Monday, November 4, 2013

ஈசி முட்டை கறி / Easy Egg Curry


தேவையான பொருட்கள்;
அவித்த முட்டை - 3
வெங்காயம் - பாதி
தக்காளி -1
முந்திரி பருப்பு - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி.கருவேப்பிலை - சிறிது.

பரிமாறும் அளவு - 3 நபர்கள்

செய்முறை:
முந்திரி, வெங்காயம் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து பாதியாக கட் செய்தோஅல்லது கீறியோவிட்டு எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விடவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலை சேர்க்கவும்.
நன்கு சிம்மில் வதங்கட்டும்.
அரைத்த விழுது சேர்க்கவும், நன்கு வதக்கவும்.
மசாலா பொருட்கள் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.மீண்டும் வதக்கவும்.கால் கப் தண்ணீர் சேர்த்து கொதித்து மசாலா வாடை மடங்கட்டும். .சிம்மில் வைக்கவும்.எண்ணெய் மேலே வரும்.
அவித்த முட்டை சேர்த்து பிரட்டி விடவும்,நறுக்கிய மல்லி இலை தூவவும்.பரிமாறவும்.
சுவையான ஈசி முட்டை கறி ரெடி.

அவசரத்திற்கு சாதம் சப்பாத்தியுடன் பரிமாற இதை செய்து அசத்தலாம்.
கிரேவி அதிகம் வேண்டுமென்றால் மசாலா, வெங்காயம் தக்காளியை டபுள் ஆக்கி கொள்ளவும்.



8 comments:

Snow White said...

arumai ..... enakku romba pidikum

Shama Nagarajan said...

delicious akka

திண்டுக்கல் தனபாலன் said...


அருமை... நன்றி சகோதரி... வாழ்த்துக்கள்...

Savitha Ganesan said...

Super akka. Avasarathukku nalla curry.

Mahi said...

முந்திரிப்பருப்பும் வெங்காயம், தக்காளி அரைச்சு விட்டா ருசி சூப்பரா இருக்குமே! நல்ல குறிப்பு ஆசியாக்கா!

சே. குமார் said...

நல்ல குறிப்பு அக்கா.

Saratha said...

நானும் இதே முறையில் தான் செய்வேன்.நல்ல குறிப்பு.

ஸாதிகா said...

நைட் டின்னருக்கு நல்லதொரு சைட் டிஷ்..