Sunday, October 27, 2013

வெண்டைக்காய் தக்காளி தயிர் பச்சடி / Vendaikkai thakkali thayir pachadi

வெண்டைக்காயில் பொரியல்,புளிக்குழம்பு, பச்சடி பொதுவாக சமைப்போம்.அந்தப் பச்சடியை சிறிய மாறுதலுடன் இங்கு செய்திருக்கிறேன்.
 தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
கெட்டி தயிர் - 1 -2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய்வற்றல் - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது.
உப்பு = தேவைக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்.

செய்முறை:
வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு,வற்றல் கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.சிறிது வதக்கவும், நறுக்கிய வெண்டைக்காய் தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும், மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

 நறுக்கிய தக்காளி ,தயிர் சேர்க்கவும்.ஒரு போல் கலந்து வருமாறு பிரட்டவும்.
 ஒரு நிமிடம் சிம்மில் இருக்கட்டும்.உப்பு சரி பார்க்கவும்.
 நறுக்கிய மல்லி இலை தூவவும்.பிரட்டி சூடாகப்  பரிமாறவும்.
சுவையான வெண்டைக்காய் தக்காளி தயிர் பச்சடி ரெடி.
இது சாதத்தில் பிரட்டி சாப்பிட  மற்றும்  பருப்பு விட்டு தொட்டு சாப்பிடவோ அல்லது சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.நிச்சயம் செய்து பாருங்க.சூப்பராக இருக்கும்.


இக்குறிப்பை Virunthunna Vanga Viji's Show your styles to world (SYS) SHOW YOUR INNOVATION  October - 2013 event -டிற்கு அனுப்புகிறேன்.

இந்த போட்டி வித்தியாசமான ஒன்று.முதலில் ஆறு நம்பர் கொடுத்து , விருப்பப் படுபவர்கள் 2 நம்பர்களை தேர்வு செய்ய வேண்டும்.பின்பு அந்த நம்பருக்கான பொருள் தரப்படும்.அந்தப் பொருளை வைத்து புதுமை புகுத்தி ஏதாவது சமைத்து அசத்த வேண்டும்.பொதுவாக வெண்டைக்காய் பச்சடிக்கு தயிர் அல்லது தக்காளி சேர்ப்பார்கள்.ஆனால்
நான் வெண்டைக்காய் பச்சடிக்கு இங்கு தயிரும் தக்காளியும் சேர்த்து முயற்சி செய்தேன்.மிக அருமையான ருசி.நீங்களும் செய்து பாருங்க.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ok... thanks... from new android...

Saratha said...

வெண்டைக்காய் தக்காளி தயிர் பச்சடி பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

தயிர் பச்சடி - தயிர் நிறைய இருக்கும் என நினைத்தேன் - ஒரு மேஜைக் கரண்டி என்பதால் கெட்டியாக இருக்கிறது போல.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....

S.Menaga said...

வெண்டைக்காய் பச்சடி தயிர் அதிகம் சேர்க்காமல் நன்றாக இருக்கு..

இளமதி said...

அட.. அருமையாக இருக்கு ஆசியா!

கட்டாயம் செய்து பார்க்கின்றேன்.

பகிர்விற்கு நன்றி!

Mahi said...

வித்யாசமாக இருக்கு ஆசியாக்கா! அடுத்தமுறை வெண்டைக்கா வாங்கும்போது செய்துபார்க்கீறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பச்சடி சூப்பர் ! ;)))))

இமா said...

பிடிச்சிருக்கு ஆசியா. ஆசையாவும் இருக்கு.
கூட்டணிதான் பயங்கரமா இருக்கு. :-) //வெண்டைக்காய் தக்காளி தயிர்// தனித்தனியாவே என்னை அட்டாக் பண்ணுவாங்க. இது கூட்டணி. குறிச்சு வைச்சுட்டு பெப்ரவரிக்குப் பின்னால ட்ரை பண்ணுறேன்.

priyasaki said...

வெண்டைக்காய்பச்சடி மிகவும் நன்றாக இருக்கு ஆசியா. பகிர்வுக்கு நன்றி.

Kalpana Sareesh said...

wow with roti tis shd be yumm.. nice one

Shama Nagarajan said...

delicious akka

சே. குமார் said...

சுலபமான செய்முறையா இருக்கே...
செய்து பார்த்திடுவோம்....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.

Priya Suresh said...

Delicious thayir pachadi Akka..

Vijiskitchencreations said...

என்னோட பேவரிட் ஆசியா. நான் செய்வேன் கொஞ்சம் வேறமாதிரி தயிருக்கு பதில் சவர் க்ரிம் சேர்த்து செய்திருக்கேன். அடுத்த முறை உங்க ஸ்டைலில் செய்து பார்க்கிறேன்.
நல்ல ரெசிப்பி. 2+1.

Manjula Bharath said...

very very deliciou combo and pachadi looks so delicious :) very very well explained dear :)

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.

தக்காளி சோ்த்து செய்ததில்லை செய்துபார்கிறேன்.