Thursday, October 3, 2013

ராஜ்மா மசாலா / Rajma / Kidney Beans Masala.

தேவையான பொருட்கள்;
ராஜ்மா - 150 கிராம்( நன்கு ஊற வைத்தது)
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கறி மசாலா - 1 டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன் ( விருப்பமானால்)
நறுக்கிய மல்லி கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
 ராஜ்மாவை  நன்கு அலசி இரவு முழுவதும் அல்லது 12 மணி நேரம் ஊறவைக்கவும்.

 குக்கரில் உப்பு போட்டு 5 விசில் வைத்து இறக்கவும். ஒரு வித வாடை இருக்கும்,தண்ணீர் வடித்து விடவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு சூடானவுடன்,சீரகம் ,கருவேப்பிலை போட்டு வெடித்தவுடன்  நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு ,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 மேலே குறிப்பிட்ட மசால்வகைகளை சேர்க்கவும்.
 பயறை போட்டு நன்கு வதக்கவும்.
  தேவைக்கு உப்பு சேர்க்கவும்.(விருப்பமானால் இப்படியே தேவைக்கு தேங்காய் துருவல் சேர்த்தால் காரசாரமான ராஜ்மா சுண்டல் ரெடி.)
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

 அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி சிறிது ஒரு சேர கொதிக்க விடவும்.
 மசாலா வாடை மடங்கி சிறிது கெட்டியாகும்.
 நறுக்கிய மல்லி இலை தூவவும். இறக்கி வைக்கவும்.
 சூடான சப்பாத்தி சாதத்துடன் பரிமாறவும்.

சாதத்தில் குழம்பு போல் ஊற்றி சாப்பிட விரும்பினால் அரைத்த தேங்காய் சேர்க்கவும்.  விரும்பினால் இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கும் சேர்க்கலாம்.கொதி வந்த பின்பு அடுப்பை அணைத்து பரிமாறவும்.

சுவையான ராஜ்மா மசாலா ரெடி. 
இதனை சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம். இந்த ராஜ்மா தயாரிப்பை, சுண்டலாக,கிரேவியாக,குழம்பாக விருப்பம் போல் பரிமாறலாம். காரம் அவரவர் விருப்பம். காரத்தை இப்பயறு  அவ்வளவாக ஈர்க்காது, அதனால் குறைவாகவே காரம் சேர்க்கவும்.இக்குறிப்பை முன்பே என் ஆங்கில ப்ளாக்கில் பகிர்ந்திருக்கிறேன்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படி செய்தாலும் இந்த வாசனை பிடிப்பதில்லை... ...ம்...

Priya Suresh said...

Nutritious masala Akka, ricekuda supera irrukum.

ஸாதிகா said...

வாவ்..நல்லதொரு சைட் டிஷ் அறிமுகத்திற்கு நன்றி தோழி

Saratha said...

ராஜ்மா மசாலா அருமையாக வந்திருக்கு.

Asiya Omar said...

கருத்திற்கு நன்றி தனபாலன் சார்.

ப்ரியா மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.

சாரதா மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. பாராட்டுக்கள்.

Vimitha Anand said...

Love this for chapathis. Nice one