Saturday, November 9, 2013

பச்சை மிளகாய் சட்னி / Green Chillie Chutney

 தேவையான பொருட்கள்;
பச்சை மிளகாய் - 10
பூண்டு - 4 சிறிய பல்
நல்ல எண்ணெய் - 1 -2 டீஸ்பூன்
உப்பு,புளி தேவைக்கு.

செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்,பூண்டு,புளி,உப்பு  அம்மியில் வைத்து நைசாக அரைக்கவும் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பூண்டு வாடை அதிகம் பிடிக்காதவர்கள் 2 பல் மட்டும் சேர்த்து அரைக்கலாம்.
 அரைக்கும் பொழுது தேவைப்பாட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
 அரைத்ததை வழித்து வைக்கவும்.
 அதனுடன் நல்ல எண்ணெய் சேர்ந்து கலந்து கொள்ளவும்.

சுவையான சுர் சுர்  பச்சை மிளகாய் சட்னி ரெடி.
ஆவி பறக்கும் சூடான இட்லியுடன் பரிமாறவும்.

என்னுடைய தோழி திருமதி உமா சங்கரிடம் ஏதாவது ஈசி சட்னி ரெசிப்பி சொல்லுங்கன்னு கேட்டேன்.அவங்க சொல்லி தந்த சட்னி தான் இது.அவங்க வீட்டு குட்டீஸ் இதனை டேஞ்சர் சட்னின்னு சொல்லுவாங்களாம்.ஆனாலும் இந்த இட்லியுடன் நாலு இட்லி சாப்பிடறவங்க கூட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவாங்களாம்.முயற்சி செய்து பாருங்க.அப்படியே சூடான இட்லி நல்ல எண்ணெய் இந்த மிளகாய் சட்னி சும்மா சுர்ருன்னு இருக்கும்.இது நெல்லை ஸ்பெஷலாக்கும்.
வெங்காய சட்னி குறிப்பிற்கு இங்கு கிளிக்கவும்.


12 comments:

S.Menaga said...

இன்னும் நாலு இட்லி கூட சாப்பிடலாம்.நான் இதனுடன் சின்ன வெங்காயம் -2 சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து செய்வேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல காரசாரமான சுள்ளென்று உறைக்கும் பதிவு.

உரைத்தவிதம் அருமை.

பாராட்டுக்கள்.

வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

Amuds said...

Gonna try this:))
Www.cookndine.blogspot.in

Amuds said...

Gonna try this:)))
Www.cookndine.blogspot.in

சே. குமார் said...

ஆஹா... நாலு இட்லி சேர்த்துப் போகும் போல...
அருமை அக்கா.

அமைதிச்சாரல் said...

வாசிக்கும்போதே கண்ணுல மூக்கு வாயிலிருந்தெல்லாம் தண்ணீர் வடிகிற உணர்வு :-))

செம காரமா இருக்கும் போலிருக்கே. நான் கண்ணால மட்டும் சாப்பிட்டுக்கறேன் :-)

Jaleela Kamal said...

karamaka irukkumoo?

Asiya Omar said...

மிக்க நன்றி மேனகா.

மிக்க நன்றி வை.கோ சார்.

மிக்க நன்றி அமுதா. செய்து பாருங்க.

மிக்க நன்றி சே,குமார்.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.செம காரம் தான்.

ஜலீலா நான் இந்தியன் சில்லீஸ் உபயோகிக்கலை, ஒமான் சில்லி தான் எப்பொழுதும் வாங்குவேன்.அது நம்ம ஊர் சில்லி அளவு காரம் இல்லை.வருகைக்கு நன்றி.

Snow White said...

arumai ..inakkuthan karama ethavathu sapidanum pola irukkennu ninachen .ninga alaga oru recipe sollitinga ....try panni parthudavendiyathu than ...

ஸ்வர்ணரேக்கா said...

semma kara chuttney... kandipa try panuven..

வெங்கட் நாகராஜ் said...

படிக்கும்போதே கண்ணுல தண்ணி வர மாதிரி ஒரு ஃபீலிங்!..

இங்கே ஹரியானாவிலும், ராஜஸ்தானிலும் சப்பாத்தியுடன் வெறும் பச்சை மிளகாய் வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். ஓரிரு முறை நானும் முயற்சி செய்து திண்டாடியிருக்கிறேன்! :)

Sahasra Recipes said...

Looks different. Nice combo for idlis. Thanks for linking.