ்த்துக்கள்!

ADHI VENKAT said...

எங்கள் வீட்டில் எனக்கு மட்டுமே மிகவும் பிடித்த இந்த சட்னி, சூடான இட்லியுடன் பிரமாதமாக இருக்கும்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

S.Menaga said...

சூடான இட்லி,தோசையுடன் சாப்பிட சூப்பர்ர்ர்...

இராஜராஜேஸ்வரி said...

சமைத்து அசத்திய அருமையான
"பூண்டு சட்னி க்குப் பாராட்டுக்கள்..!

sabana said...

akka parkum bodhea seiyya thoondudhea

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூண்டு சட்னி சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

கோதுமை தோசை, தோசை,கறுப்பு முழு உளுந்து வெந்தய தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த சட்னி.
பகிர்வுக்கு நன்றி ஆசியா.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்க நல்லா இருக்கு.....

athira said...

அடடா சூப்பர்... ஹெல்த்தி.

priyasaki said...

அம்மா அடிக்கடி செய்யும் சட்னி.எனக்கு பிடித்தமானதொன்று.நல்ல குறிப்பு.

Priya Suresh said...

Sema flavourful chutney Akka, attagasama irruku.

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை.

இந்த வெள்ளிக்கிழமை எங்கள் அறையில் முயற்சித்து பார்த்துவிட வேண்டியதுதான்.,...

மனோ சாமிநாதன் said...

பூண்டு சட்னி செய்முறை எளிதாக, சிறிது வித்தியாசமான குறிப்பாக இருக்கிறது ஆசியா! செய்து பார்த்து விட்டு சொல்லுகிறேன்!

kavin said...

இட்லி,தோசைக்கு சூப்பரான சட்னி.

usha pushpam said...

Its is very nice to see today am going to try this.Kindly mention the uses of dish in upcoming blogs

Jaleela Kamal said...

பூண்டு சட்னி பார்த்ததும் இப்பவே தோசைக்கு வைத்து சாப்பிடனும் போல் இருக்கு