Friday, November 29, 2013

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 3 - செல்வி S. முபஷ்ஷரீனா - எலையாடை / Elaiyaadai

சிறப்பு விருந்தினர் பகுதிக்கு  வந்த மூன்றாவது பகிர்வு என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்தியதோடல்லாமல்  மிகவும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. வலைப்பூ அல்லாத இவரிடமிருந்து வந்த மெயிலை மிகவும் ஆவலுடன் திறந்தேன்.கண்ணைக் கவர்ந்த அருமையான பாரம்பரிய உணவின் பகிர்வுடன், சிறிய சுய அறிமுகத்தோடு தொடங்கியிருந்தார்.
இதோ அதனை நீங்களே வாசியுங்களேன் !

அஸ்ஸலாமு அலைக்கும் வர்ரஹமத்துல்லாஹி வபரகாத்துஹூ.
என் பெயர் S. முபஷ்ஷரீனா. ஃபேஸ்புக்கில் முபி ஜன்னத். உங்களோட எல்லா போஸ்ட்டையும் ரெகுலரா பார்த்துட்டு வருவேன் என்னால செய்யமுடியறதை முயற்சி செய்தும் பார்ப்பேன். அல்ஹம்துலில்லாஹ். கெஸ்ட் போஸ்ட் பார்த்தேன் என்னோட முதல் போஸ்ட் இது. இதை இதுக்கு முன்னால உங்க தளத்துல போட்டுருக்கீங்களானு தெரியாது. இது எங்க வீட்டுல செய்யுற ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம். ஈவினிங்க் போல சாப்புடுவோம். 

இது கூடவே PHOTOS ம் ஆட் பண்ணிருக்கேன். 

மிக இனிமையான இந்த பகிர்வின் செய்முறையை பார்ப்போமா?

எலையாடை:


தேவையான பொருட்கள் :-

வாழை இலை -  2 (பெரியது)
அரிசிமாவு - 3/4  கிலோ
பாசிப்பருப்பு - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 1/2 கிலோ
தேங்காய் - 1 (மீடியம் சைஸ்)    
தேங்காய் எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கு.                                     தயாரிக்க :-

1.     வாழை இலையை கழுவி சிறிய நோட்டின் ஒரு பகுதி அளவுக்கு கீரி வைத்துக் கொள்ளவும்.
2.   பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
3.   வெல்லத்தை பொடியாக்கி பாகு காய்ச்சி ( நீர் பதம் ) வடிக்கட்டி வைக்கவும்.
4.   தேங்காயை பொடியாக துருவிக் கொள்ளவும்


செய்முறை :-

1.     வேகவைத்த பாசிப்பருப்பு கலவையையும், வெல்லப்பாகையும், தேங்காயையும்  ஒன்றாக சேர்த்து கலக்கவும் இப்பொழுது பூரணம் தாயார்.
2.   அரிசி மாவில் ஒன்றுக்கு ஒன்று நீரை கொதிக்க வைக்கவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
3.   கொதித்த நீரை அரிசி மாவில் சிறிது சிறிதாக சேர்க்கவும் இடியாப்ப மாவு பதத்திற்கு தயார்படுத்தவும்.
4.   மாவை மீடியமா அளவிற்கு உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
5.   வாழை இலையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி மாவு உருண்டையை அதன் மேல் வைத்து கையினாலயே பரத்தவும்.
6.   அதில் ஒரு பெரிய ஸ்பூன் அளவிற்கு பூரணத்தை வைத்து மடிக்கவும். ஒரு புறத்தை மற்றொரு புறத்துடன் வைத்து மாவு ஒட்டிக்கொள்ளும்படி மடிக்கவும்.
7.   அதை இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவைக்கவும்.
8.   10 நிமிடம் கழித்து எடுக்கவும். இலையை திறக்கவும் .

சுவையான எலையாடை ரெடி. 


மிக அருமையான ஆரோக்கியமான இந்த ஸ்நாக்ஸ் -ஐ நீங்களும் செய்து பாருங்க. 

முபஷ்ஷரீனா அனுப்பிய 25 படங்களில் சில படங்களை மட்டும் தேர்வு செய்து  படங்களை  எடிட் செய்து அவருடைய பெயரை பதிவு செய்து பகிர்ந்திருக்கிறேன். அழகாக படிப்படியாக  படம் எடுத்து அதனை மெயில் செய்து செய்முறை எழுதி அனுப்ப அவர் எடுத்த சிரத்தையும் மிகவும் பாரட்டக்கூடியது.

எனக்கு ரெசிப்பி பெயரில் ஒரு சந்தேகம் வந்தது. இலையடையா அல்லது எலையாடையான்னு மெயில் செய்து கேட்டேன்.அதற்கு முபி, எங்கள்  வீட்டில் எலையாடை என்று தான் சொல்லுவோம் என்று தெரிவித்திருந்தார். 


நானும் கொஞ்சமாக செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. பக்குவமாக செய்ய வேண்டிய பதார்த்தம்.இனி அவருடனான கலந்துரையாடல் ;

ஆசியாக்கா,  என்னோட சமையல் குறிப்பையும் உங்கள் தளத்தில் பதிய இருப்பதற்கு ஜஸக்கல்லாஹ் க்ஹரைன். 

1. முபி, தங்களைப் பற்றி சுருக்கமாக சொல்ல முடியுமா தனிப்பட்ட திறமைகள் மற்ற பொழுது போக்கு அம்சங்கள் ?

 என் பெயர் செல்வி. S. முபஷ்ஷரீனா. சொந்த ஊரு கோயமுத்தூர்.

அக்கவுண்டண்டா வொர்க் பண்றேன்.  பொழுது போக்கு புத்தகங்கள் 

வாசிப்பது.  

2. சமையலில் எத்தனை வருட அனுபவம், தங்களின் ரோல் மாடல் யார் ?

 அனுபவம் 3 வருடம் தான். அம்மா தான் ரோல் மாடல்.

3. தங்களின் முதல் சமையல், அந்த முயற்சியில் நடந்த ஏதாவது சுவாரசியம் ?

     முதல் சமையல் UG முடிச்சதும் ஒரு முறை பருப்புச்சாறு ( குழம்பு ) வச்சேன். சாறு லாம் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சு ஆனால் காய்கறியெல்லாம் பெருசு பெருசா கட் பண்ணி போட்டுருந்தேன். அதை எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. பருப்பு குழம்புல துவரம் பருப்புக்கு பதிலா கடலை பருப்பை போட்டு குழம்பு வச்சுட்டேன். ( எனக்கு அப்போ துவரம் பருப்பு எதுனே தெரியாது :P )

4. தங்கள் குடும்பத்தினர் தங்கள் சமையலில் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள்.

     முட்டை கிரேவி, இட்லி குருமா, பரோட்டா, முட்டை பரோட்டா பூசணிக்கா ஹல்வா

     ஃப்ரெண்ட்ஸ் எப்போ மீட் பண்ணாலும் சிக்கன் கிரேவி, சில்லி சிக்கன் லாம் செஞ்சு கேப்பாங்க.

5. புதிதாக சமைக்க ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் டிப்ஸ்.

     சமைக்க ஆரம்பிக்கும் போது நல்லா வரணும்னு துவா செஞ்சுட்டு சமைக்க தொடங்குங்க.  ஆரம்பத்துல நிறைய தப்பா தான் வரும். வீட்ல இருக்குறவங்க கிண்டல் லாம் பண்ணதான் செய்வாங்க அதுக்காக அப்படியே விட்டுடாதீங்க திரும்ப திரும்ப முயற்சி செய்ங்க முதல்ல நம்ம வீட்ல எப்பவும் சமைக்கிற குழம்பு வகைகள், பொரியல் அதுலாம் முயற்சி செய்ங்க.  அப்புறம் நமக்கே ஒரு ஐடியா கிடைச்சிடும் அப்புறம் புது விதமா சமைக்கலாம். உப்பை எப்பவுமே குறைவா போடுங்க பத்தாட்டி திரும்ப கொஞ்சம் சேர்த்து போட்டுக்கங்க. 

6. தற்காலத்தில் வார இறுதியில் வெளியே செல்லுவது, அப்படியே ஹோட்டலில் சாப்பிடுவது என்பது ஒரு கலாச்சாரமாக ஆகிவிட்டதே ! உங்கள் கருத்து.

     நாங்க வெளில போறதும், ஹோட்டல்களில்  சாப்பிடுவதும் ரொம்ப குறைவு தான். வருஷத்துக்கு 2 முறை அதிக பட்சமா ஹோட்டல்ல சாப்பிட்டுருப்போம். வீட்லையே சமைச்சு சாப்பிடுறது தான் நம்ம ஆரோக்கியத்துக்கு நல்லது. ( வருமானத்துக்கும் அது தான் நல்லது :)  )

7. சமைத்து அசத்தலாமில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், குறிப்புக்கள் பற்றி சில வரிகள்.

     ஒவ்வொரு சமையலையும் பட விளக்கத்துடன் கொடுத்திருப்பது ரொம்ப பிடிச்சிருக்கு.  எளிமையா புரியவும் செய்யுது. முயற்சி செய்து பார்க்கும் போது ஈஸியா இருக்கு.   குறிப்புகள் நிறைய வித்தியாசமா இருக்கு அதுல வாழைக்காய் தோல் துவையல் ரொம்ப வித்தியாசமாபட்டுச்சு. தோலையும் வீணாக்காம செஞ்சுருந்த விதம் ரொம்ப பிடிச்சது நல்லா டேஸ்ட்டாவும் இருந்தது.  சட்னி அதிகமா (பெருக்கமா ) இருந்துச்சு. 

8. தங்களுக்கு வலைப்பூ ஆரம்பிக்கும் ஆர்வம் இருக்கிறதா? வரும்

 காலங்களில் எல்லோருக்கும் எப்படி ஒரு மெயில் முகவரி இருக்கிறதோ 

அது போல் வலைப்பூ இருப்பதும் சகஜமாகிவிடும் என்ற கருத்து 

நிலவுகிறதே ! நீங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாமே !

ஆர்வம் இருக்கு, ஆனால் அதை என்னால் சரியாக பராமரிக்க முடியாது 

என்பதால் ஆரம்பிக்கவில்லை.


மிக்க நன்றி, அருமையான பதில்கள், மீண்டும் சந்திப்போம் !

ஆர்வத்துடன் கலந்து கொண்ட செல்வி S. முபஷ்ஷரீனாவை வாழ்த்தி 

விடைபெறுவோம்.

அடுத்த வாரமும் மிகவும் சுவாரசியமான சிறப்பு விருந்தினரோடு 

உங்களைச்சந்திக்கிறேன்.

வரும் வாரம் வெள்ளியன்று நகைச்சுவைத் தென்றல் இல்லையில்லை

நகைச்சுவைச் சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தித்த கலக்கல்

அனுபவம்.காத்திருங்கள்.;) ! 


முக்கியக் குறிப்பு:

சிறப்பு விருந்தினர் பகுதிக்கு குறிப்பு  அனுப்பும் பொழுது  சுய 

அறிமுகம் முக்கியம்,  அத்துடன் அனுப்பும் குறிப்பின் ஒரு 

படம் அல்லது பல படங்கள் இணைத்து முதலில் மெயில் செய்யவும். 

குறிப்புகள் எனக்கு மெயிலில்  வரும் வரிசைப்படி பிரதி வாரம் 

வெள்ளியன்று  பகிரப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் 

கொள்கிறேன், இது வரை சிறப்பு விருந்தினர் பகுதிக்கு மெயில் செய்து 

விருப்பம் தெரிவித்தும், குறிப்புகளை அனுப்பியும் வரும் 

நட்புகள் அனைவருக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றி.

27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கலந்துரையாடல் அருமை...

முபஷ்ஷரீனா அவர்களுக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...

Asiya Omar said...

முதல் கருத்திற்கு நன்றியும் பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சியும் தனபாலன் சார்.

Menaga sathia said...

அழகான கலந்துரையாடல்...எலையாடை சூப்பரா இருக்கு!!

முபஷ்ஷரீனாவுக்கு வாழ்த்துக்கள்!!

சே. குமார் said...

வித்தியாசமான செய்முறை...

அனுப்பிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.

mubi jannath said...

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.

என்னோட குறிப்பையும் உங்க தளத்துல பகிர்ந்து கொண்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் ஜஸக்கல்லாஹ் க்ஹைரன்.ADHI VENKAT said...

அருமையான குறிப்பு...

குறிப்பை அனுப்பிய தோழிக்கு பாராட்டுகள்.

இதை ”இலையடை” என்ற பெயரில் கோவையில் கேரளத்தவர்கள் இல்லத்தில் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்...

தங்களுக்கு என்னுடைய குறிப்பு ஏதாவது அனுப்ப நினைத்துள்ளேன்... பார்க்கலாம்...:)

Shama Nagarajan said...

yummy akka

இளமதி said...

இன்றைய சிறப்பு விருந்தினர் முபஷ்ஷரீனா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

நல்லதொரு குறிப்பு! ஏறத்தாள எங்க ஊர்க் கொளுக்கட்டை போன்றது.
அதில் பாசிப்பருப்பு மட்டுமே நாம் சேர்ப்பதுண்டு!
அவர்களின் குறிப்பும் படங்களும் உங்கள் படமும் பார்க்கவே ஆவலைத்தருகிறது.
செய்து பார்ப்போம்.

நேர்காணலும் அருமை.
நல்லதொரு பகிர்விற்கு மிக்க நன்றி ஆசியா!

வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

மேனகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,வாழ்த்திற்கு நன்றி.

மிக்க நன்றி குமார்.மகிழ்ச்சி.

Asiya Omar said...

முபி வாங்க,பகிர்வுக்கு மீண்டும் நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஆதி வாங்க கருத்திற்கு மிக்க நன்றி.நீங்களும் கோவைக்காரங்களாச்சே! நிச்சயம் குறிப்பை அனுப்பி வையுங்கள்,மகிழ்ச்சி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஷாமா மிக்க நன்றி.தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

இளமதி வாங்க, ரசித்து பின்னூட்டமிடுவதற்கு மிக்க நன்றி பா. வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

ஸாதிகா said...

முபஷ்ஷரீனாவுக்கும்,அறிமுகப்படுத்திய ஆசியாவுக்கும் வாழ்த்த்துக்கள்.அருமையான ரெஸிப்பியுடன் ஒரு இனிப்பான பேட்டி.நன்ரு தோழி.

asha bhosle athira said...

வாழ்த்துக்கள். கொழுக்கட்டைக்கு இன்னொரு பெயர்...!!! இது ஒரு அழகான பெயரா இருக்கே...

Vimitha Anand said...

Ilai adai super akka...

Jaleela Kamal said...

எனக்கு ரொம்ப பிடிச்ச சூப்பர் ஸ்னாக்ஸ்..மொபி மிக அருமைமா

கோமதி அரசு said...

முபஷ்ஷரீனா அவ்ர்கள் செய்த இலைஅடை, எங்கள் அம்மா பிறந்த ஊரிலில்( திருவனந்தபுரம்) திரளி இலை என்று கிடைக்கும் அதில் கார்த்திகை மாதம் திருகார்த்திகைக்கு செய்வார்கள். திரளி இலை கொழுக்கட்டை என்று சொல்வார்கள்.
முபஷ்ஷரீனாவிற்கு வாழ்த்துக்கள். அவர் சொன்னது போல் சமையலில் உப்பு குறைத்து போட பழகி கொண்டால் மிகவும் நல்லது.
அள்வு குறைந்தால் வேண்டும் என்றால் போட்டுக் கொள்ளலாம், முதலில் உப்பு கூடி விட்டால் சரி செய்வது கஷ்டம்.
அருமையான கலந்துரையாடல்.
உங்கள் சிறப்பு விருந்தினர் பக்கத்திற்கு வாழ்த்துக்கள் ஆசியா.

வெங்கட் நாகராஜ் said...

இலையடை.....

நல்லா இருக்கு. சில கேரள விழாக்களில் சாப்பிட்டு இருக்கிறேன். இதில் பல வகைகளும் இருக்கிறது போல.....

உங்களுக்கும் குறிப்பினை பகிர்ந்த தோழிக்கும் வாழ்த்துகள்.

Asiya Omar said...

தோழி ஸாதிகா வருஅகிக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

வாங்க அதிராம்தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றி.

Asiya Omar said...

விமிதா வாங்க வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஜலீலா வாங்க, கருத்திற்கு மகிழ்ச்சி,நன்றி.

Asiya Omar said...

கோமதிக்கா தங்களின் பின்னூட்ட கருத்திற்கு மகிழ்ச்சி.தொடர் வருகைக்கு நன்றி.

சகோ வெங்கட் வாங்க, இது கிட்ட தட்ட மோதகம் போல் தாலன், சேர்க்கும் பொருளும் செய்யும் விதமும் சிறிது சிறிது ஊருக்கு தக்க மாறுபடுகிறது.கருத்திற்கு மகிழ்ச்சி.

இமா said...

லவேரியா போல இருக்கு. அதற்கு கடலைப்பருப்பு சேர்ப்பது இல்லை. சமண்டலை இலையில், கையால் தட்டாமல் இடியப்ப உரலில் பிழிந்து பூரணம் வைப்பார்கள்.

நல்ல மெல்லியதாகத் தட்டி இருக்கிறார் முபஷ்ஷரீனா. படங்கள் எல்லாம் நேர்த்தியாக எடுத்து இருக்கிறார். இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

Saratha said...

முதலில் அனுப்பிய சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.உங்கள் கலந்துரையாடலும் மிக அருமை.இதை எங்கள் பகுதியில் ஓலைக்கொழுகட்டைக்குப்பதில் வாழை இலையில் வைத்து இதே முறையில் செய்வோம்.அருமையான குறிப்பு.

Asiya Omar said...

இமா வருகைக்கு நன்றி,ஆமாம் முபஷ்ஷரீனா மிக அழகாக பக்குவமாக செய்திருக்கிறார்.
பார்த்தவுடன் எடுத்துச் சாப்பிடச் சொல்கிறது.கருத்திற்கு மகிழ்ச்சி.

Asiya Omar said...

சாரதா அக்கா வாங்க,தொடர் கருத்திற்கு நன்றி மகிழ்ச்சி.

vanathy said...

Nice recipe.

Asiya Omar said...

வானதி வாங்க, வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.