Sunday, November 10, 2013

கடாய் மட்டன் / பீஃப் / Kadai Beef / Mutton

 தேவையான பொருட்கள்;
கலந்து ஊறவைக்க:
மட்டன் அல்லது பீஃப் - 400 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

தாளித்து தயார் செய்ய:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகு,சீரகம்,பெருஞ்சீரகம் தூள் - தலா அரைடீஸ்பூன்
தக்காளி - 1
கொடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.
வெங்காயம்,தக்காளி,கொடைமிளகாய் நறுக்கி வைக்கவும்.

கறியை  கொழுப்பு நீக்கி சிறிய துண்டுகளாக்கி நன்கு  3-4  தண்ணீர் வைத்து அலசி தண்ணீர் வடிய விட்டு வைக்கவும்.பின்பு ஊற வைக்க மேற் சொன்னபொருட்கள் சேர்த்து 1 மணி நேரம் கலந்து  வைக்கவும்.
 குக்கரில் கறியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு வேக வைக்கவும்.உப்பு அளவாய் சேர்க்கவும். வெந்து வற்றி வரும் பொழுது சரியாக இருக்கும்.
 வேக வைத்த கறியில் தண்ணீர் ஊறியிருந்தால் வற்ற வைக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்.
வெங்காயம் கருவேப்பிலை,கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 கறியை சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும்.

 மிளகு,சீரகம்,சோம்பு தூள்களை சேர்க்கவும்.நன்கு சிம்மில் வைத்து வதக்கவும்.
 நறுக்கிய கொடை மிளகாய், தக்காளி சேர்க்கவும். உப்பு தேவை என்றால் சிறிது சேர்க்கவும்.
 நன்கு ஒரு சேர பிரட்டி மூடி போட்டு சிம்மில் ஒரு நிமிடம் வைக்கவும்.தக்காளி, கொடைமிளகாய் ஓரளவு வெந்து விடும்.பிரட்டி பரிமாறவும்.

சுவையான கடாய் பீஃப்  அல்லது கடாய் மட்டன் ரெடி.

இதனை சப்பாத்தியில் ரோல் செய்து லஞ்ச் பாக்ஸ் கொடுத்து விடலாம்.ஃப்ரைட் ரைஸ் உடன் சாப்பிடலாம். அல்லது பருப்பு,சாம்பார்,குழம்பு வகைகள்,ரசம், வெரைட்டி ரைஸ்க்கு சைட் டிஷாக பரிமாறலாம்.

7 comments:

Priya Suresh said...

Super kadai mutton dish akka, mouthwatering here..

Snow White said...

super recipe... looks yummy

Snow White said...

super recipe... looks yummy

சே. குமார் said...

ரெசிபி அருமை...
மட்டன் செய்து பார்க்கலாம் அக்கா...

Shama Nagarajan said...

inviting mutton akka

athira said...

சூப்பர்... பார்த்ததும் செய்யத் தூண்டுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

கடாய் பன்னீர் மாதிரி போல இது!