Tuesday, November 5, 2013

சிக்கன் குருமா / Chicken Kurma


தேவையான பொருட்கள்;
சிக்கனில் ஊற வைக்க:
அரைக்கிலோ சிக்கன்
 நன்கு சுத்தம் செய்து 3 தண்ணீர் விட்டு அலசி எடுக்கவும்.மஞ்சள் தூள் போட்டு,தண்ணீர் சேர்த்து மீண்டும் அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.
தயிர் - அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
சேர்த்து ஊற வைக்கவும்.

தேவையான பொருட்கள்; 
எண்ணெய் -  3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6 ( காரம் அவரவர் விருப்பம்)
விரும்பினால் தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் - அரைடீஸ்பூன்
குருமாத்தூள்/ குருமா மசாலா - 1 டேபிள்ஸ்பூன் ( வெள்ளை குருமாத்தூள்/ குருமா மசாலா இல்லாதவர்கள் தனித்தனியாக தூள் வகைகளை சேர்க்கலாம்.
 மல்லித்தூள் - 1டீஸ்பூன், சீரகத்தூள் - அரைடீஸ்பூன்,சோம்புத்தூள் - அரை - 1 டீஸ்பூன்,வெள்ளை மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்.
மல்லி புதினா நறுக்கியது - சிறிது

அரைக்க:
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 8

பரிமாறும் அளவு - 5-6 நபர்கள்.

 குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும், நெருப்பை சிம்மில் வைத்து மீண்டும் வதக்கவும், கீறிய பச்சை மிளகாய் நறுக்கிய புதினா, மல்லி இலை சேர்க்கவும்.விரும்பினால் ஒரு சிறிய தக்காளி சேர்க்கலாம்.நன்கு வதக்கவும்.ஊற வைத்த சிக்கன் சேர்க்கவும். பிரட்டி விடவும்.
 குருமத்தூள் சேர்க்கவும் அல்லது தனித்தனியாக மேலே குறிப்பிட்ட தூள் வகைகளை சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.
 தேவைக்கு 1 கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கர் என்றால் 2 விசில் வரவும் அடுப்பை அணைக்கவும். பாத்திரம் என்றால் மூடி போட்டு மீடியம் நெருப்பில் 15 நிமிடம் வேக விடவும்.

 சிக்கன் வெந்த பின்பு அரைத்த தேங்காய் முந்திரி கசகசா விழுது சேர்க்கவும்.
 தேவைக்கு மீண்டும் ஒரு கப் அல்லது சிக்கன் துண்டுகள் மூழ்கும் அளவு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

உப்பு சரி பார்க்கவும்.
 நன்கு கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலே வரும்.
 நறுக்கிய மல்லி இலை தூவவும். பரிமாறவும்.
சுவையான சிக்கன் குருமா ரெடி.




நெய்ச்சோறு,ஆப்பம்,பரோட்டா,சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

10 comments:

Saratha said...

இந்த வாரம் நல்ல அசைவமா போட்டு அசத்துதீங்க!

madhu said...

adu yenna kurma thool?

Asiya Omar said...

சாரதா கருத்திற்கு மிக்க நன்றி.

மாது எங்க ஊர் கடைகளில் கிடைக்கும் குருமா மசாலாத்தூள் தான், நான் இந்த ரெசிப்பியில் உபயோகிக்க குறிப்பிட்ட மசாலா பொருட்கள் சேர்ந்தது தான். கருத்திற்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

ஜூப்பருங்க..

Priya Suresh said...

Parottakuda chicken kurma, intha combination yennoda favourite.

ஸாதிகா said...

சிக்கனுடன் நெய்சோறையும் காட்டி வாயூறசெய்து விட்டீர்கள் ஆசியா.

S.Menaga said...

பரோட்டாவுக்கு சூப்பர்ர்ர் ஜோடி....

Vimitha Anand said...

Super one for parotta akka...

Malar Gandhi said...

I love kormas, they are best to pair with ghee rice and rotis. I fix them quite often...but with canned coconut milk. :( If I ever get a chance to find good coconuts here, will follow your recipe for sure.

nafeesa said...

Looks yummmm..but i think u forgot to give quantity of chicken...sis