Tuesday, November 26, 2013

உளுந்தஞ்சோறு + வரகொத்தமல்லித் துவையல் / Black gram Rice / Coriander Seed Thuvaiyal

நெல்லை கிராமப் புறங்களில் பாரம்பரியமாக சமைத்துப்  பரிமாறும் உளுந்தஞ்சோறும் வர கொத்தமல்லித்துவையலும்.


உளுந்தஞ்சோறு:

தேவையான பொருட்கள்;
புழுங்கல் அரிசி - 1 கப்
கருப்பு உடைத்த உளுந்து - அரை கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
(விரும்பினால் - 8 சிறிய பூண்டு பற்கள்)
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவைக்கு
நல்ல எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

விரும்பினால் சீரகம்,பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.எனக்கு இந்த குறிப்பை சொல்லி தந்த அன்புத்தோழி திருமதி உமா சங்கர்  பூண்டு, சீரகம்  சேர்க்காமல் தான் செய்வார்களாம்.

செய்முறை:
உடைத்த கருப்பு  உளுந்தை லேசாக சிவறாமல் மணம் வரும் படி வெதுப்பி வைக்கவும்.வறுக்காமலும்  சேர்க்கலாம்.
அரிசியை களைந்து கொள்ளவும்.
 ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.

 அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.விரும்பினால் அதிகமாக அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நான் மூனரை கப் தண்ணீர் வைத்தேன்.
 தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.பூண்டு விரும்பினால் சேர்க்கவும்.
 தேவைக்கு உப்பும் சேர்த்து கலந்து விடவும்.
 கொதி வரும் பொழுது குக்கரை மூடி மீடியம் நெருப்பில் இரண்டு விசில் வைத்து,சிம்மில் 5 நிமிடம் வைத்து  அணைக்கவும்.
 ஆவியடங்கியவுடன் திறந்தால் இப்படி இருக்கும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து சூட்டோடு பிரட்டி விடவும்.


சுவையான சத்தான உளுந்தஞ்சோறு ரெடி.சூப்பராக இருக்கும் செய்து பாருங்க.அதற்கு காம்பினேஷன்  அவியல் குழம்பும், வர கொத்தமல்லித்துவையலுமாம்.என்னைக் கேட்டால் சும்மாவே சாப்பிடலாம் அல்லது துவையல் மட்டும் போதும்.அத்தனை ருசி.

வர கொத்தமல்லித்துவையல்:
 முழு கொத்தமல்லி விதை - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:
ஒரு வாணலியில் 2 துளி எண்ணெய் விட்டு வற்றல,கொத்தமல்லியை சிவக்க வறுக்கவும்,


 தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிது வறுக்கவும்.


 மிக்ஸி சிறிய ஜாரில் வறுத்தவைகளுடன், தேவைக்கு புளி உப்பும் சேர்த்து முதலில் சிறிது பொடிக்கவும்.பின்பு தேவைக்கு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

 சுவையான சத்தான வரகொத்தமல்லித் துவையல் ரெடி.

இதனை ஃப்ரிட்ஜில் அரைத்து வைத்து தேவைக்கு எடுத்து சாப்பிடலாம். கைபடாமல் எடுத்து உபயோகித்தால் .10 நாட்கள் கூட கெடாமல் இருக்கும்.

 பாரம்பரியமாக நெல்லை சுற்று வட்டார கிராமங்களில் உளுந்தஞ்சோறு வரகொத்தமல்லித் துவையல் மிகவும் பிரசித்தம்.
நீங்களும் செய்து அசத்துங்க.வீட்டில் உள்ளவர்களுக்கு நிச்சயம் செய்து கொடுங்க.
எங்க ஊர் பக்கம் வயல் வெளிகளில் விளைச்சல் வருடத்திற்கு நெல் இரண்டு முறை,உளுந்து அல்லது பாசிப்பயறு ஒரு முறை என்ற பயிர் சுழற்சி இருப்பதால் ,அரிசி,உளுந்து பாசிப்பருப்பு சேர்த்த உணவுகள் அதிகம் இருக்கும். டயபடீஸ் உள்ளவங்க கூட இது சாப்பிடலாம். மிகவும் நல்லது. முக்கியமாக பெண்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

பின் குறிப்பு:

இது என் தோழி திருமதி உமா சங்கரின் குறிப்பு. நிச்சயம் அவர்களை என் சிறப்பு விருந்தினர் பகுதியில் சந்திக்கும் பொழுது நட்பின் விபரம் தெரிந்து கொள்வோம்.

27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் செய்முறை விளக்கங்களுக்கு நன்றி சகோதரி...

Menaga sathia said...

உளுந்துசோறு பிடித்தமான ஒன்று,இதுக்கு காரகுழம்பு சேர்த்துதான் சாப்பிட்டிருக்கேன்,கொத்தமல்லி துவையல் சேர்த்து ஒரு நாள் சமைக்கிறேன்..

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே தோழி..வர கொத்துமல்லி துகையல் உடனே செய்து பார்த்து விடவேண்டும்.

ADHI VENKAT said...

சிறப்பான ரெசிபி. இதுவரை செய்து சாப்பிட்டதில்லை.... பகிர்வுக்கு நன்றிங்க.

Asiya Omar said...

தனபாலன் சார் வழக்கம் போல் முதல் வருகைக்கு மிக்க நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

மேனகா நிச்சயம் செய்து பாருங்க.அருமையாக இருக்கும்.

ஸாதிகா வாங்க,கருத்திற்கு நன்றி. இந்த துவையல் பருப்பு சோறு மற்றும் எல்லா வெரைட்டி ரைஸ்க்கும் சூப்பர் காம்பினேஷன்,கட்டுச் சோறுக்கு எடுத்துச் சென்றால் கெடவே கெடாது நல்லதும் கூட..

வை.கோபாலகிருஷ்ணன் said...

புதுமை - அருமை - ருசியோ ருசி. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Saratha said...

உளுந்து சோறு மிகவும் பிடித்தமான ஓன்று.நானும் அடிக்கடி செய்வேன்.

Shama Nagarajan said...

super traditional recipe akka

Aruna Manikandan said...

I prepare it monthly once akka , love it a lot :)

Sharanya palanisshami (sara's TASTY BUDS) said...

healthy rercipe............

அமைதிச்சாரல் said...

உளுந்தஞ்சோறு, தீயல், முட்டை அடை, கொத்தமல்லித்தொவையல் செம காம்பினேஷனா இருக்கும்.

இளமதி said...

பார்த்தாலே பசி தீருமென்பார்கள்.
இங்கு பசி இன்னும் அதிகமாகிறது ஆசியா!...:)

துவையல் அடிக்கடி நானும் இதுபோலவே செய்வதுண்டு. ஆனால் இந்த உழுத்தஞ்சோறு... ஸ்.. அற்புதமா இருக்கே...
மணமும் சுவையும் செய்யாமலே தெரிகிறது!.

செய்ய பார்க்க வேண்டிய லிஸ்டில் சேர்த்துகொண்டேன். அருமை!

நன்றியும் வாழ்த்தும் ஆசியா!

Kalpana Sareesh said...

wonderful recipes.. i love to make tis one..

Asiya Omar said...

ஆதி வெங்கட் வாங்க,மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க.

வை.கோ சார் உங்கள் கருத்திற்காகவே வெஜ் ரெசிப்பிஸ் பகிர ஆசை.நன்றி.

கருத்திற்கு மிக்க நன்றி சாரதா அக்கா.

மிக்க நன்றி ஷாமா.

Asiya Omar said...

அருணா கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

மிக்க நன்றி சரண்யா.

அமைதிச்சாரல் வாங்க,ஆமா நீங்க சொன்னது போல் செம டேஸ்ட் தான்.

Asiya Omar said...

இளமதி வாங்க, கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

கல்பனா கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

asha bhosle athira said...

ஆஹா இரண்டுமே புது விதமாக இருக்கு. கொத்தமல்லித் துவையல் நிட்சயம் செய்து பார்க்கப் போகிறேன்ன்... பார்க்கவே சூப்பராக இருக்கு.

சே. குமார் said...

படங்களுடன் விளக்கம் அருமை...
இந்த வாரம் செய்து பார்க்கணும்...

priyasaki said...

வித்தியாசமான,ஆனா நல்ல சத்தான ரெசிப்பி ஆசியா.

Savitha Ganesan said...

enga amma, uluthangali nu solvanga. looks so yumm

கோமதி அரசு said...

உங்கள் குடுமபத்தில் எல்லோருக்கும் பிடித்த உளுந்தஞ்சோறு.
செய்முறை விளக்கம் அருமை.
துவையலுக்கு தேங்காய் இல்லாமலும் செய்யலாம். தேங்காய் இல்லாத துவையல் வெகு நாட்கள் கெடாமல் இருக்கும் எங்கள் வீடுகளிலும் இரண்டும் செய்வோம், சிலர் எள் , மிளகாய் வறுத்து தேங்காய் , புளியுடன் துவையல் அரைப்பார்கள்.

கோமதி அரசு said...

எங்கள் பக்கம் பெண் வயதுக்கு வந்து விட்டால் இடுப்புக்கு பலம் என்று அடிக்கடி இந்த சாதம் செய்து கொடுப்பார்கள்.
உளுந்தம் களி, உளுந்தவடை, உளுந்தம் புட்டு என்று உளுந்து நிறைய சேர்த்துக் கொள்ள சொல்வார்கள் பெரியவர்கள்.

Asiya Omar said...

அதிரா வாங்க, நிச்ச்யம் செய்து பாருங்க.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

குமார் நிச்சயம் செய்து பாருங்க,வருகைக்கு நன்றி.

ப்ரியசகி கருத்திற்கு மிக்க நன்றி.

சவீதா கருத்திற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

கோமதியக்கா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

Kanchana Radhakrishnan said...

பகிர்வுக்கு நன்றி

Asiya Omar said...


//Seethaalakshmi Subramaniam அவர்களின் கருத்து ஃபேஸ் புக் பகிர்வில் //

அருமையாக செய்து காட்டியிருக்கீங்க.உளுத்தம்பருப்பு சாதம் - பூப்பெய்திய பெண்களுக்கு மாமன்/அத்தை முறை உள்ளவர்கள் செய்து தருவார்கள். மாதம் ஓரிரு முறை வீட்டில் அவசியம் செய்து தருவார்கள். இடுப்பு எலும்பு, கருப்பை பலம் பெறும் என்று பெரியவங்க சொல்வாங்க. இத்துடன் அவியல்/தேங்காய்த் துவையல், கீரைத் துவட்டல் என்று சைட் டிஷ் இருக்கும். தேங்காய்த் துவையலும் நல்லெண்ணெயும் சேர்த்துப் பிசைந்து, அப்பளம்/கூழ் வடகம் தொட்டுக் கொண்டு சாப்பிட - ருசியோ ருசி!

Asiya Omar said...

மிக்க நன்றி காஞ்சனா ராதா கிருஷ்ணன்.

மிக்க நன்றி சீதாலஷ்மி அக்கா.