Monday, November 18, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு 1 - திருமதி ஸாதிகா ஹஸனாவின் கீழக்கரை ஸ்பெஷல் - இடியாப்பச் சோறு / Idiyaappachoru .

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற  வலைப்பூவில் எழுதி வரும் திருமதி.ஸாதிகா ஹஸனா தமிழ் வலைப்பூ உலகில் மிகவும் பரிச்சையமானவர். அவர் தன் வலைப்பூவில் அனைத்து பொதுவான விஷயங்களைப் பற்றியும் பகிர்ந்து வருகிறார்.சுவையாக சுவாரசியமாக எழுதி, வாசிப்பவர்களின் மனதில்  ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. எனக்கு அவரை வலையுலகில் 5 வருடங்களாகத் தெரியும்.மாறாத அன்புடையவர். நிறைவான ஒரு நல்ல தோழி. அவருடைய வலைப்பூவில் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த பகுதி கதாபாத்திரங்கள்,உணவகம்,ஊர் சுற்றலாம்,விழிப்புணர்வு பகிர்வுகள் மற்றும் அவரின் வலைச்சர ஆசிரியர் பகுதி இப்படி எத்தனையோ குறிப்பிட்டு சொல்லலாம்.பொழுது போக்கு விஷயங்கள் தொடங்கி ஆக்கப் பூர்வமான படைப்புக்கள் என்று ஏராளமான பகிர்வுகள் காண அவரின் வலைப்பூ லின்க் இதோ!


தோழி ஸாதிகா அவர்கள் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு முதல் கருத்திட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல் உடனே அவரின் சொந்த ஊரான கீழக்கரை ஸ்பெஷலான இடியாப்பச் சோறு குறிப்பை படத்துடன் அனுப்பி வைத்தது எனக்கு அளவிலா மகிழ்ச்சியை தந்தது. எங்கள் ஊரில் நெய்ச் சோறு, தேங்காய்ச் சோறு செயவதுண்டு, அதென்ன இடியாப்பச் சோறு என்று ஆர்வம் எழுந்ததென்னவோ உண்மை தான். இடியாப்பத்தை அவித்து அப்படியே ஏதாவது குருமா, சால்னா,வட்டிலாப்பம் வைத்து சாப்பிடுவோம்.ஆனால் கீழை வாசிகள் அதனை எத்தனை ருசியாக சமைத்து அசத்துகிறார்கள் என்று அறிய ஸாதிகா அனுப்பி வைத்த இந்த  குறிப்பை பார்க்கவும்.

இடியாப்பச் சோறு:


தேவையான பொருட்கள்;

இடியாப்ப மாவு - 3 டம்ளர்
தேங்காய் - 1
வெங்காயம் - 2
நெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
ரம்பை இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
ஏலம் - 6
கிராம்பு - 6
உப்பு - சுவைக்கு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
முந்திரி - 10
திராட்சை - 1 டீஸ்பூன்

செய்முறை:

உப்பு கலந்த கொதி நீர் விட்டு அரிசிமாவை கெட்டியாக பிசைந்து இடியாப்பங்களாக பிழியவும்.
இதனை நன்கு ஆற விடவும். அல்லது முதல் நாளே தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
தேங்காயை துருவி, கெட்டியாக பால் எடுக்கவும். இரண்டாம், மூன்றாம் பாலை வேறு எதற்காவது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கடாயில் நெய் விட்டு, பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பைஇலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிவந்து விடாமல் வதக்கவும்.
இடியாப்பத்தை, சிறுதுண்டங்களாக்கி உப்பு சேர்த்த தேங்காய்ப்பாலில் கலந்து கொள்ளவும்.
தேங்காய்ப்பாலில் கலந்த இடியாப்பத் துண்டங்களை தாளிப்பில் கொட்டி கிளறி, நன்கு சூடு படுத்தவும்.
பொடியாக அரிந்த மல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தூவி அலங்கரிக்கவும்.
மட்டன் குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


வாவ் ! உயர் ரக கீழக்கரை ஸ்பெஷல் இடியாப்பச் சோறு செய்முறையை தெரிந்து கொண்டீர்களா?

செய்து அசத்துங்க.நான் செய்து பார்த்தேன், அப்பப்பா ! சுவையோ சுவை ! மணமோ மணம். குருமா கிரேவி எதுவும் வேண்டாம்,

 அப்படியே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம். சேர்த்திருக்கும் பொருட்கள் என்ன லேசுப்பட்டதா? தேங்காய்ப் பால், நெய், முந்திரி திராட்சை, பட்டை,கிராம்பு ஏலக்காய், வெங்காயம் etc..
இடியாப்பம் இப்பொழுது பாக்கெட்டில் எங்கும் கிடைக்கிறது, வீட்டில் இடியாப்பம் செய்ய முடியவில்லை என்றாலும் வாங்கி இந்தக் குறிப்பை செய்து பாருங்க.

பகிர்வுக்கு மிக்க நன்றி ஸாதிகா.


ஸாதிகாவுடனான கலந்துரையாடல்:

1.தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா? தங்களின் தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?
என்னைப்பற்றித்தெரிய இந்த லின்கை கிளிக் செய்யுங்கள்.

2.தங்கள் வீட்டின் உணவுப் பழக்கம், பிறந்த ஊரின் ஸ்பெஷல் பதார்த்தங்கள் அவற்றில் தங்களுக்கு பிடித்த உணவுகள்.
கீழை ஸ்பெஷல்என்று ஒரு பெரிய லிஸ்டே உள்ளது அதை பதிவாக்கி உள்ளேன். சாப்பாடு எனும் பொழுது என் சித்தி நெய் மணக்க செய்யும் இடியாப்பபிரியாணி மிகவும் பிடிக்கும்.


3. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள். சமையல் குறித்து ஏதாவது திட்டமிடல்அட்டவணையிட்டு சமைப்பீர்களா? அல்லது அன்றன்று வீட்டில் உள்ளவர்களின் விருப்பம் கேட்டு சமைப்பீர்களாசாப்பாடு விஷயத்தில் மெனு முடிவு செய்வது நீங்கள் தானா?
குடும்பத்தினர் பிரியாணியை விட பிரைட் ரைஸ்தான் விரும்பி சாப்பிடுவார்கள். மட்டனை விட சிக்கன் தான் மிகவும் பிடிக்கும். மீன் உணவு கொஞ்சமாக எடுத்துக்கொள்வோம். சாம்பார்,பொரியல் கூட்டு என்று வாரம் ஒரு முறை வைக்கும் சைவ சாப்பாடு என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். எண்ணெய் நெய் போன்றவற்றை எப்படி குறைவாக செலவு செய்ய வேண்டும் என்று நான் எடுக்கும் முயற்சிகள் தோற்றே வருகிறது. வீட்டில் மெனு என்ற பேச்சுக்கே இடமே இல்லை. வீட்டில் உள்ளவர்கள் சொல்லும் மெனுதான் சமைக்கப்படும்.

4.சமையலுக்கு தேவையான காய்கறிகள், மீன், கறி மற்ற பொருட்கள் அன்றாடம் வாங்குவீர்களாஅல்லது வாரம் ஒரிரு முறை என்ற பழக்கமா? சாப்பாட்டு செலவு இவ்வளவு தான் என்ற பட்ஜெட் உண்டாஅல்லது நோ பட்ஜெட்டா?  வாசகர்களுக்கு பயன்படும் வகையில் தங்களின் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க விருப்பமிருந்தால் தெரிவிக்கலாம். 
மளிகைப்பொருட்கள் மாதத்திற்கு ஒரு முறையும் அசைவப்பொருட்கள்,காய்கறி வாரம் ஒரு முறையும் வாங்குவது வழக்கம். சாப்பாடு செலவுக்கும் ஒரு திட்டமிடல் உண்டு.


5.சமைத்து அசத்தலாமில் ஏதாவது ஒரு குறிப்போ அல்லது பல குறிப்புக்களையோ செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டா
எதனால்? எது தங்களைக் கவர்ந்தது?செய்து பார்த்திருந்தால் அந்தக் குறிப்பின் பெயர்கள்.
ஏனெனில் உங்கள் வலைத்தளத்தில் எனது டேஸ்டுக்கு ஒத்துப்போகும் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
படங்களுடன் தெளிவாகவும்,விரிவாகவும் குறிப்புகள் கொடுப்பது பிளஸ்.
எண்ணற்ற குறிப்புகள் செய்து பார்த்துள்ளேன்.
உறவினர்களுக்கும் லின்கும் அனுப்பி உள்ளேன். நன்றி.


நான் அனுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் பதில் தந்தது அருமை. மிக்க நன்றி, மகிழ்ச்சி  ஸாதிகா. மீண்டும் சந்திப்போம் !

பின் குறிப்பு:
சிறப்பு விருந்தினர் பகுதி  விபரத்திற்கு கிளிக்கவும்.
இப்பகுதிக்கு சமையல் குறிப்பு அனுப்புவதாய் கருத்துக்கள் மூலமும், மெயில் மூலமும் தெரிவித்தவர்களுக்கும், அனுப்பி வருபவர்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து தரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif


29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

தங்களுக்கும் திருமதி ஸாதிகா அவர்களுக்கும் சேர்த்து.

பகிர்வுக்கு நன்றிகள்.

இளமதி said...

அருமையான சிறப்பு விருந்தினர் பகுதிப் பகிர்வு!

ருசியான இந்த இடியப்பச் சோறு குறிப்பினைத்தந்த சகோதரி ‘ஸாதிகாவிற்கு’
என் உளம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

அழகுற, அசத்தலாக ஒரு நேர்காணலுடன் படமும் பதிவுமாக
இதனைப் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ஆசியா!

நல்ல குறிப்பு இது. நாமும் சாதாரணமாக இடியப்பத்தை உலிர்த்தி வெஜிட்டபிள் மிக்ஸ்டுடன்
மிளகு சீரகப் பொடி தூவிப் பிரட்டிச் சாப்பிடுவது வழக்கம்.

பகிர்விற்கு நன்றி ஆசியா!

Asiya Omar said...

வாங்க வை.கோ சார் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்குங்க.

Saratha said...

முதல் பகிர்வே சூப்பர்!ஸாதிகா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Nithu Bala said...

Nice way to get introduced to co-bloggers. Best wishes Sathika and Asiya akka

Asiya Omar said...

இளமதி வாங்க, கருத்திற்கு மகிழ்ச்சி கலந்த நன்றி.உங்கள் குறிப்பை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

Asiya Omar said...

அமைதிசாரல் வாங்க,மனமார்ந்த நன்றி பா.குறிப்பு அனுப்பி வையுங்க.

சாரதா வாங்க, வாழ்த்திற்கு மிக்க நன்றி.தொடர்ந்த வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Asiya Omar said...

நிது பாலா வாங்க,கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா said...

சந்தோஷமாக உள்ளது ஆசியா.முயற்சிக்கு வெற்றி கிட்டட்டும்.வாத்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.தொடருங்கள் தோழி.

Suchi Sm said...

rucsiyana idiyapa rice...

Asiya Omar said...

வாங்க ஸாதிகா,சிறப்பு விருந்தினர் பகுதிக்கு குறிப்பு அனுப்பி நல்லதொரு ஆரம்பம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி தோழி.

Thenammai Lakshmanan said...

அருமையான இடியாப்பச் சோறு மற்றும் ஸாதிகாவின் ருசிகரமான பேட்டி :)

Menaga sathia said...

இடியாப்ப சோறு சூப்பரா இருக்கு,அப்படியே எடுத்து சாப்பிடலாம் போல..ஸாதிகா அக்காவும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

சுஜிஎஸெம் வாங,கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.நன்றி.

தேனக்கா இப்பகிர்வில் தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி யும் மகிழ்ச்சியும் அக்கா.

மேனகா கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி,மிக்க நன்றி பா.

asha bhosle athira said...

ஆவ்வ்வ்வ் மிக சுவையான, சிம்பிளான ஒரு உணவு. நாங்களும் ஊரில் இடியப்பத்துக்கு அம்மா சொதி வைக்க முன், அதற்கான தேங்காய்ப்பாலில் கொஞ்சம் எடுத்து சிறிது உப்பு சேர்த்து, குழைத்துச் சாப்பிடுவோம் சூப்பராக இருக்கும்.

இங்கு தேங்காய்ப்பாலையே விட்டாச்சு. ரின்னில் வரும் பால் ருசியே இருப்பதில்லை.

asha bhosle athira said...

அடடா.. ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக பதில் சொல்லி விட்ட கீழக்கரை ஸ்பெஷல் ஸாதிகா அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு ஸாதிகா. செய்து பார்க்கிறேன். பேட்டியும் நன்று.

பகிர்வுக்கு நன்றி ஆசியா.

Asiya Omar said...

அதிரா வாங்க கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ராமலஷ்மி வாங்க, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

சே. குமார் said...

இரண்டு அக்காக்களுக்கும் வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

Congrats Asiya! Good recipe Sathiga!

Asiya Omar said...

குமார் வாங்க,வாழ்த்திற்கு மிக்க நன்றி.

விஜி வாங்க, கருத்திற்கு மகிழ்ச்சி நன்றி.

priyasaki said...

முதல் குறிப்பே அசத்தல்.ஸாதிகா அக்கா
நல்லதொரு,ஈசியான குறிப்பா தந்திருக்கா.பேட்டியும் சிறப்பு.நன்றிகள் இருவருக்கும்.

Priya Anandakumar said...

Idiyappa soru supera irruku, thanks a lot for sharing,Saathika.... wonderful guest post sis...

Asiya Omar said...

ப்ரியசகி கருத்திற்கு மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

ப்ரியா ஆனந்தகுமார் வாங்க, வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் ஸாதிகா அவர்களுக்கும் பாராட்டுகள்....

இடியாப்பச் சோறு - பார்க்க நல்லா இருக்கு சகோ.

கோமதி அரசு said...

அருமையான் இடியாப்பச் சோறு. ஸாதிகாவிற்கு வாழ்த்துக்கள்.
நேர்காணல் மிக அருமை.

Jaleela Kamal said...

ஆஹா முதல் முதல் ஸாதிகா அக்காவின் இடியாப்ப சோறு பதிவா? அவங்க வீட்டில் சாப்பிட்ட பெட்டீஸ், மிக்ஸர், தோசை , சட்னி யின் சுவை இன்னும் நாவில் நிற்கிறது..

Asiya Omar said...

சகோ.வெங்கட் பாராட்டிற்கு மிக்க நன்றி.

கோமதிக்கா வாழ்த்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.